×
 

'விடாமுயற்சி' பாடல் இசையில் உருவான 'மோனிகா' பாடல்...! இரண்டுமே ஒண்ணுதான்.. மீண்டும் அனிரூத் மீது காப்பி சர்ச்சை..!

'விடாமுயற்சி' பட பாடலும் 'மோனிகா' பாடல் இசையும் ஒண்ணுதானாம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய படம் என்றால் அதுதான் ‘கூலி’. இப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இப்படம் ஒரு விறுவிறுப்பான மாஸ் மற்றும் ஆக்‌ஷன் படம் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் இசையை பிரபல இசையமைப்பாளரான அனிரூத் ரவிச்சந்தர் அமைத்துள்ளார். இதற்கு முன்னதாக, கடந்த மாதம் இப்படத்தில் இடம்பெற்ற 'சிக்கிட்டு' என்ற பாடல் வெளியானது. அந்த பாடலில் இசையமைப்பாளர் அனிருத், பாடலாசிரியர் அறிவு மற்றும் மல்டி டேலண்ட் டி. ராஜேந்தர் ஆகியோர் நடனமாடியிருந்தது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு அந்த பாடல் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கவில்லை என்று தான் சொல்லமுடியும். ஏனெனில் அப்பாடல் சமூக வலைதளங்களில் மிதமான வரவேற்பையே பெற்றது. இந்த சூழலில், ‘கூலி’ படத்தின் இரண்டாவது சிங்கிளாக ‘மோனிகா’ என்ற பாடல் சமீபத்தில் சன்பிக்சர்ஸ் இணையதளம் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. ப்ரம்மாண்டமான செட் மற்றும் வண்ணமயமான காட்சிள் அடங்கிய இந்த பாடலில் பிரபல நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடனமாடியுள்ளார். இப்பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இப்பாடல் வெளியானவுடன் யூடியூபில் வேகமாக பரவியத்துடன் டிரெண்டிங்கிலும் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. சிறந்த தாளம், வசீகரிக்கும் இசை அமைப்பு மற்றும் நவீன நடன பாங்கில் பூஜா ஹெக்டே என அனைத்தும் ரசிகர்களை வசீகரித்துள்ளது. லிரிக்ஸ் மற்றும் வீடியோ சாங் இரண்டும் ரசிகர்களிடையே தற்பொழுது வைரலாக பரவி வருகிறது.

இந்த பாடலுக்கான இசையை அனிருத் அமைத்திருக்கிறார். இவர், தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். எனினும், சமீபத்திய ஆண்டுகளில் அவருடைய பாடல்களில் ஒரிஜினாலிட்டி சற்று குறைந்து வருகிறது எனும் விமர்சனங்களும், காப்பி சர்ச்சைகளும் தொடர்ந்து எழுந்துவருகின்றன. அந்த வகையில் தான் தற்பொழுது வெளியான ‘மோனிகா’ பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தாலும், சமூக வலைதளங்களில் சில நெட்டிசன்கள், இந்த மோனிகா பாடல் அனிருத் இதற்கு முன்னர் இசையமைத்திருந்த ‘விடாமுயற்சி’ படத்தில் இடம்பெற்ற ‘சாவடீக்கா’ பாடலின் தாளம் மற்றும் இசை கலந்து இருப்பதை போல இருப்பதாகவும் இரண்டு இசைகளும் ஒத்ததாக இருக்கிறது என குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனால், “அனிருத் இப்போது தனது சொந்த பாடலையே மீண்டும் மாற்றியமைத்து வழங்குகிறார்” என்ற விமர்சனங்கள் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளன. இது, ஒரு வகையில் சொல்லப்போனால் சுய-காப்பி என்ற விவாதத்தையும் சமூக வலைதளங்களில் கிளப்பியுள்ளது. ரசிகர்கள், “புதியதோர் இசையமைப்பை எதிர்பார்த்தோம், ஆனால் பழைய இசையை மாற்றியமைத்து கொடுத்திருக்கிறார்” என கூறி அவர் மீது தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: பான் இந்தியா ஸ்டாராக வலம் வந்த நடிகை சரோஜா தேவி..! சரித்திரத்தில் இடம்பிடித்த சாதனை பெண்ணின் வாழ்க்கை வரலாறு..!

அதே நேரத்தில், அனிருத் ரசிகர்கள் பலரும் இந்த விமர்சனங்களை மறுத்து, “இது ஒரு ஸ்டைலிஷ் ரீஇமேஜினிங், இசையில் ஒரு continuing motif மட்டுமே” என சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, மோனிகா பாடல் இளைய தலைமுறையை பெரிதும் கவர்ந்துள்ளதாக பலர் பதிவிட்டு இருக்கின்றனர். இப்படி இருக்க, ‘கூலி’ திரைப்படம், ரஜினிகாந்தின் பாணி, லோகேஷ் கனகராஜின் இயக்கம் மற்றும் அனிருத் இசை என ஒரு பவர்-பேக்‌ கூட்டணியாக உருவாகியுள்ளது. படத்தின் டீசர் ஏற்கனவே அதிகம் பார்வைகள் பெற்று, ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. இதில் ரஜினி மாஸ் அவதாரத்தில், பழைய கால ‘பாஷா’ பாணியில் திரும்பியுள்ளார் என்பது தான் பலரது மகிழ்ச்சிக்கு காரணமாக உள்ளது. இந்நிலையில், ‘மோனிகா’ பாடல் வெற்றியும், அதனை சுற்றியுள்ள சர்ச்சைகளும் படம் வெளியாகும் நேரத்தில் எந்தளவிற்கு தாக்கம் ஏற்படுத்தும் என்பது படத்தின் ரிலீஸ் பொறுத்தே தெரியவரும். ஆகவே ‘கூலி’ படத்தில் வெளியான ‘மோனிகா’ பாடல் ரசிகர்களிடம் வெகுவாக வரவேற்கப்பட்டாலும், அனிருத் மீதான இசை ஒரிஜினாலிட்டி குறித்த விமர்சனங்கள் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ளன.

அதே நேரத்தில், இப்பாடல் யூடியூப் மற்றும் ஸ்பாட்டிபை போன்ற தளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், இசையின் வணிக வெற்றியை யாராலும் மாற்ற முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

இதையும் படிங்க: #BREAKING: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share