×
 

இந்தியா பாகிஸ்தான் போரால் எல்லாம் போச்சு..! அறிக்கை வெளியிட்டு கதறிய பாடகி..!

இந்த போர் முடியும் வரை எதுவும் முக்கியமில்லை பாதுகாப்புதான் முக்கியம் என பேசியுள்ளார் பாடகி ஸ்ரேயா.

பாகிஸ்தான் நடத்திவரும் மோசமான தாக்குதல்களை இந்திய ராணுவம் விழிப்புடன் இருந்து முறியடித்து வருகிறது. "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் மே மாதம் 7ம் தேதி நடத்தப்பட்ட இந்தியாவின் அதிரடி தாக்குதலில், பாக்கிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டதாகவும், அதில் சுமார் 30ற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் மத்திய அரசு தகவல்கள் தெரிவித்தது. இந்த தாக்குதலை பற்றி குறிப்பிடுகையில் 9 இடங்கள் தாக்கப்பட்டது.

இந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப் பகுதிகளில் இரவு நேரத்தில் பாகிஸ்தான் ட்ரோன்கள் அத்துமீறி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் இந்த மோதல் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மோசமான சூழல் உருவாகி வருகிறது. மேலும், பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை பகுதிகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை அடுத்து, இந்தியாவில் உள்ள பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், ஜம்மு, காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் இந்திய விமானப்படைத் தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன.

இதையும் படிங்க: பட வாய்ப்பு வேணும்னா கிளாமர் லுக்ல மாறனுமாமே.. ஸ்ருஷ்டி டாங்கே 'நச்' கிளிக்..!

ஆனால் இந்திய விமானப்படை அதற்கு கொஞ்சமும் இடம் கொடுக்காமல் தகுந்த பதிலடி கொடுத்து, பாகிஸ்தான் ட்ரோன்களை நடுவானிலேயே சுட்டு வீழ்த்தி உள்ளது. இந்த தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாத இந்திய ராணுவம் உடனே, பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி, சியால்கோட் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இப்படியான இந்த பதற்றமான சூழலில் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வண்ணம் ஐடி ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடு பயணங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் முதல் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்த சூழலில், மூன்றாவது நாளாக இன்று நள்ளிரவில் மீண்டும் பாகிஸ்தான் தனது ட்ரோன்களை வைத்து காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 26 நகரங்களை குறிவைத்து தனது தாக்குதலை நடத்தியது. இதனை சுதாரித்த இந்திய ராணுவம் தனது வான்வழி தாக்குதலால் அனைத்து ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியது. மேலும், ஜம்மு காஷ்மீர் எல்லையில் எதிரி படைகளை எதிர்த்து போராடி வீர மரணம் அடைந்த ஆந்திரப்பிரதேஷ் மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், சுல்லி தண்டாவைச் சேர்ந்த முரளி நாயக்கின் தியாகம் தற்பொழுது அனைத்து இந்திய மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இப்படி இருக்க, நடிகர் கமல் ஹாசன் மக்கள் நலன் கருதி தனது "தக் லைஃப்" படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஒத்திவைத்துள்ளார். அவரை தொடர்ந்து பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷல் தனது பாடல் கான்சர்ட் நிகழ்ச்சியை ஒத்திவைத்துள்ளார். இதனை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என் அன்பான ரசிகர்களே, ஆல் ஹார்ட்ஸ் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, 2025 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி ஜியோ வேர்ல்ட் கார்டனில், பிகேசி மும்பையில் திட்டமிடப்பட்ட எனது ஹோம்கமிங் கச்சேரி, எங்கள் அன்புக்குரிய நாட்டில் நடக்கும் தற்போதைய நிகழ்வுகளால் ஒத்திவைக்கப்படும் என்பதை கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 
இந்த கச்சேரி எனக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக கருதினேன், மேலும் உங்கள் அனைவருடனும் ஒரு சக்திவாய்ந்த மாலைப்பொழுதை பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்து கொண்டு இருந்தேன். ஆனால், ஒரு கலைஞனாகவும், குடிமகனாகவும், இந்த நேரத்தில் தேசத்துடன் ஒற்றுமையாக நிற்க வேண்டிய ஆழமான பொறுப்பை நான் உணர்கிறேன். இந்த அறிவிப்பு ரத்து அல்ல, ஒத்திவைப்பு தான் என்பதை உறுதியளிக்கிறேன். நாம் அனைவரும் விரைவில் ஒன்றிணைவோம், முன்பை விட வலிமையாகவும், ஒற்றுமையாகவும் இருப்போம்.

கச்சேரிக்கான புதிய தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும், மேலும் வாங்கிய அனைத்து டிக்கெட்டுகளும் மீண்டும் திட்டமிடப்பட்ட கச்சேரிக்கு செல்லுபடியாகும். எங்களின் பிரத்யேக டிக்கெட் பார்ட்னர், BookMyShow - வின் அறிவுறுத்தல்கள் மற்றும் புதுப்பிப்புகளுடன் அனைத்து டிக்கெட் வைத்திருப்பவர்களையும் சென்றடையும். முன்கூட்டியே உங்கள் புரிதலுக்கும் ஆதரவிற்கும் அனைத்திற்க்கும் நன்றி. அதுவரை, பாதுகாப்பாக இருங்கள் மற்றும் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்ளுங்கள். என்றும் அன்புடன், ஸ்ரேயா கோஷல் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நோர்வே திரைப்பட விழாவில் கலைமகன் விருது பெற்றார் நடிகர் சௌந்தரராஜா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share