என் புருஷன காணோம்.. டி.என்.ஏ டெஸ்ட் வேற எடுக்கனும்.. மாதம்பட்டியை கண்டுபிடிச்சி தாங்க..! Fun mode-ல் ஜாய் கிரிசில்டா.!
ஜாய் கிரிசில்டா, டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க சொன்ன மாதம்பட்டியை காணவில்லை என கூறியிருக்கிறார்.
தமிழகத்துல யாரு எங்கே என்ன செஞ்சாங்கன்னு தெரிஞ்சிக்க சினிமா விவகாரமோ, அரசியல் பொங்கலோ தேவையே இல்லை. சமையல் ஷோவுல பிரபலமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஃபேஷன் உலகத்துல செம பாபுலர் ஆன ஜாய் கிரிசில்டா ஆகிய இருவரும் சேர்ந்து இப்போ சமூக வலைதளத்தையே ஓரே ஒரு த்ரில்லர் சீரியலா மாற்றிட்டாங்க. இந்த கோர்ட்-ட்ராமா + ரியாலிட்டி ஷோ + மெலோட்ராமா எல்லாமே ஒரு கதைதான்.
மகளிர் ஆணையம் serious ஆக சும்மா பாவம் உட்கார்ந்திருக்க முடியல. காதல், கல்யாணம், பேபி என எல்லாம் சரி… ஆனா ஏன் இப்படியே குட்டி கதையோட கிளைமாக்ஸ் மாறுது? ஜாய் கிரிசில்டா ஷாக்கிங்-ஆன புகார் கொடுத்தது தான் இந்த கேஸுக்கு ஸ்டார்ட். அவரோட சொற்கள்ல, "ரங்கராஜ் என்னை காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் ஏமாற்றிட்டார்" என்ற இந்த புகார் மகளிர் ஆணையத்துக்கு போனது. விசாரணை நடக்குது. இதே சமயத்துல அவர் ஒரு ஆண் குழந்தைக்கு தாயானார். "இந்த பேபி யாரோடது?" என்ற கேள்வியே இப்போ டிவி டிபேட்டுக்கு மேட்டரா மாறிடுச்சு. ஜாய் கிரிசில்டா திடீரென ஒருநாள் "விசாரணையில் ரங்கராஜ் எல்லாம் ஒத்துக்கிட்டார்" என சொன்னார். அடுத்து ஜாய் கிரிசில்டா திடீர்னு மீடியாவுக்கு மீண்டும், "மகளிர் ஆணைய விசாரணையிலே அவர் என்னை காதலிச்சதும், கல்யாணம் செய்ததும், பேபி அவருடையது என்பதும் ஒப்புக்கொண்டார்" என சொன்னார்.
ஆனா அடுத்த சாட்டா கிளைமாக்ஸில், ரங்கராஜ்: “ஓய்... நான் ஒத்துக்கொண்ல்லவே இல்ல.. டிஎன்ஏக்கு நான் ரெடி” என சொன்னார். இப்படியாக ரங்கராஜ் உடனே வெளியே வந்து பேசியது பலரையும் “ஓவ்…”ன்னு ஆச்சரியப்பட வைத்தது. அவர் சொன்னது: "நான் எந்த ஒப்புதலையும் தரல, நான் டிஎன்ஏ டெஸ்டை மறுக்கலை, பேபி என்னோடதுன்னு விஞ்ஞான ரீதியிலே நிரூபணமா வந்தா, வாழ்நாள் முழுக்க நான் அந்த குழந்தையை கவனிக்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: திடீரென வந்த ஷாக்கிங் நியூஸ்..! அவசர அவசரமாக கோவாவிற்கு பறந்த சிவகார்த்திகேயன்...!
