நடிகர் சிம்புவை புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன்... என்ன சொன்னார் தெரியுமா..?
நீங்கள் தலைமை தாங்கி உங்கள் தம்பிகளை நல்லபடியாக வழிநடத்தி கொண்டு செல்ல வேண்டும் என நடிகர் சிலம்பரசனுக்கு கமல்ஹாசன் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் - இயக்குனர் மணிரத்தினம் கூட்டணியில் உருவாகியுள்ள "தக் லைஃப்" படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஸ்வர்ய லட்சுமி, கௌதம் கார்த்திக், அபிராமி, பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
"தக் லைஃப்" படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திருமண கொண்டாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த பாடல் யூடியூபில் 4 கோடி பார்வையாளர்களை கடந்து அசத்தி வருகிறது. மேலும் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லரும் சமீபத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்டது.
இதையும் படிங்க: இந்தியா-பாக். சண்டையால் விபரீத முடிவெடுத்த நடிகர் கமல்ஹாசன்..! பயத்தில் ரசிகர்கள்..!
படம் எப்படா வெளிவரும் என ரசிகர்கள் வெறிகொண்டு காத்துக்கிடக்கின்றனர். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், மணிரத்தினம், சிம்பு, திரிஷா, அபிராமி, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர்.
பின்னர் விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், சினிமா பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கும். ஆனால் எடுக்கும்போது இருக்காது. நான் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். அதில் நான் படம் எடுக்க வரும்போது எனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் நிறைய இருந்தன. அந்த கண்ணீரோடையை தாண்டி தான் வந்து கொண்டிருக்கிறேன். அதெல்லாம் நான் மனதில் வைத்துக் கொள்ளவில்லை. சிலம்பரசன் போகப் போகும் தூரம் எனக்கு தெரிகிறது. இந்த கூட்டத்தை வழிநடத்தும் தலைமை இருப்பதால் இன்னும் பொறுப்புகளுடன் சிலம்பரசன் நடந்து கொள்ள வேண்டும். இது சுமையல்ல சுகம். அதை நீங்கள் அனுபவியுங்கள்.
அசோக் செல்வன் சொன்னாரே என் விஸ்வரூபம் படம் வெளியாக போராடியவர் சிலம்பரசன் என எனக்கே தெரியாமல் அப்படி பல ரசிகர்கள் இருக்கின்றனர். இதற்காகத்தான் நான் அரசியலுக்கு வந்தேன். முதல்வராக வரவில்லை, ஒரு எம்எல்ஏ என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் நாங்கள் 40 ஆண்டுகளாக தமிழகத்தில் மெல்ல மெல்ல செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் தனி மனிதர்கள் அல்ல. என்னுடன் வளர்ந்த தம்பிகளெல்லாம் இன்று சமூகத்தில் பெரிய மனிதர்களாக நடந்து கொண்டிருப்பது பெருமையாக இருக்கிறது. உங்கள் தம்பிகளையும் நீங்கள் அப்படி நடக்க வைக்க வேண்டும் சிலம்பரசன் என கூறினார்.
இதையும் படிங்க: கமல்ஹாசனை மிரளவைத்த அஸ்வத் மாரிமுத்து..! ஒரே கதை.. அரண்டு போன ராஜ்கமல் பிலிம்ஸ்..!