"பாரத் மாதா கி ஜெய்" வைரலான கோஷம்..! டிரோல்களுக்கு உள்ளான நடிகை ஜான்வி கபூர்..!
பாரத் மாதா கி ஜெய் என கூறிய நடிகை ஜான்வி கபூர் டிரோல்களுக்கு உள்ளான நிலையில் அதற்கு பதிலளித்துள்ளார்.
இந்திய சினிமாவின் பிரபல நடிகை ஜான்வி கபூர், தற்போது தனது புதிய படமான ‘பரம் சுந்தரி’ படத்திற்கான புரமோஷனில் முழு தீவிரத்துடன் ஈடுபட்டு வருகிறார். காதல் மற்றும் நகைச்சுவை கலந்த படமாக உருவாகியுள்ள ‘பரம் சுந்தரி’ திரைப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா கதாநாயகனாக நடிக்க, இயக்குனராக துஷார் ஜலோட்டா பணியாற்றியுள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு மற்றும் நடிகர்கள், இதனைப்பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த பல்வேறு நகரங்களில் பிரமோஷன் நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகிறார்கள்.
இப்படி இருக்க சமீபத்தில் மும்பையில், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடைபெற்ற தஹி ஹண்டி (தயிர் பானை விழா) நிகழ்ச்சியில் ஜான்வி கபூர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பாரம்பரிய உடையில் கலந்து கொண்ட ஜான்வி, உயரத்தில் கட்டப்பட்ட தயிர்பானையை உடைத்து மகிழ்ந்தார். அதற்குப் பிறகு, அவருடைய மைக் ஸ்பீச்சில், "பாரத் மாதா கி ஜெய்" என முழங்கினார். அதை அங்கிருந்த மக்கள் உற்சாகமாக ஏற்றனர். நிகழ்ச்சியின் அந்த நிமிடங்கள் எடுக்கப்பட்ட வீடியோ பல்வேறு சமூக ஊடகங்களில் வைரலானது.. இந்த சூழலில் இந்த வீடியோவை மையமாக கொண்டு டிரோல்கள் வர தொடங்கியது. அதில் “இது சுதந்திர தினமா?” என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு ஜான்வி கபூர் உச்சரித்த "பாரத் மாதா கி ஜெய்" கோஷம், சில இணைய பயனாளர்கள் மற்றும் டிரோல் செய்ப்பவர்கள் மத்தியில் நெகட்டிவ் ரியாக்ஷன்களை உருவாக்கியது. பலர்,"இது சுதந்திர தினமல்ல", "கிருஷ்ண ஜெயந்தியில் தேசபக்தி கோஷமா?", "நடிப்பு புரமோஷனுக்காக நாட்டுப்பற்றை பயன்படுத்துகிறீர்களா?" என பலவகையான விமர்சனங்களையும் கேள்விகளையும் எழுப்பினர். சிலர் வீடியோவை பின்புலம் எதுவும் இல்லாமல் பகிர்ந்ததனால், அது தவறான புரிதலை உருவாக்கியதாக தெரிகிறது. இந்த சூழலில் தகவல்கள் பரவிய பின்னர், ஜான்வி கபூர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டார்.
அதில் அவர், " நான் பங்கேற்ற தஹி ஹண்டி விழாவில், என்னைச் சுற்றியிருந்த மக்கள் அனைவரும் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று முழங்கினார்கள். அதை கேட்டபின், அவர்களுடன் ஒரே உணர்வோடு, சேர்ந்த உணர்வில் நானும் அதே கோஷத்தை சொன்னேன். அதுமட்டுமல்லாமல், இந்த வீடியோவை எடிட் செய்து, தவறான தொகுப்பில் பகிர்ந்ததால் பலரும் உண்மை புரிந்து கொள்ளவில்லை. அதை வைத்து என்னை விமர்சிப்பது வேதனையளிக்கிறது. ஆனால் எனக்கு நாட்டுப்பற்றில் எப்போதும் பெருமை தான்" என தெரிவித்துள்ளார். மேலும் "பாரத் மாதா கி ஜெய் என்பது ஒரு நாளுக்கான கோஷம் அல்ல. அது ஒரு இந்தியனாக நான் எந்த நாளிலும், எந்த தருணத்திலும் கூறக் கூடிய உணர்வுப்பூர்வமான வார்த்தைகள். சுதந்திர தினமோ, குடியரசு தினமோ இல்லாத நாட்களிலும், இந்தியராக இருப்பதில் நம்பிக்கையோடு நான் அந்த வார்த்தையைச் சொல்வேன்" என்றும் உறுதியோடு பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ரசிகர்கள் கூட்டத்தில் சோலோவாக சிக்கிய நடிகை ஜான்வி கபூர்..! அடுத்து என்ன நடந்தது தெரியுமா..?
இந்தக் கருத்துக்களுக்கு ரசிகர்கள் பெரிதும் ஆதரவு தெரிவித்தனர். ஜான்வியின் தேசபக்தியும், நியாயமான விளக்கமும் பெரும்பான்மையான மக்களால் வரவேற்கப்பட்டது. இந்த விவகாரம் நடப்பதற்கிடையில், ஜான்வியின் புதிய படம் ‘பரம் சுந்தரி’, ஒரு மூன்று நகரங்களை சுற்றிய காதல், கலாச்சாரம், நகைச்சுவை மையப்பட்ட கதை என்று கூறப்படுகிறது.. சித்தார்த் மல்ஹோத்ரா – ஜான்வி கபூர் இருவரும் இந்த படத்தில் புதிய ஜோடியாக இணைந்துள்ளனர். துஷார் ஜலோட்டா இயக்கத்தில், விஜய் சேதுபதி கெஸ்ட் ரோல் எனும் தகவலும் திரையுலகத்தில் பரவியுள்ளது. ஆகவே ஜான்வி கபூர் போன்றவர்கள் தங்கள் பதவியில் இருந்தபோதும், சமூக நிகழ்வுகளில் கலந்துகொண்டு நாட்டிற்கான உணர்வை வெளிப்படுத்துவது, இன்றைய தலைமுறைக்கு நல்ல உதாரணமாக இருக்கிறது.
அது சுதந்திர தினம், குடியரசு தினம் இல்லையென்றாலும், தேசிய அடையாளம் கொண்ட வார்த்தைகளை உணர்வுடன் கூறுவது தவறு அல்ல என்பதை, ஜான்வியின் பதிலின் மூலம் நமக்கு புரியவேண்டும்.
எனவே "பாரத் மாதா கி ஜெய்" என்பது ஒரு நாளுக்கான கோஷமல்ல அது ஒரு வாழ்நாள் நம்பிக்கை என்பதை புரிய வைத்துள்ளார்..
இதையும் படிங்க: அழகுக்கு பெயர் தான் ஜான்வி கபூர்..! சேலையில் மிரளவைக்கும் கிளிக்ஸ்..!