×
 

நடிகை காஜல் அகர்வாலா இது..! திருமணத்துக்கு பிறகு இப்படி ஆளே மாறிட்டாங்களே..!

நடிகை காஜல் அகர்வால் சேலையில் ஜொலிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகில், குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல ஹிட் படங்களின் நாயகியாக ஜொலித்தவர் தான் நடிகை காஜல் அகர்வால். 

இவர் இதுவரை மகேஷ் பாபு, விஜய், அஜித், கார்த்தி, சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தார். 

இதையும் படிங்க: ஷாப்பிங் போன கேப்பில் காணாமல் போன கார்..! நடிகை காஜல் அகர்வால் தேடிய வீடியோ வைரல்..!

இவரது ‘மகாத்மா’, ‘மகன’, ‘துப்பாக்கி’, ‘மெர்சல்’, ‘மாரி’, ‘ஜில்லா’ போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. 

இந்த நிலையில், 2020-ல் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்தபின், குடும்ப வாழ்க்கையைக் கவனிப்பதற்காக சில வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார் காஜல்.

பிறகு ‘ஓ மை பேபி’ மற்றும் ‘கோஸ்ட்’ போன்ற ஒரு சில படங்களில் அவர் நடித்து வந்தாலும், முன்பை போல அதிரடியான வாய்ப்புகள் அவருக்கு தொடர்ந்து கிடைக்கவில்லை. 

இப்படி இருக்க தற்போது காஜல், இயக்குநர் சங்கர் இயக்கும் ‘இந்தியன் 3’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்தியன் 3 படப்பிடிப்பு தற்போது தொடங்க உள்ளது. 

அதேவேளை, நித்தீஷ் திவாரி இயக்கும் ‘ராமாயணா’ படத்திலும் அவர் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் சீதையின் தோழி அல்லது சகோதரியாக நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. 

அதே நேரத்தில், பெரிய நட்சத்திர ஹீரோக்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் மற்றும் முன்னணி ஹீரோயினாக அதிக வாய்ப்புகள் இல்லாததால், காஜல் கொஞ்சம் வருத்தத்தில் இருப்பதாக திரை உலகில் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில், காஜல் அகர்வால் மீண்டும் தனது சினிமா பயணத்தை முழு வீச்சில் தொடர உறுதியுடன் இருக்கிறார்.  தனது உடலை மீண்டும் சினிமாவுக்கேற்ற வகையில் மாற்றுவதற்காக, ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சி, அளவான உணவுக்கட்டுப்பாடு, மனதளவிலான தெளிவுகள் என அனைத்து முயற்சிகளையும் ஆரம்பித்துவிட்டார். 

இதையும் படிங்க: சினிமாவில் ‘விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பேன்’ என சவால்..! ரீ-என்ட்ரிக்கு 'நடிகை காஜல் அகர்வால்' செய்யும் வேலைய பாருங்க..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share