×
 

கச்சேரி பணம் ராணுவத்துக்குத்தான் ஆனா கச்சேரி மட்டும் இப்ப இல்லப்பா.. இளையராஜாவின் பிளான்..!

கச்சேரி கட்டணம் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தான் ஆனால் கச்சேரிய மட்டும் ஒத்திவைக்கிறேன் என இளையராஜா தரப்பு தெரிவித்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.

இசையமைப்பாளர் என்றால் அது இளையராஜா தான். "அன்னக்கிளி" என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் இளையராஜா. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 1000த்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து உள்ளார். அதேசமயம், இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான "பத்ம விபூஷண்" விருது 2018ல் இவருக்கு வழங்கப்பட்டது.

இப்படிப்பட்ட இளையராஜா இதுவரை காயத்திரி, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், சட்டம் என் கையில், அவள் ஒரு பச்சை குழந்தை, முள்ளும் மலரும், பைரவி, உதிரிப்பூக்கள், ஆறிலிருந்து அறுபது வரை, அன்னை ஒரு ஆலையம், குரு, நிழல்கள், காளி, நான் போட்ட சவால், நெஞ்சத்தைக் கிள்ளாதே, எல்லாம் உன் கைராசி, மூடு பனி, ஜானி, முரட்டு காளை, மீண்டும் கோகிலா, ராஜ பார்வை, கர்ஜனை, கழுகு, நெற்றிக்கண், அலைகள் ஓய்வதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, தனிகாட்டு ராஜா, மூன்றாம் பிறை, புதுக்கவிதை, எங்கேயோ கேட்ட குரல், பயணங்கள் முடிவதில்லை, சகலகலா வல்லவன், பாயும் புலி, அடுத்த வாரிசு, தங்கமகன், நான் பாடும் பாடல், கை கொடுக்கும் கை, அன்புள்ள ரஜினிகாந்த், தம்பிக்கு எந்த ஊரு, நான் மகான் அல்ல, வைதேகி காத்திருந்தாள், நல்லவனுக்கு நல்லவன், நூறாவது நாள், 24 மணி நேரம், அம்பிகை நேரில் வந்தாள், இதய கோயில் இன்னும் நிறைய படங்களுக்கு இசையமைத்து உள்ளார். 

இதையும் படிங்க: முதல் முறையாக இளையராஜாவை புகழும் ரசிகர்கள்..! ராணுவத்திற்கு என்ன கொடுத்திருக்கிறார் தெரியுமா..! 

இப்படி இருக்க, இளையராஜா இசையமைப்பதுடன் மேடை நிகழ்ச்சிகளிலும் இசைகளை ரசிகர்கள் மனதில் அலைபாய விடுவதில் வல்லவர். அப்படிப்பட்ட இளையராஜா சமீபத்தில் லண்டனில் 'சிம்பொனி' இசையை 1½ மணி நேரம் அரங்கேற்றி, ஆசிய கண்டத்திலேயே சிம்பொனியை எழுதி அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனை படைத்தார். மேலும், தற்பொழுது வெளியான நடிகர் அஜித்தின் "குட் பேட் அக்லி" படத்தில் இளையராஜாவின் பாடல் பயன்படுத்தியதற்காக ரூ.5 கோடி கொடுக்க வேண்டும் என கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இதனை தொடர்ந்து, சமீபத்தில் கரூரில் இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சியை தனியார் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்த இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளையராவின் குரலை கேட்க ரூ.500 முதல் ரூ.50,000 வரை கட்டணம் வசூலிப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படி இருக்க, பல்லாயிர கணக்கான மக்கள் இளையராஜாவின் குரலை கேட்க, நிறுவனம் சார்பில் கேட்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி விட்டு சென்றனர். ஆனால் உள்ளே சென்ற பின் பாடல்களும் இசைகளும் நன்றாக தான் உள்ளது ஆனால் உள்ளே அமர முறையான இருக்கை வசதிகள் இல்லை. காவல்துறையினர் தங்களை நாயை விட கேவலமாக நடத்தியதாக ஆவேசமாக கூறி, கட்டண ரசீதை கிழித்து விட்டு சென்றனர். 


 
இப்படி இருக்க, இரண்டு தினங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் இளையராஜா தனது எக்ஸ் தளத்தில் " 'வீரம்' - இந்த ஆண்டின் தொடக்கத்தில், நான் எனது முதல் சிம்பொனியை இசையமைத்து, அதற்கு "வேலியண்ட்" என்று பெயரிட்டேன், மே மாதத்தில் நமது உண்மையான ஹீரோக்கள், நமது வீரர்கள் வீரம், தைரியம், தைரியம், துல்லியம் மற்றும் உறுதியுடன் எல்லைகளில் செயல்பட வேண்டும், பஹல்காமில் உள்ள அப்பாவி சுற்றுலாப் பயணிகளின் கொடூரமான கொலைகளை எதிர்க்க வேண்டும். ஜெய பெரிகை கொட்டடா, கொட்டடா, ஜெய பெரிகை கொட்டடா - பாரதி ஒரு பெருமைமிக்க இந்தியனாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும், நமது எல்லைகள் மற்றும் மக்களைப் பாதுகாப்பதற்கும், நமது நாட்டின் துணிச்சலான மாவீரர்களின் "தீரமான" முயற்சிகளுக்காக, "தேசிய பாதுகாப்பு நிதிக்கு" எனது கச்சேரிக் கட்டணம் மற்றும் ஒரு மாதச் சம்பளத்தை ஒரு சிறிய பங்களிப்பாக வழங்க முடிவு செய்துள்ளேன். ஜெய் ஹிந்த்" என தெரிவித்து இருந்தார்.

அந்த வகையில், தனது ஒரு மாத சம்பளத்தையும் தான் நடத்தும் கச்சேரியில் வரும் வருமானத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்த நிலையில், கோவை புதூரில் வரும் 17ம் தேதி நடைபெற இருந்த இசைஞானி இளையராஜாவின் இசைக் கச்சேரி, வரும் மே மாதம் 31ம் தேதி நடைபெறும் என விழா ஏற்பாட்டாளர்கள் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரணம் என பார்த்தால் இந்தியா - பாக்., எல்லையில் பதற்றம் காரணமாக இசை நிகழ்ச்சியை ஒத்தி வைக்க முடிவு செய்யப்பட்டதாகவும், நிகழ்ச்சிக்காக ஏற்கனவே ரசிகர்கள் வாங்கிய டிக்கெட்டுகளை பயன்படுத்தி நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் போரே முடிந்து விட்டது. பின் இளையராஜா ஏன் ஒத்திவைக்கிறார். இளையராஜா கச்சேரி நடத்தி தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருவாரா மாட்டாரா என விமர்சனம் செய்து வருகின்றனர். 
 

இதையும் படிங்க: ரொம்ப வொர்ஸ்ட்..! ஊத்தி மூடிய கரூர் இளையராஜா கச்சேரி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share