41வது பிறந்தநாளை கொண்டாடும் ராம் சரண்..! ‘பெத்தி’ படத்தின் பிரமாண்ட ‘கிளிம்ப்ஸ்’ வெளியீடு.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!
இன்று ராம் சரனிண் 41வது பிறந்தநாளை முன்னிட்டு ‘பெத்தி’ படத்தின் பிரமாண்ட ‘கிளிம்ப்ஸ்’ வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவின் மிகப்பெரும் நட்சத்திரங்களில் ஒருவரான ராம் சரண், கடந்த இருபது ஆண்டுகளாக தென்னிந்திய திரைப்பட உலகில் தன் தனிப்பட்ட இடத்தை நிலைநிறுத்திய நடிகர். பாக்ஸ் ஆபீஸ் வசூலில் தொடர்ந்து சாதனைகளை படைத்து வரும் அவரது படங்களுக்கு நாடு முழுக்க நிலையான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் ராம் சரண்.
பிறந்தநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களும், தெலுங்கு மற்றும் இந்திய சினிமா பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை மழையாக்கி வருகின்றனர். இந்த உற்சாகத்தில் மேலும் வண்ணம் சேர்க்கும் விதமாக, ராம் சரண் தற்போது நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படத்தின் பிரத்யேக ‘கிளிம்ப்ஸ்’ வீடியோவை தயாரிப்பாளர்கள் இன்று காலை வெளியிட்டுள்ளனர்.
கடைசியாக வெளியான ‘கேம் சேஞ்சர்’ படம் வெளியானபோது மிகுந்த கவனம் பெற்றிருந்தாலும், வெளியீட்டுக்குப் பிறகு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்கள் எழுந்தன. ஷங்கர் இயக்கியதால் ஏற்பட்ட வியப்பான எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லை என்பதே ரசிகர்களிடையே வெளிப்பட்ட கருத்து. இப்படத்திற்குப் பிறகு, “அடுத்த படம் ராம் சரணின் கரியரில் மிக முக்கியமாய் இருக்க வேண்டும்” என்ற நிலை உருவானது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தனது அடுத்த படமாக புச்சி பாபு சனா இயக்கும் ‘பெத்தி’ படத்தை தேர்வு செய்தார் ராம் சரண்.
இதையும் படிங்க: அண்ணாமலை குடும்பத்தில் மீண்டும் போலீஸ்..! ஷாக்கில் முத்து - மீனா.. வயித்தெரிச்சலில் விஜயா - மனோஜ்.. சிறகடிக்க ஆசையில் இன்று..!
டெப்யூ படமான உப்பேனா மூலமாகதே இயக்குநர் புச்சி பாபு சனா தனது கதை சொல்லும் திறமையால் ரசிகர்களையும், சினிமா விமர்சகர்களையும் கவர்ந்திருந்தார். அந்த நம்பிக்கையுடன் உருவாகும் இந்த புதிய படம் குறித்து தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பல மாதங்களாக பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. பெத்தி படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கிறார். தெலுங்கு சினிமாவில் அவர் நடித்த தேவரா படத்துக்கு பிறகு, பெரிய அளவில் பேசப்படும் படம் இதுவே என்று கூறப்படுகிறது. ராம் சரண் – ஜான்வி கபூர் சேர்க்கையை ரசிகர்கள் புதுமையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இருவரின் ஆன்-ஸ்க்ரீன் கேமிஸ்ட்ரி எப்படி அமையும் என்ற ஆவலும் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.
இந்த படத்தில் பல முக்கிய நடிகர்கள் இணைந்திருப்பது படத்தின் மேல் இருக்கும் அக்கறையை காட்டுகிறது. சிவ ராஜ்குமார் – கன்னட சூப்பர் ஸ்டார். திவ்யேந்து – மிர்சாபூர் ஸீரியலின் புகழ். ஜகபதி பாபு – தெலுங்கு சினிமாவின் அனுபவமிக்க நடிகர். மேலும் பலர் இணைந்து கதையின் முக்கிய பகுதிகளை தாங்கியுள்ளார். இந்த லைன்-அப்பே படத்தின் தரத்தை முன்கூட்டியே உணர்த்துகிறது.
இந்த படம் குறித்து மிக அதிகம் பேசப்படும் அம்சங்களில் ஒன்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்திருப்பது. புச்சி பாபு சனா – ராம் சரண் – ரஹ்மான் கூட்டணி திரை ரசிகர்களிடையே பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்து பின்புல இசை சாம்பிள் வரை, ரஹ்மானின் மியூசிக் பற்றிய பேச்சு மிகுந்து வருகிறது. குறிப்பாக ‘கிளிம்ப்ஸ்’ வீடியோவில் இடம்பெற்ற பின்புல இசை ரசிகர்களை இன்னும் அதிகமாக உற்சாகப்படுத்தியுள்ளது.
ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய இரண்டு பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. தெலுங்கு சினிமாவில் தற்போது உருவாகும் மிகப்பெரும் பட்ஜெட் படங்களில் ஒன்றாக ‘பெத்தி’ கருதப்படுகிறது. படத்தின் காட்சியமைப்பு, லொகேஷன், செட் வடிவமைப்பு அனைத்தும் மிகுந்த பிரமாண்டத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கெனவே அறிவித்தபடி, இந்த படம் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது. சமீபத்திய தகவல்களின் படி, படத்தின் விநியோக உரிமைகளும் ஏற்கனவே உயர்ந்த விலையில் விற்கப்பட்டுள்ளன. ராம் சரண் தனது 41வது பிறந்தநாளை இன்று கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக ‘பெத்தி’ படத்தின் பிரத்யேக ‘கிளிம்ப்ஸ்’ வீடியோ வெளியாகியுள்ளது. சில வினாடிகள் மட்டுமே இருந்தாலும், அந்த வீடியோவில் ராம் சரண் கேரக்டர் எப்படி இருக்கும், படம் எந்த வகை உணர்வுகளைக் கொண்டிருக்கும் என்பது குறித்து ஒரு தீவிரமான சுவையை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர்
இந்த ‘கிளிம்ப்ஸ்’ வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகள் பெற்றுள்ளது. பிரபல நடிகர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் ராம் சரணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும், ‘பெத்தி’ பற்றிய பாராட்டுகளையும் பகிர்ந்து வருகின்றனர். ராம் சரணின் பிறந்தநாள் என்ற சிறப்பு நாளில் வெளியான ‘பெத்தி’ கிளிம்ப்ஸ், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் பல மடங்கு உயர்த்தியுள்ளது.
ஏற்கெனவே வெற்றிகரமான காம்பினேஷன்கள், பிரமாண்ட தயாரிப்பு, ரஹ்மானின் இசை, புச்சி பாபுவின் கதை சொல்லும் பாணி – இவை அனைத்தும் சேர்ந்து 2026ஆம் ஆண்டின் மிகப்பெரும் தெலுங்கு படங்களில் ஒன்றாக ‘பெத்தி’ உருவாகப்போகிறது என்பதை தெளிவாக காட்டுகின்றன.
இதையும் படிங்க: கண்ட கனவு நினைவானது..! ரூ.80 லட்சம் மதிப்புள்ள BMW காருக்கு சொந்தக்காரியான நடிகை கிரேஸ் ஆண்டனி..!