விலையே ரூ.10 லட்சமா..! 'அம்பானி' கூடவாங்க முடியாதாம்.. நடிகர் பகத் பாசில் யூஸ் பண்ணும் ஃபோன் இதுதான்..!
நடிகர் பகத் பாசில் உபயோகிக்கும் செல்போனை அமெரிக்க பிரதமர் 'ட்ரம்ப்' கூடவாங்க முடியாதாம்.
தென்னிந்திய திரையுலகில் தனது நடிப்பால் தனி இடத்தைப் பிடித்துள்ள ஒரே நடிகர் என்ற பெருமைக்குரியவர் தான் பகத் பாசில். மலையாளத்தில் அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துக் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால், பகத் பாசில் சமூக ஊடகங்களில் தனது தனித்துவமான நடிப்பை காட்டுவதன் காரணமாக ரசிகர்களுடன் நெருக்கமாக இருக்கும் நடிகராக பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' படத்தில் காமெடி வேடத்தில் நடித்ததும், அல்லு அர்ஜுனுடன் நடித்த புஷ்பா படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடித்ததும் பெரும் பாராட்டுகளை பெற்றது.
இப்படங்களைத் தொடர்ந்து, தற்போது இவர் மாலிவுட் டைம்ஸ், மாரீசன், ஓடும் குதிர சாடும் குதிர, பேட்ரியாட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடித்த மாமன்னன் படம் பெற்ற வெற்றியால், அவருடன் சேர்ந்து மாரீசன் படத்தில் நடித்துள்ளார் பகத். சமீபத்தில் மாரீசன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை எகிற செய்துள்ளது. இந்த படம் வரும் ஜூலை 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும், அவர் ஹிந்தியில் 'தி இடியட் ஆப் இஸ்தான்புல்' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இப்படி இருக்கையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் சேனலுக்கு பகத் பாசில் அளித்த பேட்டியில் " நான் சமூக ஊடகங்களில் எப்பொழுதும் இருப்பதில்லை. என் படங்களை இணையதளம் மூலமாக ஒருநாளும் விளம்பரப்படுத்த வேண்டுமென நான் நினைக்கவில்லை. கல்லூரி நாட்களில் மட்டுமே அதிகமாக பேஸ்புக் பக்கம் வந்திருந்தேன், ஆனால் அதுவும் இப்போது இல்லை. அதற்குப் பின் பேஸ்புக் பக்கமே செல்வதில்லை. சமூக ஊடகத்திற்கு பதிலாக மக்களுடன் நேரடியாக இணைந்திருக்க நான் விரும்புகிறேன்" எனத் தெரிவித்தார். அவரது இந்த எளிமையான மற்றும் தனிமையான வாழ்க்கை முறையை பற்றி மலையாள நடிகர் வினய் போர்ட் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தி இருந்தார்.
அதில், " பகத் பாசில் எந்த சமூக ஊடகத்திலும் ஈடுபடாமல், சாதாரண பட்டன் போன் பயன்படுத்தி வருகிறார்" என கூறியிருந்தார். இந்த நிலையில், பகத் பாசில் பயன்படுத்தி வரும் அந்தப் போனின் சுவாரஸ்யமான விவரங்கள் சமீப காலமாக இணையதளங்களில் உலாவந்து கொண்டிருக்கிறது. அதன்படி, அவர் பயன்படுத்தும் போன், இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் ஆடம்பர மொபைல் போன் பிராண்டான ‘வெர்து’ (Vertu) என்ற நிறுவனத்தின் ஒரு பிரீமியம் மாடலாம். இந்த மொபைல் போனின் இந்திய மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்குமாம். அதுமட்டுமல்லாமல் இந்த போன் 2008-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தோடு, இப்போது வெளியுலக மார்க்கெட்டில் அதிகம் கிடைப்பதில்லை, ஏனெனில் அதன் உற்பத்தி முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தயாரிப்பாளர் காமெடி பண்ணுறாரு.. நான் பணத்தை வாங்கினேனா.. நடிகர் நிவின் பாலி பதிலடி..!
இருந்தாலும், இந்த போனில் புளூடூத், ஜி.பி.ஆர்.எஸ்., எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். போன்ற நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்த முடிகிறதாம். திடமான டைட்டானியம் உலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ள, நீலநிற கற்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த போன், கையால் தைக்கப்பட்ட தோல் போன்ற அம்சங்களால் இது மற்ற சாதாரண மொபைல் போன்களிலிருந்து பிரித்து தனித்துவமாக காணப்படுகிறது. மேலும் இந்த போன், சமூக ஊடகங்களில் வியப்பூட்டும் தன்மை கொண்டாலும், நடிப்பில் பிசியாக இருக்கும் அவருக்கு போன் யூஸ் பண்ண எங்கு நேரம் இருக்கும் எனவும் பலரும் சொல்லி வருகின்றனர். இவ்வாறாக சமூக ஊடகங்களிலிருந்து விலகி தனி மொபைல் போனை பயன்படுத்தி, நேரடியாக ரசிகர்களுடன் நெருங்கிய தொடர்பை விரும்பும் நடிகர் பகத் பாசிலின் வாழ்க்கை முறையும் நடிப்பும் தமிழக ரசிகர்கள் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு ரசிகர்களின் மனதில் தனி இடம் பெற்றுள்ளது.
மேலும் சில ரசிகர்கள் இந்த போன் உருவாக்கத்தையே நிறுத்திட்டாங்க, அதுனால அந்த போன் இன்னும் உழைப்பது பெரிய விஷயம் தான்.. ஆனால் உற்பத்தி நிறுத்திய அந்த ஃபோனை இனி யாராலும் வாங்க முடியாது ஏன்? அம்பானியா-ல கூட வாங்க முடியாது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரே போட்டோ தான்.. இணையத்தை அலறவிட்ட நடிகை சன்னி லியோன்..! இதை யாரும் எதிர்பாக்கலைல..!