மகள் கல்யாணத்தில் களமிறங்கிய பிரபலங்கள்..! உறவுகளை ஆட்டம் காண வைத்த ஐசரி கணேஷ்..!
ஐசரி கே கணேஷ் மகள் திருமணவிழாவில் கலந்து கொண்ட பிரபலங்களை பார்த்து ரசிகர்கள் அசந்து போயினர்.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தாவின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ், பிரபு, விக்ரம்,. ரவி, மணி ரத்னம், ஆதிக் ரவிச்சந்திரன்,
வெற்றி மாறன், பி.வாசு, மாரி செல்வராஜ், ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.
பல கோடி ரூபாய செலவு செய்து பிரமாண்டமாக தனது மகளின் திருமணத்தை நடத்தியுள்ளார் ஐசரி கணேஷ்..
நாளைய தினம் தனது மகளின் ரிசப்ஷனை பிரமாண்டமாக அனைவரும் பார்க்கும் வகையில் சென்னையில் வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து 250 பிரபலங்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களை தனி விமானம் மூலம் மாலத்தீவுக்கு அழைத்து சென்று ட்ரீம் வெட்டிங் ஒன்றும் நடைபெறவுள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: உங்க வீட்லயா குண்டு போடுறாங்க.. அசிங்கமா இல்ல..! பிரபலங்களை கிழித்து தொங்க விட்ட நெட்டிசன்கள்..!
மேலும் இந்த திருமண விழாவில் துர்கா ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு, முன்னாள் அமைச்சர்கள்
செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, நாதக-வின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காலை உணவு மெனு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, வட இந்தியா ஆகிய பகுதிகளின் முக்கியமான காலை உணவு வகைகளையும் இங்கு தயார் செய்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: திருப்பி அடிச்சா தாங்க மாட்ட..! பாக். தாக்குதலுக்கு பார்த்திபன் காட்டமான பதிவு..!