பணம் பெருசில்ல மனிதநேயம் தான் பெருசு..! சொத்துக்களை தானமாக வழங்கிய ஜாக்கிசான்..!
பல கோடி சொத்தை ஏழைகளுக்கு தானமாக வழங்கி இருக்கிறார் ஜாக்கிசான்
பல கோடி சொத்தை ஏழைகளுக்கு தானமாக வழங்கி இருக்கிறார் ஜாக்கிசான் இந்தியா மட்டுமல்ல உலக அளவில் எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்கள் இருந்தாலும், ஆசியாவிலேயே சிறந்த சூப்பர் ஸ்டார் என்றால் அது ஜாக்கிஜான் மட்டும் தான். ஆசியாவையே கலக்கி வரும் ஜாக்கி ஜான், 1954-ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி ஹாங்காங்கில் உள்ள விக்டோரியா பிக்கில் பிறந்தார். இன்று மக்கள் அனைவராலும் ஜாக்கிசான் என அழைக்கப்படும் இவரது உண்மையான பெயர் 'சான் காங் சான்'.
இன்று தயாரிப்பாளராக, இயக்குனராக, ஸ்டன்ட் மாஸ்டராக, நடிகராக புகழின் உச்சியில் இருக்கும் நடிகர் ஜாக்கிஜான், தனது வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்து மேலே வந்தவர். பெரிதாக தனக்கு படிப்பு வரவில்லை என்றாலும் பெற்றோரை தொல்லை செய்யாமல் ஹோட்டலில் கூட வேலை பார்த்து தனது வாழ்க்கையை நடத்தியவர். அப்படிப்பட்ட ஜாக்கிஜான் தனது எட்டாவது வயதில் 'லிட்டில் ஃபார்ச்சூன்ஸ்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானார். இதனை அடுத்து, பல வருடங்களாக அமைதியாக இருந்த ஜாக்கிஜான் தனது 17-வது வயதில் புரூஸ்லீயின் "பீஸ்ட் ஆப் ஃப்யூரி" மற்றும் "என்டர் தி டிராகன்" ஆகிய படங்களில் சண்டை கலைஞராக மிகவும் அற்புதமாக பணியாற்றினார். இவரது ஸ்டைல் மற்றும் ஆக்ஷனில் கவர்ந்து இழுக்கப்பட்ட புரூஸ்லி, கண்டிப்பாக ஒருநாள் ஜாக்கிஜனை நடிகராக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.
இதையும் படிங்க: ரோஸ் கலர் சேலையில்.. கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்ற அதுல்யா ரவி..!
இதனை அடுத்து 1971-ம் ஆண்டு புரூஸ்லீ ஆசைப்பட்டதை போல ஜாக்கிஜான் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு 'லிட்டில் டைகர் ஆஃப் காண்டூன்' என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து பல சிறு வேடங்களில் நடித்த ஜாக்கிஜான் 1976-ம் ஆண்டு புரூஸ்லீ இடத்தில் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டார். ஆனால் புரூஸ்லீ போல தற்காப்பு கலை வராததால் அப்படம் தோல்வியில் முடிந்தது.
இதனை அடுத்து 1978-ம் ஆண்டு தயாரிப்பாளர் வில்லிசானின் இயக்கத்தில் வெளிவந்த "ஸ்நேக் இன் தி ஈகிள் ஷேடோ" என்ற படம் ஜாக்கிஜானுக்கு வெற்றி படமாக அமைந்தது. இதனை அடுத்து அவர் நடித்த அனைத்து படங்களிலும் இருந்த நகைச்சுவை கலந்த சண்டை காட்சிகள் மக்கள் அனைவருக்கும் பிடித்து போக ஜாக்கிஜனை சூப்பர் ஸ்டார் ஆக ஏற்றுக்கொண்டனர். இதனை அடுத்து 1982-ம் ஆண்டு தைவான் நடிகை ஜோன் லிங்கை திருமணம் செய்து கொண்டார் ஜாக்கிஜான்.
இவர்கள் இருவருக்கும் ஜேசி சான் என்ற மகனும் உள்ளார். இந்த சூழலில், ஒரு முறை அவரது மகன் போதை வழக்கில் சீன அரசாங்கத்தால் சிறைபிடிக்கப்பட்ட பொழுது, ஜாக்கிஜான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். தன் மகனை தான் சரியாக வளர்க்கவில்லை என்றும் அதற்காக வெட்கப்படுகிறேன் என்றும் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியடைந்த நான் ஒரு தந்தையாக தோற்றுவிட்டேன் எனவும் கூறி இருந்தார். அவரது நேர்மையான பேச்சுக்களும் நேர்மையான நடவடிக்கைகளுமே இன்று வரை அவரை சூப்பர் ஸ்டார் ஆக வைத்துள்ளது.
இப்படி இருக்க, தனது சொத்துக்களை ஏழை எளிய மக்களுக்கு தானமாக வழங்கியிருக்கிறார் நடிகர் ஜாக்கிஜான். அந்த வகையில், தன்னுடைய ரூ.3400 கோடி மதிப்பிலான சொத்தை ஏழை எளிய மக்களின் படிப்புக்காகவும் இயற்கை பேரிடர்களுக்கும் செலவு செய்யும் விதமாக 'ஜாக்கிஜான் சேரிட்டபிள் பவுண்டேஷன்' மூலமாக நன்கொடையாக வழங்கியிருக்கிறார். இது குறித்து பேசிய ஜாக்கிஜான், நான் சிறு வயதில் இருந்தே ஏழ்மையில் வாழ்ந்து வந்திருக்கிறேன். ஆதலால் ஏழ்மை என்பது எனக்கு புதியதல்ல.. அந்த ஏழ்மையில் கஷ்டப்படுகிறவர்களை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும் அவர்களுக்கு உதவி கிடைக்கும் பொழுது வரும் சந்தோஷம், அந்த உதவியை செய்யும் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: நடிகர் சிம்புவை புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன்... என்ன சொன்னார் தெரியுமா..?