×
 

வெளியான சிறிது நேரத்தில் மில்லியன் பார்வை..! "பொட்டல முட்டாயே" வீடியோ பாடல் வைரல்...!

அனைவரது எதிர்பார்ப்பையும் எகிற செய்த பொட்டல முட்டாயே வீடியோ பாடல் வெளியாகி மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

தமிழ் சினிமாவில் குடும்பதோடு சேர்ந்து பார்க்கும் திரைப்படங்களை எடுத்து, ரசிகர்களிடம் தனித்த அடையாளம் பெற்று புகழின் உச்சியில் இருப்பவர் இயக்குநர் பாண்டிராஜ். ‘பசங்க’, ‘வம்சம்’, ‘மெரினா’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டு பிள்ளை’, ‘எதற்கும் துணிந்தவன்’ ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு, தற்போது அவர் இயக்கியுள்ள படம் தான் ‘தலைவன் தலைவி’. இந்தப் படம், விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படம் எனும் சிறப்பைத் தாங்கி வெளிவந்துள்ளது. கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நித்யா மேனன், மேலும் யோகி பாபு உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இந்த திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படி இருக்க ‘தலைவன் தலைவி’ திரைப்படத்தின் கரு என பார்த்தால், கணவன் மற்றும் மனைவி உறவில் ஏற்படும் சிறிய முரண்பாடுகள், கோபம், புரிந்துணர்வு, பிரிவு, சமாதானம் ஆகியவற்றின் வழியாக வாழ்க்கையை புரிந்துகொள்வது எப்படி? என்பதே ஆகும். பாடுபட்ட உறவுகளை தவிர்த்து விடுவதற்கான விரைவான தீர்வாக விவாகரத்து செல்லக் கூடாது என்பதையும், மனதை மாற்றுவதற்கும் மன்னிப்பதற்கும் இடமிருக்க வேண்டும் என்பதையும் இப்படம் அழுத்தமாகச் சொல்லுகிறது. இந்தக் கரு, விஜய் சேதுபதியின் நேர்த்தியான நடிப்பு மற்றும் நித்யா மேனனின் உணர்வுப் பூர்வமான கதாபாத்திரம் மூலம் உணர்ச்சி ரீதியாக ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

திரைப்படம் வெளியானது முதலே, முன்பதிவு வசூலில் நல்ல வேகம் கண்டது. குடும்ப ரசிகர்கள் மத்தியில் திரைப்படம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இத்தனை நாட்களில் ரூ.50 கோடிக்கு மேலாக வசூலில் செய்து சாதித்துள்ளது. இந்த அளவிற்கு ஒரு குடும்பக்கதை கொண்ட திரைப்படம், மாஸ் ஆக்‌ஷன் பாணி இல்லாமலேயே இவ்வளவு வரவேற்பு பெறுவது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, ‘தலைவன் தலைவி’ திரைப்படம் தெலுங்கில் ‘சார் மேடம்’ என டப் செய்யப்பட்டு, இன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான நடிகர்..! விஜய் தேவரகொண்டாவிடம் தொடரும் விசாரணை..!

தெலுங்கு ரசிகர்களிடம் விஜய் சேதுபதிக்கும், நித்யா மேனனுக்கும் தனியான ரசிகர்கள் வட்டம் இருக்கிறார்கள். எனவே, இந்த திரைப்படம் அங்கும் சிறப்பான வரவேற்பை பெறும் என திரைப்பட விமர்சகர்கள் எதிர்பார்க்கின்றனர்.  இயக்குநர் பாண்டிராஜின் கதைகளில் உணர்ச்சி, குடும்ப நெருக்கம், நம்மைச் சுற்றிய சாமான்ய மனிதர்களின் வாழ்க்கை உண்டாகும் இடையீடுகள் என எல்லாம் இயல்பாகவே வடிவமைக்கப் பட்டிருக்கும். ஆகவே ‘தலைவன் தலைவி’ திரைப்படம் இந்த உறவுகளைக் கைப்பற்றி, குடும்பம் மற்றும் திருமணத்தின் மீதான பார்வையை மிக உணர்வோடு பேசும் வகையில் அமைந்துள்ளது. இப்படி இருக்க பலரது பாராட்டுகளையும் பெற்ற 'தலைவன் தலைவி' படத்தில் இடம்பெற்ற 'பொட்டல முட்டாயே' பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது.. வெளியான சில மணி நேரங்களிலேயே இப்பாடல் யூடியூப்-ல் 3 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படியாக பலரது கவனத்தையும் பெற்ற இப்பாடலை சுப்லக்ஷினி உடன் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். மேலும் பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார். பாபா பாஸ்கர் இப்பாடலுக்கான நடனத்தை இயக்கியுள்ளார்.

இப்படி பலரது கைவண்ணத்தில் உருவான இப்பாடல் இணையதளங்களில் வெளியாகி சக்கப்போடு போட்டு வருகிறது. இதுவும் படக்குழுவினருக்கு வெற்றியாகவே அமைந்துள்ளது.
 

இதையும் படிங்க: படம் நல்லா இருந்தா தான் இமோஜி.. இல்லைனா கிடையாது..! அனிருத் பேச்சால் கலக்கத்தில் இயக்குநர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share