×
 

'முத்த மழை' பாடலுக்கு ரோபோ ஷங்கர் மகள் செய்த வேலையை பாருங்க..! என்னமா இப்படி பண்ணுறீங்களேமா..!

தக் லைஃப் முத்த மழை பாட்டுக்கு தண்டனை கொடுத்த ரோபோ சங்கர் மகள்

வாழ்க்கையில் பல உருவ கேலிகளையும் கடந்து பல அவமானங்களையும் வேதனைகளையும் கடந்து தனது முழு திறமையால் பல ரசிகர்களை கையிக்குள் வைத்திருப்பவர் தான் இந்திரஜா சங்கர். இவர் பிரபல காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மகள் ஆவார்.இவர் விருகம் மற்றும் அட்லியின் பிகில் திரைப்படத்தில் நடித்திருப்பார். அதில் காமெடி நடிகர் விவேக் "பாண்டியம்மா வெறியான படுத்திடும் ஹரியானா" என இவரைக் குறித்து டயலாக் கூற, அதற்கு ஏற்றார்போல் ஒரே அடியில் ரெஃப்ரியை, ஏரில் பறக்க வைத்திருப்பார் இந்திரஜா.

இப்படியிருக்க, இப்படத்தின் காட்சியில் இவரை நடிகர் விஜய் "குண்டம்மா" என்று கூறியதாக பல மகளிர் சங்கங்கள் முதல் அநேக தரப்பினர் விஜயை குறை சொல்லி மன்னிப்பு கேட்கும் படி கண்டன கோஷங்களை கொட்டி தீர்த்தனர். ஆனால் அவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திரஜா சங்கர், அக்காட்சி நடித்து முடித்த உடனே, நடிகர் விஜய் பலமுறை தன்னிடம் 'மன்னிப்பு' கேட்டதாக கூறி அனைவரது வாயையும் அடைத்தார்.

இதையும் படிங்க: இது படமா.. சேகர் கம்முலா இப்படி பண்ணுவாருன்னு நினைக்கல..! குபேரா படம் குறித்து நடிகை சாய் பல்லவி கருத்து..!

இந்த நிலையில் திடீரென நடிகர் ரோபோ சங்கர் மற்றும் அவரது மனைவி இருவரும் தங்களது உடல் எடைகளை குறைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தனர். அது மட்டுமல்லாது  வாழ்க்கையில் இனி யாரும் குடிக்காதீர்கள் தவறான பழக்கங்கள் எதுவும் வேண்டாம், அது உங்கள் உடம்பையும் வாழ்க்கையும் கெடுத்து விடும் என்று அனைவருக்கும் அறிவுரையும் கூறி வருகின்றனர். இந்த சூழலில், திருமணம் ஆன பொழுது நெட்டிசன்கள் பல தவறான கருத்துக்களையும் மனதை நோகடிக்கும் வகையிலும் பேசி வந்த நிலையில், அந்த நெகட்டிவிட்டி கமெண்ட்ஸ்கள் அனைத்தையும் பாசிட்டிவ் ஆக்கினார் இந்திரஜா சங்கர். இதனை தொடர்ந்து தற்போது அவர் ஆண் குழந்தையும் பெற்றெடுத்திருக்கிறார். மேலும், சமீபத்தில் கமல்ஹாசன் கையால் தனது மகனுக்கு “நட்சத்திரன்” என்ற அழகிய பெயரை பெற்று அதிரடியான போட்டோ ஷூட்களை நடத்தி வெளியிட்டார். 

இதனை தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தனது திறமையை காட்ட துளியும் அஞ்சாத பெண் சிங்கமான இந்திரஜா சங்கர், உடனே அதனை செய்து காண்பித்து விடுவார். இதனாலேயே இவருக்கு என தனி ஃபாலோவர்ஸுகள் உள்ளனர். இப்படி இருக்க, சமீபத்தில் மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாக தயாராக இருக்கும் தக்லைஃப் படத்தில் நடித்து இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். இப்படி இருக்க இத்திரைப்படம் ஜூன் மாதம் 5ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியானாலும் படம் சரிவர ஓடவில்லை. ஆனாலும் இப்படத்தில் பாடகி சின்மயி பாடிய முத்த மழை பாடல் பலரது பாராட்டை பெற்று உள்ளது. 

இந்த நிலையில், இந்திரஜா சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முத்த மழை பாட்டிற்கு அழகாக ஆக்ஷ்ன்களை செய்து முக பாவனைகளை அழகாக காண்பித்து ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த மணிரத்தினம் பேசாமல் இவரையும் படத்தில் நடிக்க வைத்து இருக்கலாமோ என நினைத்து கொண்டு இருக்கும் அளவிற்கு இந்த ரீல்ஸ் உள்ளது என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: படத்தில் ராஷ்மிகா எங்கப்பா..! 'குபேரா' படத்தை இன்னும் பாக்கலையா அப்ப இத பாத்துட்டு போங்க..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share