இளையராஜா - வனிதா விஜயகுமார் பாட்டு விவகாரம்..! நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பால் ஷாக்கில் இசைஞானி..!
இளையராஜா - வனிதா விஜயகுமார் பாட்டு விவகாரத்தில் நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பால் இசைஞானி அதிர்ச்சியில் உள்ளார்.
தமிழ் சினிமாவில் இசைக்கு அரசர் என புகழப்படுவதுடன் யாரும் எதிர்பாராத வகையில் பல பாடல்களை இசையமைத்து இன்று புகழின் உச்சியில் மணிமகுடம் சுடப்பட்டு அமர்ந்திருப்பவர் தான் இசைஞானி இளையராஜா. இப்படிப்பட்டவர் பார்க்க அன்பானவராக இருந்தாலும் அவரது பாடல்களை தொட்டாலோ பயன்படுத்தினாலோ நரசிம்மாவை விட பயங்கரமாக வெடிப்பார். அப்படி தான் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இருந்து வரிசையாக அவரது பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கொண்டே வருகிறார். இப்படி தனது புகழ்பெற்ற பாடளை அனுமதி இல்லாமல் பயன்படுத்திய வரிசையில் அவரிடம் வசமாக சிக்கி இருக்கிறார் நடிகை வனிதா விஜயகுமார். அவரது மகள் இயக்கிய திரைப்படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிரடியாக வழக்குத் தொடர்ந்துள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி மற்றும் நடித்துள்ள 'மிசஸ் அண்ட் மிஸ்டர்' திரைப்படம் கடந்த ஜூலை 11ம் தேதி அனைத்து திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஒட்டிக்கொண்டு இருக்கிறது. இத்-திரைப்படத்தில் வனிதாவின் முன்னாள் காதலனாக, நடன இயக்குநராக பெயர் பெற்ற ராபர்ட் நடித்துள்ளார். இப்படம் காதல், திருமணம் மற்றும் குடும்பம் தொடர்பான உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒரு சமூக பின்னணி கொண்ட படமாக பார்க்கப்படுகிறது. இப்படி இருக்க, இந்தப் படத்தில் 1990 களில் வெளியான 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் இளையராஜா இசையமைத்த "ராத்திரி சிவராத்திரி தூக்கம் போச்சு…" என்ற பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பாடல் தமிழ்ச் சினிமாவில் ஒரு கல்டு ஹிட் பாடலாக இருப்பதோடு, ரசிகர்களிடம் இன்றும் பிரபலமான பாடலாகவே உள்ளது. இதனால் தனது உரிமையை விட்டுக்கொடுக்காத இளையராஜா தற்பொழுது இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "எனது இசையமைப்பால் உருவான பாடலான ‘சிவராத்திரி’ எனும் பாடலை, இயக்குநர் வனிதா விஜயகுமார், தன்னிடம் உரிமை பெறாமல் 'மிசஸ் அண்ட் மிஸ்டர்' படத்தில் பயன்படுத்தியுள்ளனர்.
இது மட்டுமல்லாமல், படத்தின் விளம்பரத் தகவல்களில் என் பெயர் அனுமதியின்றி சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். இந்த வழக்கு ஜூலை 15-ம் தேதி நீதிபதியின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது படம் வெளியாகிவிட்ட நிலையில், இளையராஜாவின் மனுவிற்கு எதிராக, வனிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்தப் பாடலைப் பயன்படுத்தும் உரிமை, பாடலின் வெளியீட்டு உரிமை வைத்துள்ள சோனி நிறுவனத்திடம் இருந்து முறையாக பெறப்பட்டுள்ளது. எனவே, எங்களிடம் உரிய உரிமம் உள்ளது. இந்நிலையில், இளையராஜா தொடர்ந்த வழக்குக்கு விரிவான பதிலை விரைவில் தாக்கல் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்" எனக் கூறினார். பின், இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, "திரைப்படம் தற்போது வெளியிடப்பட்டுவிட்டது. இதற்குப் பிறகு, திரைபடத்தின் வெளியீட்டிற்கு தடை விதிக்க முடியாது.
இதையும் படிங்க: இசைஞானி பாடலை தொட்டாலே ஷாக் தான்.. ரிலீசான இன்றே வந்த சிக்கல்.. தலையை பிய்த்து கொள்ளும் வனிதா..!
ஆனால், உரிமையாளருக்கு ஏற்பட்ட இழப்பீட்டை பற்றிய விவகாரத்தில், அவர் விருப்பப்பட்டால், இழப்பீடு கோரி வழக்குத் தொடரலாம்" எனக் குறிப்பிட்டார். மேலும், வனிதா தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பி, விவரமான பதிலை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கு, தமிழ் திரைப்படத் துறையில் இசையமைப்பாளர்களின் காப்புரிமை, பாடல் உரிமைகள், மற்றும் பாடல் பயன்பாடுகள் தொடர்பான சட்ட விளக்கங்களை மீண்டும் ஒரு முறை பேசும் அளவிற்கு மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, இளையராஜா தனது பழைய பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தும் படக்குழுக்களிடம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த சூழலில், நடிகை வனிதா விஜயகுமார், 'மிசஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் மூலம் ஒரு முழுமையான படைப்பாளராக மாறியுள்ளார். தனது வாழ்க்கையின் அனுபவங்களை பிரதிபலிக்கும் படியான சினிமாவை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அவர், சமீப காலமாக சமூக வலைதளங்களில் தனது கருத்துகளை அதிகளவில் பகிர்ந்து வருகிறார். இப்படம் அவரது நேர்மை மற்றும் தைரியத்தின் ஒரு வெளிப்பாடு எனக் கருதப்படுகிறது. ஆனால், இப்பாடல் உரிமை தொடர்பான விவகாரம் தற்பொழுது இணையத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது. இளையராஜா மற்றும் வனிதா இடையிலான இந்த வழக்கு, இசையை உருவாக்கும் கலைஞரின் உரிமைகள், தயாரிப்பாளர்கள் மற்றும் வெளியீட்டு நிறுவனங்களிடமிருந்து எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைக் கேள்விக்குள் கொண்டு வருகிறது. மேலும், இந்த வழக்கு எப்படி முடிவடைய போகிறது அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்கும் என மக்கள் ஆவலாக பார்த்து வருகின்றனர்.. வரும் ஜூலை 21ம் தேதி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையில் வனிதா தரப்பு தாக்கல் செய்யும் பதிலின் அடிப்படையில் இந்த வழக்கின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும்.
இது சினிமா சுதந்திரம் மற்றும் கலைஞர்களின் உரிமைகள் என்ற இரண்டு முக்கியக் கண்ணோட்டத்தை பார்க்கும் ஒரு வழக்காகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இளையராஜா வீட்டு மருமகளாக வேண்டியவள் நான் - சர்ச்சை...! நடிகை வனிதா விஜயகுமார் அதிரடி விளக்கம்..!