×
 

இணையத்தில் லீக்-ஆன ரஜினியின் ‘கூலி’ படத்தின் கதை...! படக்குழுவை பதறவைத்த அதிர்ச்சி சம்பவம்..!

நடிகர்  ரஜினியின் ‘கூலி’ படத்தின் கதை இணையத்தில் லீக்-ஆனதாக செய்திகள் வருகின்றன.

ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரது கூட்டணியில் உருவாகி இருக்கக்கூடிய திரைப்படம் தான் ‘கூலி’. தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தில், நாகார்ஜூனா, உபேந்திரா, சோபின் ஷாஹிர், சத்யராஜ், சுருதி ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். மேலும் சமீபத்தில் வெளியான பாடலான 'மோனிகா' பாடலில் பூஜா ஹெக்டே சிறப்புத் தோற்றத்தில் நடனம் ஆடியுள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தின் கதை தொடர்பான தகவல்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. அதன்படி, ரஜினிகாந்த் நடித்திருக்கும் கதாப்பாத்திரம் ஒரு பெரிய கேங்ஸ்டர் கதாப்பத்திரமாம். வாழ்க்கையில் அவர் செய்த தவறுகளை சீர்செய்ய அவர் முயற்சிக்கிறார். பின்பு கடந்த காலத்தில் இருந்த தனது கொடூரமான எதிரிகளை முறியடித்து, பழிவாங்கி, பின்னர் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்கும் கதையாக இப்படம் அமைந்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளதோடு, சமூக வலைதளங்களில் படத்தின் கதையைப்பற்றி பலரும் தங்கள் கருத்துக்களை இணையத்தில் பகிர செய்து வருகிறார்கள். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்டைலில் உருவான அட்டகாசமான அதிரடியான கேங்ஸ்டர் கதையா?”அல்லது " இது லோகேஷ் யூனிவர்ஸில் உள்ள ஒரு முக்கியமான தொடர் கதையா?" என பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் தொடர்ந்து  எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், இணையத்தில் பரவும் கதை தொடர்பான தகவலுக்கு படக்குழுவினரிடம் இருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ பதிலும் இதுவரை வெளியாகவில்லை. கதை பற்றிய இந்த வெளியீடு  உண்மையான ‘லீக்’தானா, அல்லது ரசிகர்களின் கற்பனையா என்பதும் இன்னும் தெரியவில்லை. ஆனாலும், படம் குறித்த எதிர்பார்ப்பும், பரபரப்புகள் மட்டும் நாளடைவில் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதே தவிர குறைந்தபாடில்லை.

இதையும் படிங்க: “லியோவில் என்னை வீணடித்துவிட்டார்” – சஞ்சய்தத்தின் கருத்து விமர்சனத்துக்கு லோகேஷ் கனகராஜ் பதிலடி..! 

மேலும், லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களை போலவே, இந்த படம் 'லோகேஷ் சினிமா யூனிவர்ஸ்’ (LCU)-ல் இணைந்ததா என்பதையும் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்துக்கிடக்கின்றனர். ஆகவே ரஜினிகாந்தின் நடிப்பும், லோகேஷின் இயக்க திறமையும் ஒன்றாக சேர்ந்திருக்கும் இந்த ‘கூலி’ திரைப்படம், தமிழ்த் திரைப்பட உலகத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. இதன் டிரெய்லர் வெளியாகும் நாள் வரை, கதை தொடர்பான இந்த வைரல் தகவல்கள் உண்மைதானா? என்பதற்கான பதிலும் வெளிவராது.

எனவே இப்படம், ரசிகர்களுக்கு ஒரு புது மாறுபட்ட கேங்ஸ்டர் அனுபவத்தை தரப்போகிறது என்பதை மட்டும் நிரூபித்து இருக்கிறது.
 

இதையும் படிங்க: பிளாக் பஸ்டர் ஹிட் கொடுக்கும் "கூலி"..! புது தளபதி-யை காண தயாரா.. நெகிழ்ச்சியில் ரஜினி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share