×
 

தயாரிப்பாளர் காமெடி பண்ணுறாரு.. நான் பணத்தை வாங்கினேனா.. நடிகர் நிவின் பாலி பதிலடி..!

தன் மீது சுமத்தப்பட்ட பணமோசடிக்கு நடிகர் நிவின் பாலி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் நிவின் பாலி, சமீபகாலமாக பல சர்ச்சைகளில் சிக்கி தவித்து வருகிறார். காரணம் இவர் நடித்த ‘டியர் ஸ்டூடன்ஸ்’ திரைப்படம் தற்போது வெளியீட்டுக்குத் தயாராக உள்ள நிலையில், நயன்தாராவுடன் இவர் இணைந்து நடித்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘பென்ஸ்’ என்ற மற்றொரு திரைப்படத்திலும் நிவின் பாலி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதுமட்டுமல்லாமல்,  ஏற்கனவே இவர் நடித்து முடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ மற்றும் ‘டியர் ஸ்டூடன்ஸ்’ ஆகிய இரண்டு படங்களும் வெளியீட்டுக்குத் தயார் நிலையில் உள்ளன. இப்படி பலப்படங்களை கையில் வைத்திருக்கும் நிவின் பாலி தற்போது, பகத் பாசில் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘பெத்லஹம் குடும்ப யூனிட்’ எனும் புதிய படத்திலும் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்டதான இந்த வேளையில், 2022ஆம் ஆண்டு வெளியான அவரது "மஹாவீர்யார்" படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இதனால், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து, அதற்கான இழப்பீடாக நிவின் பாலி ரூ.95 லட்சம் செலுத்தி, அதற்கு மேலாக, இயக்குநர் அப்ரித் ஷைன் இயக்கும் ‘ஆக்ஷன் ஹீரோ பிஜு – பார்ட் 2’ படத்தை தயாரிக்கத் தீர்மானித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், 'ஆக்ஷன் ஹீரோ பிஜு 2' படத்தின் தயாரிப்பு முதலில் இயக்குநர் அப்ரித் ஷைனிடம் இருந்தது. பின்னர் அவர் இப்படத்தின் தயாரிப்பு பொறுப்பை பி.எஸ். ஷாம்னஸுக்கு மாற்றியதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், படத்தின் துபாய் விநியோக உரிமையை, நிவின் பாலி ரூ.2 கோடிக்கு அட்வான்ஸாக கொடுத்ததாகவும், இப்படி இவர்கள் துபாய்க்கு படத்தின் உரிமையை கொடுத்தது புதிய தயாரிப்பாளரான பி.எஸ். ஷாம்னஸுக்கு தெரியாமல் செய்திருப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த  தயாரிப்பாளர் பி.எஸ். ஷாம்னஸ், நிவின் பாலி மீது, தயாரிப்பாளரை ஏமாற்றி, மோசடி செய்துள்ளார் என குற்றம் சாட்டி அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: ஒரே போட்டோ தான்.. இணையத்தை அலறவிட்ட நடிகை சன்னி லியோன்..! இதை யாரும் எதிர்பாக்கலைல..!   

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், தற்பொழுது நடிகர் நிவின் பாலி தனது விளக்கத்தை எழுத்து மூலமாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் "இது தொடர்பான வழக்கு 2025 ஜூன் 28 முதல் நீதிமன்ற நடுவர் குழுவில் விசாரணைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வழக்கின் ரகசியத்தன்மையை பாதுகாக்க, நீதிமன்றம் தடை உத்தரவை நடைமுறையில் வைத்துள்ளது. அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அதன்மீது மறுபடியும் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளதை எங்களது சட்டக்குழு பரிசீலித்து வருகிறது. இதுபோன்ற சட்டவழிகாட்டுதல்களை மீறி செயல்படுவது உண்மையை மறைக்க மட்டுமே என நாங்கள் நம்புகிறோம். உண்மை எவ்வளவு தாமதமானாலும் வெளிவரும். எங்களது சட்டக்குழு இதற்குரிய நடவடிக்கையை எடுக்க உள்ளது" என தெரிவித்துள்ளார். இப்படி சினிமா உலகத்தில் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கிடையில் ஏற்படும் நிதிக்குரிய பிரச்சனைகள் ஒன்றும் புதியதல்ல. நிவின் பாலி இதுவரை தனது திரைப்பயணத்தில் தனக்கு எதிராக வந்த பல விவாதங்களைத் தவிர்த்து, தனது நடிப்பால் மட்டுமே ரசிகர்களை கவர்ந்தவர் என்பதால், இச்சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், நிவின் பாலி நடிப்பிலும், புதிய படங்களின் வரிசையிலும் ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். ஆனால் தற்போது எழுந்துள்ள பணமோசடி குற்றச்சாட்டு, அவரது திரையுலகப் பயணத்திற்கு ஒரு சவாலாகவே பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் நிவின் பாலி கூறியபடி உண்மை எப்போது வேண்டுமானாலும் வெளிவரும்… ஆனால் அது வெளிவரும் வரை பொறுமை வேண்டும். அவர் கூறிய வார்த்தைபடி நாமும் பொறுமையாக பொறுத்திருந்து பார்க்கலாம் என்னதான் நடக்க போகிறது என்பதை. 

இதையும் படிங்க: 'ஜெய் பீம்' பாத்தாச்சு..அடுத்து 'கருப்பு' தான்..! ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் மீண்டும் சூர்யா.. ஜோதிகா கூட்டணி.. டீசர் பார்க்கலாமா..!   

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share