பான் இந்தியா ஸ்டாராக வலம் வந்த நடிகை சரோஜா தேவி..! சரித்திரத்தில் இடம்பிடித்த சாதனை பெண்ணின் வாழ்க்கை வரலாறு..!
அனைவரது கனவு நாயகியான நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு.
தமிழ் சினிமாவின் பொற்காலத்தை பிரதிபலிக்கும் அதிசய நடிகைகளில் மிகவும் முக்கியமாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை பி. சரோஜா தேவி. நடிகைகளில் மிகவும் முக்கிய மற்றும் மூத்தஸ்தானத்தில் வைத்து பார்க்கப்பட்ட நடிகை சரோஜா தேவி இன்று இந்த உலகை விட்டு பிரிந்து சென்றாலும் அவரது புகழ் இந்த மண்ணை விட்டு என்றும் பிரிந்து செல்லாது. அதற்கு உதாரணமாக வாழ்ந்து சென்று இருக்கிறார் நடிகை சரோஜா தேவி. அவரது பிறப்பு தொடங்கி இறப்பு வரை அவரது வாழ்வின் சுவடுகளை இந்த பதிவில் பார்க்கலாம். 1938 ஜனவரி 7ம் தேதி பெங்களூருவில் பிறந்த சரோஜா தேவி, வோகாலிக குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை 'பைரப்பா' போலீஸ் அதிகாரியாகவும், தாய் 'ருத்ரம்மா' வீட்டை கவனத்தித்து கொள்ளும் பொறுப்பில் இருந்தனர்.
இப்படி இருக்க தனது சிறுவயதிலேயே நடனம், பாடல் என கலையுலகத்திற்கு தேவையான அனைத்து கலைகளையும் திறம்பட கற்றுக்கொண்டார். பின் தனது 13-வது வயதில் ஒரு நிகழ்ச்சியில் சரோஜா தேவி பாடியபோது, தெலுங்கு இயக்குனர் பி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பார்வை அவர் மீது பட்டது. அவருடைய பாடலும் நடிக்கும் திறமையும் கண்டு பூரித்து போன அவர், 1955ம் ஆண்டு வெளியான ‘மகாகவி காளிதாஸா’ எனும் கன்னட படத்தில் சரோஷா தேவையை நடிக்க வைத்து அழகு பார்த்தார். இப்படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதை பெற்றது. இதனை அடுத்து சரோஜா தேவியின் பெயர் பட்டிதொட்டி எங்கும் பரவ ஆரம்பித்தது. பின்பு 1957ம் ஆண்டு வெளியான 'தங்கமலை ரகசியம்' என்ற தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அசத்தி இருந்தார். இந்த பாடல் பலரது கண்ணில் பட்டிருந்தாலும் மிகப்பெரிய நடிகரான எம்.ஜி.ஆர் அவர்களது கண்ணில் பட, 1958ம் ஆண்டு வெளியான ‘நாடோடி மன்னன்’ என்ற படத்தில் கதாநாயகியாக அவரை நடிக்க வைத்தார்.
இது தமிழ் திரையுலகில் அவருக்கு மிகப்பெரிய புகழை கூட்டியது. அதன்பின் 1959ம் ஆண்டு வெளியான 'தில்லிஙா பாரிசு', 1961ம் ஆண்டு வெளியான 'பாலும் பழமும்', 1962ம் ஆண்டு வெளியான 'ஆலயமணி', 1963ம் ஆண்டு வெளியான 'பெரிய இடத்து பெண்', 1966ம் ஆண்டு வெளியான 'அன்பே வா' உள்ளிட்ட படங்களில் இவர் நடித்து தமிழ் திரையுலகில் தன்னை முன்னணி கதாநாயகியாக நிறுத்தி கொண்டார். இப்படி இருக்க, நடிகை சரோஜா தேவி ஒரே நேரத்தில் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து அப்பொழுதே பான்-இந்திய நடிகையாக திகழ்ந்தார். இதுவரை 161 படங்களில் முன்னணியில் நடிகையாக நடித்து உலக சாதனை படைத்தவர். அதேபோல் 1955–1984 வரை அவர் தொடர்ச்சி இழக்காமல் நடித்துள்ளார். பின் 1967 மார்ச் 1 ஆம் தேதி இயந்திர பொறியாளர் 'ஸ்ரீ ஹர்ஷா' என்பவரை திருமணம் செய்தார். இதனை தொடர்ந்து தன் குடும்ப பொறுப்புகளுக்காக 1968–1986 வரை சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்தார், ஆனால் அவரது கணவர் மறைந்ததற்குப் பிறகு 1987 முதல் மீண்டும் நடிகையாக சினிமாவில் களமிறங்கினார். பின்பு நடிகையாக 1997ம் ஆண்டு ‘Once More’ என்ற படத்திலும், 2009-ம் ஆண்டு வெளியான ‘ஆதவன்’ போன்ற புகழ் பெற்ற படங்களில் நடித்து மீண்டும் மக்கள் மனதில் நாயகியாக திகழ்ந்தார்.
இதையும் படிங்க: #BREAKING: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்..!
மேலும் 1969ம் ஆண்டு 'பத்ம ஸ்ரீ' விருது பெற்றார், 1992ம் ஆண்டு 'பத்ம பூஷண்' விருது பெற்றார். பின் இந்திய அரசு, தமிழக மற்றும் கர்நாடக அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள், 2009ம் ஆண்டு ஆந்திர அரசின் NTR தேசிய விருது என பல விருதுகளை தன்வசப்படுத்தியவர். இத்தனை பெருமைகளுக்கு உரிய சரோஜா தேவி, பெங்களூரு நகரத்தில் தனது மகள்கள் இந்திரா மற்றும் புவனேஸ்வரி, மகன் கவுதம் உடன் அமைதியான குடும்ப வாழ்கையில் நிம்மதியாக வாழ்ந்து வந்தார். தனியான சமூக சேவையையும், தன்னுடைய குடும்பத்தின் நலனும், மொழியும் ஒருங்கிணைத்து பகிர்ந்துள்ளார். சரோஜா தேவி – 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்து பைங்கிளி' என அழைக்கபட்டு, 4 மொழி-சினிமாக்களில் சாதனை படைத்தார். தனது அற்புத நடிகை பயணத்தில் ஒரு பாடலை சமர்ப்பித்து புகழை அடுத்தடுத்து உருவாக்கினார்; கலை, குடும்பம், சமூக சேவையில் ஒவ்வொன்றிலும் மிகமுக்கியமாக திகழ்ந்தார். இன்று இவர் வாழ்ந்த காலமும், திறமைகளும், சமூக அர்ப்பணிப்பும் திரையுலகத்தில் மிகவும் முக்கிய பங்காற்றியது. சரோஜா தேவி, தனது வாழ்க்கையின் இறுதிக்காலத்திலும், தமிழ் சினிமாவின் வில்லன் கதாபாத்திரங்களை புதிய பரிமாணத்தில் உருவாக்கி, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இப்படிப்பட்ட அவரது மறைவு திரையுலகில் ஒரு பெரும் இழப்பாகும். அவரது சாதனைகள் மற்றும் நினைவுகள், தமிழ் சினிமாவின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.
இதையும் படிங்க: இயக்குநர் பா.ரஞ்சித்தின் படப்பிடிப்பில் நேர்ந்த சோகம்.. ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு..!