பட்டப்பெயர் வைத்து அழைத்த துல்கர் சல்மான்..! யோசிக்காமல் ரிப்ளை கொடுத்த ஸ்ருதி ஹாசன்.. ஆடிப்போன ரசிகர்கள்..!
நடிகை ஸ்ருதி ஹாசனை நடிகர் துல்கர்சல்மான் பொதுவெளியில் பட்டப்பெயர் வைத்து அழைத்து இருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும், தமிழ்–தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையுமான ஸ்ருதி ஹாசன், சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது பள்ளி பருவ நினைவுகளைப் பகிர்ந்து, அதில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் பற்றிய சுவாரஸ்ய தகவல்களையும் வெளியிட்டுள்ளார். தற்போது பல்வேறு மொழிகளில் ஒரே நேரத்தில் படங்கள் செய்து வரும் ஸ்ருதி, தனது பள்ளி வாழ்க்கையின் மறைக்கப்பட்ட இனிமையான தருணங்களை நினைவுகூர்ந்துள்ளார்.
ஸ்ருதி மற்றும் துல்கர் இருவருமே சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள். இருவரும் வேறு பள்ளிகளில் படித்திருந்தாலும், அவர்கள் பரிச்சயம் அப்போது ஆரம்பித்ததாம். இதைப் பற்றி பேசும்போது ஸ்ருதி ஹாசன் சிரித்தபடி கூறியதாவது, “சென்னையில்தான் எங்களின் பள்ளி வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. நாங்கள் இரண்டு பெரிய பள்ளிகளில் படித்தோம். ஒரே நண்பர்கள் வட்டம் இருந்ததால் அவ்வப்போது சந்திப்பது வழக்கமாக இருந்தது. அப்போது முதல் இன்று வரை துல்கர் என்னை ‘சோம்பி’ன்னுதான் அழைப்பார்” என்றார்.
ஸ்ருதியை "சோம்பி" என்று அழைக்கத் தொடங்கியதற்கான காரணத்தையும் அவர் சுவாரஸ்யமாக பகிர்ந்தார்:
“ஒரு காலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ‘சோம்பி’ பாடலை பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடுவோம். அந்த பாடலின் காரணமாகவே துல்கர் எனக்கு அந்த பெயரை வைத்தார். நான் துல்கரை சந்திக்கும் ஒவ்வொரு முறையிலும் அவர் வாயிலிருந்து வரும் முதல் வார்த்தை ‘ஹே சோம்பி!’ என்றுதான் இருக்கும்” என்று அவர் சிரித்தபடி தெரிவித்தார்.
இதையும் படிங்க: 3வது திருமண வாழ்க்கையும் குளோஸ்..! விவாகரத்துக்குப் பிறகு மனம் திறந்து பேசிய நடிகை மீரா வாசுதேவன்..!
மேலும், பள்ளியில் இருந்தபோது பலருக்கும் தன்னை கமல்ஹாசனின் மகள் என்றே தெரிந்தது.. ஆனால் தன் பெயரைப் பலரும் கூட சரியாக அறியாமல் இருந்த அனுபவங்களையும் ஸ்ருதி பகிர்ந்துள்ளார். “என் பெயரை விட, நான் கமல்ஹாசன் மகள் என்பதே அப்போது மாணவர்கள் இடையே அதிகம் பேசப்பட்டது. அது எனக்கு எப்போது நகைச்சுவையைத் தான் கொடுத்தது,” என்று கூறினார்.
இப்போது, அந்த பள்ளிக் கால நட்பே திரை உலகிலும் தொடர்கிறது. துல்கர் சல்மானும் ஸ்ருதி ஹாசனும் சேர்ந்து தற்போது நடித்து வரும் புதிய படம் ‘ஆகாசம் லோ ஒக்கா தாரா’ மீது ரசிகர்கள் ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த படம் தெலுங்கு மட்டும் அல்லாமல், தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. பல மொழிகளிலான இந்த பான்-இந்தியா முயற்சி, இருவரின் கூட்டணியை மேலும் சிறப்பாக்கிறது.
திரைப் படத் துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பதுடன், தனித்துவமான இசை தன்மை, வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வு என்பவற்றால் ஸ்ருதி ஹாசன் தனக்கென இருக்கும் ரசிகர் வட்டத்தை வலுப்படுத்தி வருகிறார். அதேபோல் துல்கர் சல்மானும், தெற்கு இந்தியாவையே தாண்டி தேசிய அளவில் தனக்கென இடத்தை பிடித்துள்ளார்.
அவர்களின் பள்ளிக் கால சுவாரஸ்யம் குறித்த இந்த பேட்டி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள், “பள்ளிப் பருவ நண்பர்கள் திரையில் ஜோடி ஆகும் தருணம், வித்தியாசமான ரசம் கொண்டது”
என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இருவரின் நட்பு, இனிமையான நினைவுகள் மற்றும் வரவிருக்கும் படத்தின் எதிர்பார்ப்புகள் ஆகியவை, ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டி வருகின்றன.
இதையும் படிங்க: 7ம் வகுப்பில் ஆரம்பித்த பாலியல் தொல்லை.. இன்னும் End-ஏ இல்லாம போகுது..! பிக் பாஸ் நடிகை ஸ்ரீ சத்யா ஓபன் டாக்..!