இவ்வளவு போட்டாச்சுன்னா கேஸ் முடிஞ்சுரும். ஆனா… கதையின் ட்விஸ்ட் இதுக்கு அப்புறம்தான். ஏனென்றால் ரங்கராஜ் சொன்ன சொல்லு அப்படி… ஆனா டிஎன்ஏ டெஸ்ட் சொல்லி 15 நாளாச்சு அவர் மாயம். இன்ஸ்டாகிராம் எடுத்துட்டு ஒரு சூப்பர் தேங்காய் உடைக்கும் ஸ்டோரி ஒன்றை ஜாய் கிரிசில்டாவின் FIRE ஸ்டோரியாக மாற்றி பதிவிட்டு இருக்காங்க. அதுல “என் கணவர் மாதம்பட்டி ரங்கராஜை யாராவது பார்த்தா சொல்லுங்க—டிஎன்ஏ டெஸ்டுக்கு வரணும். 15 நாளாச்சு அவர் ஸ்டேட்மெண்ட் கொடுத்ததுக்கு. இப்போ எங்க தலைமறைவா இருக்காரு? தைரியம் இருந்தா டெஸ்டுக்கு வாங்க கணவரே!” என பதிவிட்டு மறுபடியும் சூட்டை கிளப்பி இருக்கிறார். இந்த ஒரு ஸ்டோரி போதும்.. சோஷியல் மீடியா ஓரே வெடிகுண்டு மழையாக வெடித்து வருகிறது.
நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்ஸ் – காமெடி, கோபம், கலாய்ப்பு… எல்லாம் கலக்குது. அதிலும் “ரங்கராஜ் அண்ணே, இடம் சொல்லுங்க… ச்சே, டிஎன்ஏ டெஸ்டு தான கொடுங்க..” “DNA டெஸ்டு சிக்குனா கிளைமாக்ஸ் வந்துரும்… அதனாலதான் ஓடிப்போனாரா?” “இந்த கேஸ் Netflix-ல வந்தா பாத்துட்டு தூங்குவோம்.” என பலரும் கலாய்த்து வருகின்றனர். இப்படி ரங்கராஜின் பக்கம் இன்னும் சத்தம் இல்லை… இதோ திரையுலக பெரிய சஸ்பென்ஸ் என்னன்ன, ரங்கராஜ் எங்கே?, ஏன் வர மாட்டேங்குறார்?, அல்லது இதெல்லாம் ஒரு "ஸ்ட்ராடஜியா"? என பல கேள்வி வருது. டிஎன்ஏ டெஸ்ட் தான் இந்த கதைக்கு இறுதி முடிவு. ஆனா டெஸ்ட் செய்ய ஹீரோ செட்-லே இல்லையேன்னா எப்படி ஷூட் நடக்கும்? அடுத்தது என்ன? இது மட்டும் ஒரு வழக்கு இல்ல, இருவரும் பிரபலங்கள் என்பதால் தமிழ்நாடு முழுக்க இது மக்கள் கேள்வியா மாறிட்டது. மகளிர் ஆணையமும் காத்திருக்கிறது.
ஜாய் கிரிசில்டா கத்தோ கத்துன்னு காத்தினாலும். ரங்கராஜ் என்னமோ சைலன்ஸ் தான். இந்த கதை எங்க போகுது?, டிஎன்ஏ டெஸ்டு நடந்தா என்ன வரும்?, சர்ச்சை யாருக்கு சாதகமாக முடியும்? என ரசிகர்கள் popcorn எடுத்துட்டு இந்த ரியல் லைஃப் சீரியலை பார்க்க ரெடியா இருக்காங்க. ஆனா கிளைமாக்ஸ் தான் இதுவரை வரல.. ஆனா சுவாரசியம் மட்டும் குறையவே இல்லை.
இதையும் படிங்க: நயன்தாராவுக்கு போட்டியாக அட்லீ இறக்கிய காஸ்ட்லி ரதம்..! இந்தியாவிலேயே இந்த கார் இவர் கிட்டதான் இருக்காம்..!