கமல்ஹாசனை காதலித்த பிரபல நடிகை..! வெளுத்து வாங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்..!
கமல்ஹாசனை காதலித்ததாக வரும் வதந்திகளுக்கு தனது அட்டகாசமான பதிலால் லட்சுமி ராமகிருஷ்ணன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
2008-ம் ஆண்டு தமிழ்த் திரைப்பட உலகில் 'பிரிவோம் சந்திப்போம்' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த படத்தில் கதாநாயகியாக மட்டுமல்லாமல், தனது படைப்பாற்றலால் மூலமாக சிறந்த நடிகையாக உருவெடுத்து, சினிமா உலகில் தனக்கென ஒரு அசைக்க முடியாத இடத்தை உருவாக்கினார். தமிழ் சினிமாவில் 'பொய் சொல்ல போறோம்', 'எல்லாம் அவன் செயல்', 'ஈரம்' போன்ற பல வெற்றி திரைப்படங்களில் தனது திறமையை வெளிப்படுத்திய இவர் தனது உண்மையான மற்றும் இயற்கையான நடிப்பின் மூலம், பலரின் மனதையும் வென்றிருக்கிறார்.
கேரளாவைச் சேர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன், சமீபத்தில் 2025-ம் ஆண்டு வெளியான 'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது ரவி மோகன் நடிப்பில் வெளிவந்த திரைப்படமாகும். நடிப்புடன் மட்டுமல்லாமல், தொலைக்காட்சித் தளத்திலும் இவர் தனது பங்களிப்பை வழங்கி வருகிறார். குறிப்பாக, ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனைப் பற்றி கூறிய கருத்துகள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கின. அந்த நிகழ்ச்சியில் பேசும் போது, "நான் கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகை. கல்லூரி நாட்களில் அவரை காதலித்து வந்தேன். அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, மனதில் இருந்த காதலைப் பகிர்ந்தேன். ஆனால் கமல் என்னை ‘தங்கச்சி’ என அழைத்தார்" என அவர் நகைச்சுவையாக கூறினார்.
இப்படியாக, "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியி அவர் பேசியதாக கூறப்படுகிறது. இது சமூக வலைதளத்தில் பலவகையாக திரித்து பேச ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை பகிர்ந்து, தெளிவான விளக்கம் அளித்துள்ளார். அதில், " நான் 16வது வயதில் நிச்சயதார்த்தம் செய்து, 18வது வயதில் திருமணம் செய்தேன். 42வது வயது வரையில் எனக்கு சினிமா உலகத்துடன் எந்தவிதமான தொடர்பும் இல்லை. பிறர் போல், நானும் நட்சத்திரங்களை ஒரு ரசிகையாக, குழந்தை போல் ஆச்சரியத்துடன் பார்த்தவள் தான். 45வது வயதில் ஒரு பிரபல நடிகரை நேரில் சந்தித்த போது உண்மையிலேயே ஸ்டக் ஆகிவிட்டேன். அவர் என்னைப் பார்த்து ‘என் சகோதரி மாதிரி இருக்கிறீர்கள்’ என்று சொன்னதும்,
இதையும் படிங்க: கமல்ஹாசனின் 'மநீம-வில்' இணைந்தாரா ரஜினி காந்த்..? புகைப்படத்தால் கலக்கத்தில் ரசிகர்கள்..!
என் நண்பர்கள் நகைச்சுவையாக கலாய்த்தார்கள். இதைத்தான் நான் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் நகைச்சுவையாக பகிர்ந்தேன். ஆனால் இதைப் தவறாக புரிந்து, உண்மையில்லாத செய்தியாக பரப்புவது நியாயமற்றது மட்டுமல்ல, நாகரிகமற்றதும் கூட" என பகிர்ந்துள்ளார். ஒருவர் பகிரும் நகைச்சுவையையும், உண்மையையும் பிரித்து அறிந்துகொள்ளாமல், அவற்றை சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வலுக்கட்டாயமான கருத்துகளாக மாற்றுவது தவறான செயலாகும் என்பதையும் இந்த விவகாரம் மீண்டும் நினைவூட்டுகிறது.
தனது வாழ்க்கையை குடும்பம் மற்றும் சமூகத்திற்காக அர்ப்பணித்து, 45வது வயதில் திரைப்பட உலகில் நுழைந்து, இன்று திறமையான நடிகையாக மட்டுமல்ல, சிந்தனையாளராகவும், நம்பிக்கையுடன் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் பெண்மணியாகவும் திகழ்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
இதையும் படிங்க: நடிகை ஸ்ரீதேவிக்கு எனக்கும் இருத்த உறவு காதலை விட..! நடிகர் கமல்ஹாசன் ஓபன் டாக்..!