×
 

ரூ.1000 வாங்க 10 முறை முத்தம் கொடுக்கனும்..! ஹீரோவுக்கு கண்டீஷன் போட்ட பெண் தயாரிப்பாளரால் பரபரப்பு..!

ஹீரோவுக்கு காசு வேண்டுமானால் 10 முறை முத்தம் கொடுக்க வேண்டும் என பெண் தயாரிப்பாளரால் கண்டீஷன் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாலிவுட்டில் கடந்த 3 தசாப்தங்களாக திகழும் முக்கிய நடிகர்களில் ஒருவர் சைப் அலி கான். பிரபலமான குடும்பம், வசதிகள், மற்றும் பின்புலம் இருந்தபோதிலும், திரையுலகத்தில் தன்னை ஒரு ஹீரோவாக நிலைநிறுத்த பெரும் போராட்டங்களை சந்தித்தவர். இன்று தன்னை ஓர் பரந்துவிரிந்த பிரபல நடிகர் என நிரூபித்துள்ள அவர், சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தனது வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சியான உண்மை சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதன்படி சைப் அலி கான் 1993-ல் வெளியான "Parampara" திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அவருடைய குடும்பத்தினர் திரைப்பட துறையில் இருந்தாலும், ஆரம்பத்தில் தான் ஒரு முன்னணி நடிகராக உருவாக கடினமான பாதையில் பயணிக்க வேண்டியிருந்தது. அவரது தந்தை நவாப் மன்பதர் அலி கான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன். தாயார் ஷர்மிலா டாகூர், புகழ்பெற்ற நடிகை. இந்த வகையில் பிரபலமாக இருந்தும், சைஃப் தனது திறமையை நிரூபிக்க மட்டுமன்றி, வாய்ப்புகளுக்காகவும் பலகட்ட போராட்டகளை சந்தித்ததாக கூறுகிறார்.

ஒரு முன்னணி யூட்யூப் செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணலில், சைஃப் அலி கான் தனது ஆரம்ப காலத்து பண ஆசை இருந்த நாட்களை நினைவுகூரினார். அதில் அவர் பேசுகையில்,  “எனக்கு சினிமாவில் எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. நான் பத்து ரூபாய் இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த காலம். ஒரு பெண் தயாரிப்பாளர் இருந்தார். அவர் உண்மையில் எனக்கு பணம் கொடுப்பார்... ஆனால் நிபந்தனையோடு” என்றார். அந்த நிபந்தனை, அவர் தனது கன்னத்தில் முத்தம் கொடுக்க வேண்டும் என்பதாக இருந்ததைக் குறிப்பிடுகிறார் சைஃப். மேலும் அவர் பேசுகையில், “ஒரு வாரத்திற்கு ரூ.1,000 தேவைப்பட்டால், நான் அவரை பத்து முறை முத்தமிடவேண்டும். அவ்வளவுதான். எனக்கு பணம் கிடைக்கும். அது ஒரு வித்தியாசமான அனுபவம்” என்றார்.

இதையும் படிங்க: இது என்னப்பா ருக்மணி வசந்த்-க்கு வந்த வாழ்வு..! ‘நேஷனல் கிரஷ்’ ஆக மாறிய பிரபல நடிகை..!

பொதுவாக பாலிவுட் திரையுலகில் பெண்கள் தான் பலதடவை பாதிக்கப்பட்டவர்கள் என்ற கதைகள் அதிகம் வருகிறது. ஆனால் சைஃப் கூறிய இந்த சம்பவம், ஆண்கள் மீது பெண் அதிகாரிகள் மேற்கொள்ளும் அடக்குமுறைகளை வெளிக்கொணர்கிறது. இதற்காக அவர் அந்த பெண் தயாரிப்பாளரின் பெயரை கூறவில்லை. ஆனால் இது, பாலிவுட் சமூகத்தில் உள்ள அந்தரங்க இருண்ட பகுதிகள் குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.

இந்த செய்தி வெளியாகியதுமே, சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் பரவி வருகின்றன. சைஃப், தனது ஆரம்ப காலங்களில் நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் தோல்விகளை சந்தித்தன. பின்தான் வலிமையான நடிப்பாளராக தன்னை நிரூபித்தார். அவரின் ஆளுமை, நகைச்சுவை உணர்வு, மற்றும் நேர்மையான நடிப்பு என இவரை மற்ற நடிகர்களிலிருந்து வேறுபடுத்தியது. இப்படி இருக்க இந்த சம்பவம், பாலிவுட் போன்ற ஒரு பரபரப்பான, புகழை விரும்பும் தொழில்நுட்பத் துறையில் நடிகர்களும் பாதிக்கப்படலாம் என்பதற்கான அர்த்தத்தைத் தருகிறது. பாலிவுட்டில் வாய்ப்புகள் பெற திறமை மட்டுமல்ல, சில சமயங்களில் அவமானகரமான, வினோதமான சூழ்நிலைகளையும் சந்திக்க வேண்டியிருக்கலாம் என்பதையும் இது உணர்த்துகிறது. சைஃப் அளித்த இந்த பேட்டி, இப்போது சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லாது, பலதரப்பட்டவர்களிடமும் விவாதங்களுக்கு இடமளிக்கிறது.

ஆகவே சைஃப் அலி கான் ஒரு முன்னணி நடிகராக இருந்தும், தனது தாழ்வு நிலை, பாதிக்கப்பட்ட அனுபவம், அவமானமான நிபந்தனைகள் ஆகியவற்றை வெளிப்படையாக கூறியிருப்பது, அவரது மனதார நம்பிக்கையை காட்டுகிறது. அவர் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயரை மறைத்தாலும், இந்த அனுபவம் ஒரு புரிதலை வழங்குகிறது. திரையுலகத்தில் பாலினம் சார்ந்த வெறுப்பும், பதவி ஒப்பந்தங்களும் இருபாலருக்கும் உள்ளதாகும். வாய்ப்பு என்பது ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியாக வராது.

இதையும் படிங்க: பாவம்-யா...அந்த மனுஷன்..! மேலும் ஒரு கார் பறிமுதல்...கடும் கோபத்தில் நடிகர் துல்கர் சல்மான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share