ஸ்ரீ தேவி மகன்னா சும்மாவா..! முதல் நாளிலேயே ஹிட் கொடுத்த ஜான்வி கபூர் நடித்த 'பரம் சுந்தரி'..!
முதல் நாளிலேயே ஹிட் கொடுத்த ஜான்வி கபூர் நடித்த `பரம் சுந்தரி' படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
பாலிவுட் ரசிகர்களுக்காக தயாராகி, வெற்றிகரமாக திரையரங்குகளில் வெளியான ‘பரம சுந்தரி’ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, வசூல் சாதனையும் படைத்துள்ளது. தினேஷ் விஜனின் மேடாக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம், வெளியான முதல் நாளிலேயே இந்தியாவில் ரூ.7.5 கோடி வசூலித்திருக்கிறது.
குறிப்பாக ‘தஸ்வி’ திரைப்படம் மூலம் பாராட்டப்பட்ட இயக்குநர் துஷார் ஜலேதா இந்த படத்தை இயக்கியுள்ளார். அவரது இரண்டாவது முயற்சியான இந்த திரைப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ஜான்வி கபூர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் காதல், நட்பு, உறவு, இசை, மற்றும் குடும்பத்தைச் சுற்றி நெகிழ்ச்சி தரும் காட்சிகள் பலவாக அமைந்துள்ளன. படம் முழுவதும் கலகலப்பான இசை மற்றும் உயிரோட்டமான ஒளிப்பதிவு ரசிகர்களை ஈர்த்துள்ளது. மேலும் பரம சுந்தரி திரைப்படம் வெளியாகிய உடனேயே சமூக வலைதளங்களில் ரசிகர்களின் பாராட்டுகளும், விமர்சனங்களும் அதிகளவில் பதிவாகி வருகிறது. சித்தார்த் மல்ஹோத்ராவின் பாவனைகள் நிறைந்த நடிப்பு, ஜான்வி கபூரின் எளிமையான தோற்றமும், உணர்வுப்பூர்வமான வசனங்களும், திரைக்கதையின் திருப்பங்களும், நவீன யுக காதல் பார்வையும், காமெடி சீன்களில் இயல்பான நகைச்சுவை என இவைகள் அனைத்தும் படத்தை குடும்ப ரசிகர்களுக்கேற்ப முழு பொழுதுபோக்கு திரைப்படமாக அமைத்துள்ளன. இந்த திரைப்படத்தின் இசையை இசையமைப்பாளர் சாச்வத் சகர் கவனித்துள்ளார்.
அதில், “பரம சுந்தரி” என்ற தலைப்பு பாடல், “சித்தி பித்தி பேயல்”, “ராஜா ரீனா லவ்” என மூன்று பாடல்களும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. டிக்டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்ற பல தளங்களில் ரசிகர்கள் இந்த பாடல்களுடன் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். இப்படி இருக்க மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான ‘பரம சுந்தரி’ திரைப்படம், வெளியான முதல் நாளிலேயே இந்தியாவில் ரூ.7.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: வித்தியாசமான காஸ்டியூமில் கலக்கும் நடிகை ஜான்வி கபூர்..! கண்கவரும் கிளிக்ஸ் இதோ..!
மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் முன்னோட்டங்களும் மற்றும் விகேண்ட் புக்கிங்களும் உற்சாகமாக நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. படத்திற்கான நேர்மறை விமர்சனங்கள் மற்றும் குடும்ப ரசிகர்களின் உற்சாகம் காரணமாக, வீக் எண்ட் வசூல் இரட்டை இலக்கத்தைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மேடாக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த ‘சையரா’ திரைப்படம் ஏற்கனவே வெற்றி படமாக அமைந்தது. தற்போது அதே நிறுவனத்தின் ‘பரம சுந்தரி’ திரைப்படம், அதன் வெற்றியை மீண்டும் பதிவு செய்யப்போகிறதா என்பதை எதிர்வரும் வாரங்களில் வசூல் மற்றும் விமர்சனங்கள் மூலம் அறியலாம். சித்தார்த் மற்றும் ஜான்வி கூட்டணி பாலிவுட்டில் ஹிட் ஜோடி ஆக மாறும் என பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
ஆகவே துடிப்பான இசை, உணர்வுப்பூர்வமான நடிப்பு, நேர்த்தியான கதாநாயகன் என கதாநாயகி காம்போ மற்றும் சினிமா ரசிகர்களுக்கு ஏற்றதொரு நவீன குடும்ப கதாபாத்திரங்களை கொண்ட ஒரு வணிக வெற்றி படம். 'பரம சுந்தரி' திரைப்படம், பாலிவுட்டின் காதல் திரைப்பட வரிசையில் முக்கியமான இடத்தை பிடிக்கக்கூடிய திறன் கொண்டதாகவும், மிக குறுகிய காலத்தில் ரூ.100 கோடி கிளப் நோக்கி செல்லும் என கணிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: "பாரத் மாதா கி ஜெய்" வைரலான கோஷம்..! டிரோல்களுக்கு உள்ளான நடிகை ஜான்வி கபூர்..!