×
 

நடிகை ஸ்ரீதேவிக்கு எனக்கும் இருத்த உறவு காதலை விட..! நடிகர் கமல்ஹாசன் ஓபன் டாக்..!

நடிகர் கமல்ஹாசன் நடிகை ஸ்ரீதேவிக்கு தனக்கும் இருந்த உறவை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

இந்திய சினிமாவின் விண்வெளி நாயகனாக தற்பொழுது உயர்ந்து நிற்பவர் தான் உலகநாயகன் கமல் ஹாசன். நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றவர். நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, பாடல், வசனம் என திரைத்துறையின் அனைத்து துறைகளிலும் தனது ஆழ்ந்த பங்களிப்பைச் செலுத்தி வருபவர். இவர் நடிப்பில் சமீபத்தில் 'தக் லைஃப்' திரைப்படம் பல போராட்டங்களுக்கு பின் வெளிவந்தது. இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கமலுடன் சிம்பு, த்ரிஷா, ஜெயம் ரவி, அபிராமி, துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் அப்பாவியாக இருந்த கதாநாயகனை ஒரு குற்றவாளியாக மாற்றும் சமூக சூழலின் தாக்கம் மற்றும் அதற்கெதிரான அவரின் மீண்டெழும் போராட்டம் பற்றிய கருத்தை முன்வைத்து உருவான படம் தான் இந்த "தக் லைஃப்". இப்பதி இருக்க, சமூகப் பிரச்சனைகளை வலியுறுத்தும் கமலின் திரைக்கதைகள் எப்போதும் தனித்துவமானவையாகவே திரைத்துறையில் தோன்றும். 

இப்படத்தில் அவரின் மாறுபட்ட தோற்றமும், அதிரடி சண்டை காட்சிகளும், கருத்துக்கள் என அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சூழலில், நடிகர் கமல் ஹாசன் தனது திரையுலக பயணத்தில் பல முன்னணி நடிகைகளுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். அப்படி இருக்கையில் அவருடன் நடித்ததில் அதிகமாக பேசப்பட்டவர் என்றால் அவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவர் கமலுடன்  நடித்த திரைப்படங்கள் என பார்த்தால் மூன்றாம்பிறை, வாரும் ஐராம்கள், வாக்தானம், மீண்டும் கோகிலா, சத்யா, விலகு, வலிமை, சிகப்பு ரோஜாக்கள், காளி போன்ற படங்களில் நடித்துள்ளனர்.

இந்த படங்கள் அனைத்தும் சினிமா ரசிகர்களின் நினைவில்  இன்று வரை நீங்கா இடம்பிடித்து இருக்கின்றன. ஏனெனில் இவர்கள் இருவரது ‘கெமிஸ்ட்ரி’ மட்டும் அல்ல, ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ஒரு உண்மையான இணைபிரியா நட்பு மற்றும் சகஜத் தோற்றத்தை இருவரும் வெளிப்படுத்தி வந்தது தான். இதனால்தான் ரசிகர்கள், கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி ஜோடியை அதிகமாக விரும்பினர். அவர்கள் நடித்த படங்கள் இதுவரை பாக்ஸ் ஆஃபிஸில் மட்டுமல்ல, ரசிகர்களின் மனதிலும் நீடித்த இடத்தைப் பெற்று இருப்பது யாராலும் மறுக்க முடியாது. இப்படி இருக்க, கடந்த சில நாட்களாக இணையத்தில் நடிகர் கமல் ஹாசன் அளித்த பழைய பேட்டி ஒன்று தீயாய் பரவி வருகிறது. அதில் பேசிய கமல், ஸ்ரீதேவியுடன் தனது உறவு குறித்தும், அந்த காலகட்டத்தில் பரவிய கிசுகிசு செய்திகள் பற்றியும் மிகவும் வெளிப்படையாகப் பேசி இருக்கிறார். அதன்படி, கமல் பேசுகையில், " என்னைப் பற்றியும் நடிகை ஸ்ரீதேவியைப் பற்றியும் ஏராளமான கிசுகிசு செய்திகள் தொடர்ந்து வெளியானது. ஆனால் அது எல்லாம் உண்மையே கிடையாது.

இதையும் படிங்க: உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பவன்கல்யாண் சொன்ன வாழ்த்து செய்தி..! புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்..!

சினிமாவில் நாங்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகினாலும், அதற்குள் காதல் ஏதுவும் இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமானால்  ஸ்ரீதேவி-யும், நானும் அண்ணன்-தங்கை போலத்தான் பழகினோம். ஸ்ரீவித்யா உடனான என் நட்பு எப்படி இருக்கிறதோ அதே போலத்தான் ஸ்ரீதேவி-யுடனும் எனது நட்பு ஆழமாக இருக்கிறது என்று சிலர் சொன்னார்கள். ஆனால் அதுவும் உண்மையல்ல. உங்களுக்கு தெரியாத ஒன்றை சொல்கிறேன்.. ஸ்ரீதேவி என்னை 'சார்' என்று தான் அழைப்பார். அவர் எப்போதும் ஒரு மரியாதையை காப்பாற்றுபவர்.

அவருக்கு அதுதான் வழக்கம். நாங்கள் ஒரே படங்களில் நடித்தாலும், படம் முடிந்ததும் எங்கள் வாழ்க்கை தனித்துவமானதாகவே இருந்தது. ஆனால் அந்த காலத்தில் எங்களுக்கு இடையே காதல் மற்றும் காதல் திருமணம் என பல பரவலான வதந்தி செய்திகள் வந்தது. நாங்கள் அப்படி இல்லை என்று சொன்னாலும் யாரும் நம்பவே இல்லை" என தெரிவித்தார்.  இதன்முலமாக, கமலின் வாழ்க்கையில் நட்பு, மரியாதை, நெகிழ்ச்சி ஆகியவை எவ்வளவு முக்கியமென்று புரிகிறது. திரையுலகில் ஒரு நடிகர், நடிகையுடன் அதிக படங்களில் நடிப்பதை பார்த்து, அவர்களிடையே காதல் இருப்பதாகவே பொதுமக்கள் மற்றும் இணையதள வாசிகள் பரப்புவது ஏற்புடையதல்ல.. ஆனால் உண்மையில், நட்பு என்பது காதலை விட உயர்ந்த உறவு என்பதை கமல் பேசியது வெளிப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், நடிகை ஸ்ரீதேவி மரணம் இந்திய சினிமாவுக்கே பேரிடியாக அமைந்தது. அவரின் திறமையும், கவர்ச்சியும், அப்பாவித்தனமும், நகைச்சுவை உணர்வும், கம்பீரமும் அவருக்கு தனிச்சிறப்பாகவே இருந்தன.

இதையும் படிங்க: கமல் வச்ச குறி தப்பல.. தக் லைஃப் படத்தை தொட்ட நீ கெட்ட.. கன்னட அமைப்புகளுக்கு போலீஸ் வார்னிங்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share