×
 

ரஜினி படம் எனக்கு பிடிக்கும்.. ஆனால் அதுவும் என்படம் தான்..! தொகுப்பாளரை குழப்பிய கமல்ஹாசன்..!

கமல்ஹாசன் தனக்கு பிடித்த படங்களை கூறுகையில் ரஜினியின் படத்தையும் குறிப்பிட்டு உள்ளார். 

பல ஆண்டுகளாக படங்களை ஓட விட்டவர் சிறிது காலமாக பிக்பாஸில் அனைவரையும் ஓட விட்டார் என்றால் அவர்தான் நடிகர் கமல்ஹாசன். இவரது நடிப்பு, சிரிப்பு, அழுகை என உணர்ச்சி பூர்வமான நடிப்பு பலரையும் கலங்கடித்து உள்ளது. ஆதலால் தான் மக்கள் அவருக்கு அன்புடன் வைத்த பெயர் 'உலக நாயகன் கமலஹாசன்'. இப்படி பட்ட இவர், நடிகர் மட்டுமல்லாமல் கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப்பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக சினிமாவில் போற்றப்படுகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும், "ராஜ்கமல் பிலிம்ஸ்" என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.

திரையுலகில் குழந்தையிலேயே நடிப்பில் நட்சத்திர நாயகன் பட்டத்தை வென்ற கமல், இதுவரை அபூர்வ ரகங்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே, சட்டம் என் கையில், சிகப்பு ரோஜாக்கள், நட்சத்திரம், குரு, வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிலா, தில்லு முல்லு 1981, ராஜ பார்வை, மூன்றாம் பிறை, அக்னி சாட்சி, உருவங்கள் மாறலாம், நாயகன், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், குணா, பகடை பன்னிரண்டு, சிங்காரவேலன், தேவர் மகன், மகராசன், கலைஞன், மகாநதி, மகளிர் மட்டும், நம்மவர், குருதிபுனல், சதி லீலாவதி, அவ்வை சண்முகி,

இதையும் படிங்க: "திடீர் தளபதிக்கு வந்த திடீர் சிக்கல்".. சிவகார்த்திகேயனை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்..!

இந்தியன், உல்லாசம், காதலா காதலா, தெனாலி, ஹே ராம், பார்த்தாலே பரவசம், ஆளவந்தான், பஞ்சதந்திரம், பம்மல் கே. சம்பந்தம், அன்பே சிவம், விருமாண்டி, வசூல் ராஜா எம் பி பி எஸ், மும்பை எக்ஸ்பிரஸ், நள தமயந்தி, புதுப்பேட்டை, வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், உன்னைப் போல் ஒருவன், மன்மதன் அம்பு, அன்புள்ள கமல், விஸ்வரூபம், பாபநாசம், தூங்காவனம், உத்தம வில்லன், மீன் குழம்பும் மண் பானையும், விஸ்வரூபம் 2, விக்ரம், லியோ, இந்தியன் 2, தக் லைஃப், உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். 

இப்படி பல படங்களில் நடித்தாலும் சினிமா உலகில் பல ஏற்ற தாழ்வுளை கண்ட கமல்ஹாசன் நீண்ட நாட்களாக அமைதியாக இருந்தார். ஆனால் அவருடைய காத்திருப்புக்கு பலனாக வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவரை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கி, மீண்டும் கமல்ஹாசன் என்ற பெயரை மக்கள் மனதில் ஒலிக்க செய்தார். இப்படி பட்ட கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய பொறுப்பு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தற்பொழுது சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்கு துறையின் வியாபார அமைப்பான 'பிக்கி' அதாவது இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு குழுவின் தெற்கு மண்டல தலைவராக கமல்ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.  

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் தற்பொழுது மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில்  ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாக தயாராக இருக்கும் தக்லைஃப் படத்தில் நடித்து இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். இப்படி இருக்க இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், தனது பாலிய ஸ்நேகிதனான ரஜினியின் படத்தை குறித்து பேசி இருக்கிறார் உலக நாயகன். 

அந்த வகையில், தனியார் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், " நடிகர் கமலஹாசனிடம் தொகுப்பாளர், ரஜினிகாந்த் உங்களது நண்பர் அவரது நடிப்பில் உங்களுக்கு பிடித்த படம் எது? என கேட்டு உள்ளார். இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், எனக்கு ரஜினிகாந்த் படத்தில் மிகவும் பிடித்த படம் என்றால் "முள்ளும் மலரும்" படம் தான். ஏனெனில் ஒரு முறை நானும் ரஜினிகாந்த்தும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசினோம். அப்பொழுது நாங்கள் எடுத்த முடிவு என்னவென்றால் நான் 'முள்ளும் மலரும்' போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்றும் அவர் 'பாட்ஷா' போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்றும் முடிவு செய்தோம். நடிகர் ரஜினிகாந்தின் அபூர்வ ராகங்கள் படத்தில் சூப்பர் ஹிட் வில்லன் ஆக நடித்திருந்தது நான்தான். நான் கூறிய இந்த முள்ளும் மலரும் படமானது உருவாகும் வேளையில் நான் மிகுந்த அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். 

உண்மையை சொல்ல வேண்டுமானால் அதுவும் என்னுடைய திரைப்படம் தான். அந்த திரைப்படத்தில் முதலில் நானும் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க வேண்டி இருந்தது. ஆனால் நான் நடிக்கவில்லை. ஒருவேளை நானும் இந்த படத்தில் நடித்திருந்தேன் என்றால் நாங்கள் நடித்த படத்தில் இன்னொரு படம் என்ற லிஸ்டில் இப்படமும் இணைந்திருக்கும். ஒன்றாக நடித்த நாங்கள் இருவரும், தனித்தனி பாதைகளை தேர்ந்தெடுத்து இன்று இரு துருவ நட்சத்திரங்களாக இருந்தாலும் நாங்கள் இருவரும் இன்றும் நண்பர்களாகவே இருக்கிறோம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் கமல்ஹாசன்.

இதையும் படிங்க: என்ன ஆரம்பிக்கலாமா.. பிளாஸ்ட் கன்பார்ம்..! வந்தது விஜய்சேதுபதியின் "Ace" படத்தின் முதல் விமர்சனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share