×
 

தியேட்டரில் பார்த்ததை வீட்டில் பார்க்க தயாரா.. இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள்..!

இந்த வாரம் ஓடிடியில் நான்கு திரைப்படங்கள் வெளியாகிறது.

வாரம் வாரம் பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கு மவுசு கொஞ்சம் அதிகம் என்றே சொல்லலாம். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் நான்கு படங்கள் வெளியாகி உள்ளன. அதை பற்றி கீழே காண்போம்.  

சுமோ -இயக்குனர் ஹோசிமின் இயக்கத்தில், நடிகர் சிவா கதாநாயகனாகவும், நடிகை பிரியா ஆனந்த் கதாநாயகியாகவும் நடித்துள்ள திரைப்படம் தான் 'சுமோ'. கடந்த மாதம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியான இத்திரைப்படம் பல கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தின் கதை களம் என்று பார்த்தால் மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமாக பார்க்கப்படுகிறது. இப்படி பல விமர்சனங்களைக் கடந்த திரைப்படம் மே 23ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான "டென்ட் கொட்டா" தளத்தில் வெளியாகிறது.

இதையும் படிங்க: என்ன ஆரம்பிக்கலாமா.. பிளாஸ்ட் கன்பார்ம்..! வந்தது விஜய்சேதுபதியின் "Ace" படத்தின் முதல் விமர்சனம்..!

ஹார்ட் பீட் சீசன் 2  - பல இளசுகளை வேலை பார்க்க விடாமல் ஓடிடியிலேயே மூழ்க வைத்த சீரிஸ் என்றால் அதுதான் 'ஹார்ட் பீட்'. மருத்துவமனையில் நடக்கும் அழகான வாழ்க்கை முறையை எதார்த்தமாக காண்பிக்கும் வகையில் எடுக்கப்பட்ட இந்த தொடர், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளது. இப்படி இருக்க, இந்த ஹார்ட்பீட் தொடரின் சீசன் 2, மே 22ஆம் தேதியான இன்றிலிருந்து பிரபல ஓடிடி தளமான "ஹாட் ஸ்டாரில்" வெளியாகிறது.

வல்லமை - பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் கருப்பையா முருகன் எழுத்து இயக்கத்தில், கங்கை அமரனின் மகனும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் தான் வல்லமை. சென்னையில் வாழ்ந்து வரும் பிரேம்ஜி மற்றும் அவரது மகள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்க, பிரேம்ஜியின் மகள் பாலில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட, அதற்குக் காரணமான அனைவரையும் பிரேம்ஜி பழிவாங்கும் படமாக இப்படம் பார்க்கப்படுகிறது. தியேட்டரில் நல்ல வரவேற்பு பெற்ற இத்திரைப்படம் மே 23ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான "ஆஹா" ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

 ஹண்ட்  - கிரைம் திரைப்படமாக பார்க்கப்படும் ஹண்ட்  திரைப்படத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்பு கதாநாயகியாக நடித்து இருக்கிறார் பாவனா. இத்திரைப்படத்தில் தடையவியல் மருத்துவராக நடித்துள்ள அவர், ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பல திடுக்கிடும் தகவல்களையும் உண்மைகளையும் பல தடைகளைத் தாண்டி கண்டறியும் விதமாக இருந்தது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த சூழலில் இப்படம் மே 23ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான "மனோரமா மேக்ஸ்" தளத்தில் வெளியாகிறது.

இப்படி நாளை நடிகர் விஜய் சேதுபதியின் "Ace" படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் ஓடிடியிலும் நான்கு படம் ரிலீஸ் ஆக இருப்பதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 

இதையும் படிங்க: ரஜினி படம் எனக்கு பிடிக்கும்.. ஆனால் அதுவும் என்படம் தான்..! தொகுப்பாளரை குழப்பிய கமல்ஹாசன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share