அவ்வளவுதான் நம்பல முடிச்சிட்டாங்க போங்க..! சூதாட்ட செயலி வழக்கு..பிரபலங்களின் சொத்துக்களை முடக்கும் ED அதிகாரிகள்..!
சூதாட்ட செயலி வழக்கில் தொடர்புடைய பிரபலங்களின் சொத்துக்களை முடக்க ED அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்தியாவில் சமீப காலங்களில் வேகமாக வளர்ந்து வரும் மற்றும் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படும் ஒரு மோசமான நிழல் தொழிலாக ஆன்லைன் சூதாட்டங்கள் மாறி விட்டன. இந்த சூதாட்ட செயலிகள் மற்றும் இணைய தளங்கள், பெரும்பாலும் வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்டவை. சட்டத்தை மீறி இந்தியர்களிடம் பணம் குவிக்கின்றன. இதில் பலரும் தங்கள் வாழ்க்கை சேமிப்புகளை இழக்கின்றனர்.
கொடுமையான பகுதியோ, இந்த சூதாட்டத்தில் பணத்தை இழந்த பலர் தற்கொலைக்குச் செல்வது தான். இந்த நெருக்கடியான சூழ்நிலையை எதிர்நோக்கிய மத்திய அரசு, ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு கடும் தடை விதித்து வருகிறது. மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை கடந்த மாதங்களில் புதிய சட்டங்களை கொண்டு வந்தது. இந்தியாவில் சட்டப்படி அனுமதிக்கப்படாத ஆன்லைன் சூதாட்டங்கள், மற்றும் துப்பாக்கி சூடான விளம்பரங்களை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, (ED) எனப்படும் அமலாக்கத் துறை, சட்டவிரோதமான பணப்பரிமாற்றம் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது. விசாரணையின் முக்கிய நோக்கம்: "1xBet" என்ற ஆன்லைன் சூதாட்ட செயலியைச் சுற்றி உருவான பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பணப் பரிமாற்றங்களை வெளியே எடுத்து வைப்பது.
இந்த சூதாட்ட செயலிகளுக்கு ஆதரவாக விளம்பரங்களில் நடித்த பலர் தற்போது ED விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளனர். தற்பொழுது வரை விசாரணை பட்டியலில் உள்ளவர்கள், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, சுரேஷ் ரெய்னா, மற்றும் ஷிகார் தவான், பிரபல இந்தி நடிகர் சோனு சூட், வங்காள நடிகர் அங்குஷ் ஹஸ்ரா, நடிகை, மற்றும் முன்னாள் எம்.பி. மிமி சக்கரவர்த்தி, நடிகை ஊர்வசி ரவுட்டேலா ஆகியோர். இந்த பிரபலங்களிடம் ED பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, "1xBet" நிறுவனத்துடன் தொடர்பு எப்போது ஆரம்பமானது?, விளம்பர ஒப்பந்தம் எந்த வழியில் ஏற்பட்டது?, பணம் பெற்றது எங்கு, எப்படி?
ஆன்லைன் சூதாட்டம் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதையறிந்ததா? இவையெல்லாம் தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. எனவே அமலாக்கத் துறையின் தகவலின்படி, இந்த சூதாட்ட விளம்பரத்திற்காக பிரபலங்கள் பெற்ற பணத்தின் ஒரு பகுதி சொத்துகளாக மாறியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: இரண்டு நாளில் வெளியாகவுள்ள "இட்லி கடை" படம்..! இந்த நேரத்தில் இப்படி போஸ்ட் வெளியிட்டு இருக்காங்களே..!
இந்தியாவில் மட்டுமல்ல, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் சொத்துகள் வாங்கியதாகவும், அவை சட்டவிரோத பணம் மூலமாக வந்ததாகவும் சந்தேகம் உள்ளது. இந்த சொத்துகள், “proceeds of crime” எனப்படும் குற்றச்செயலில் ஈட்டப்பட்ட சொத்துகளாக கருதப்படுகின்றன. எனவே, அவை அமலாக்கத்துறையால் முடக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆன்லைன் சூதாட்டத்தின் வேர்கள் நாட்டின் ஒவ்வொரு மூலையும் சென்றடைந்துள்ளன. குறிப்பாக, கிராமப்புறங்களில் கூட இணையத்தின் அடையாலங்களில், மக்கள் பல லட்சங்களை இழக்கின்றனர். தந்தையின் நிலத்தை விற்று சூதாட்டத்தில் போடும் மாணவர்கள், தவறான பாதையில் சென்ற குடும்பங்கள், கடன் அடிக்கடவாயாகி, தற்கொலை செய்துகொள்ளும் பலர் – இதெல்லாம் உண்மை சம்பவங்கள்.
இது வெறும் ஆட்டம் அல்ல. மக்கள் வாழ்வை விழுங்கும் விஷப்பாம்பாக ஆன்லைன் சூதாட்டங்கள் மாறியுள்ளன. இந்த சூதாட்டங்களை அழிக்க அரசு முயலும்போது, பிரபலங்கள் இதற்கு நேரடி ஆதரவாளர்களாக விளங்கியுள்ளனர் என்பது மிக கவலையளிக்கும் ஒன்று. சமூகத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தும் நடிகர்கள், வீரர்கள், இளைஞர்களுக்கான ரோல் மொடல்களாக இருப்பவர்களே, இத்தகைய செயலிகளில் விளம்பரங்களில் நடித்து, பணம் சம்பாதிக்கின்றனர். இது அவர்களது சமூகப் பொறுப்பின்மையை காட்டுகிறது. இப்படி இருக்க மத்திய அரசு தற்போது, ஆன்லைன் சூதாட்ட செயலிகளை தடைசெய்து, இணைய சேவையாளர்களுக்கு அவை அணுக முடியாதவாறு கட்டுப்பாடுகள்.
இணையதள மற்றும் செயலிகள் பற்றி தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் Section 69A படி நடவடிக்கைகள். விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு நேரடி சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். குற்றச்செயலுக்கு ஈடுபட்ட பணம் மற்றும் சொத்துகள் மீதான Benami Act, PMLA (Prevention of Money Laundering Act) போன்ற சட்டங்கள் செயல்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஆகவே மாற்றம் என்பது சட்டத்தின் ஊடாக மட்டுமல்ல, சமூகப் பொறுப்பின் மூலம் ஏற்பட வேண்டும். பிரபலங்கள், அவர்கள் செய்கிற ஒவ்வொரு நடவடிக்கைக்கும் மக்கள் பின்தொடர்வர் என்பதை உணர வேண்டும்.
மக்களும், சூதாட்டத்தில் வெற்றி கிடைக்கும் என்பதிலான மாயையை தவிர்த்து, உண்மையான உழைப்பில் மட்டுமே நம்பிக்கை வைக்க வேண்டும். எனவே ஆன்லைன் சூதாட்டங்களை எதிர்த்து, சட்டத்தை மட்டுமல்ல, சமுதாய ஒற்றுமையையும் எழுப்பவேண்டும். இல்லையெனில், இது ஒரு தலைமுறையின் வாழ்க்கையே குலைக்கும்.
இதையும் படிங்க: ஆபாச படம் தான் இந்த 'கே-ராம்ப்'..! ரசிகர்கள் குழப்பத்திற்கு விளக்கம் கொடுத்த இயக்குநர் ஜெயின்ஸ் நானி..!