கன்னட சினிமாவில் அடியெடுத்து வைக்கும் அனிரூத்..! கொண்டாட்டத்தில் கேஜிஎப் ஹீரோ..!
கன்னட திரையுலகில் ஸ்டாரான ஹீரோவின் படத்தை இசையமைக்க இருக்கிறார் இசையமைப்பாளர் அனிரூத்.
நவீன் குமார் கவுடா என்கின்ற நபர் யார் என தெரியுமா? அவர் தான் கே.ஜி.எப் படத்தில் நடித்து பலரது கனவு நாயகனாக வலம் வரும் நடிகர் யாஷ். இவரது உண்மையான பெயர் தான் நவீன் குமார் கவுடா. இப்படி பட்டவர் இன்று ஃபேமஸாக இருந்தாலும் ஆரம்ப காலத்தில் அவரை ஏற்று கொள்ளாத கன்னட ரசிகர்கள், 2008 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த "மொக்கினா மனசு" திரைப்படத்தில் இவரது நடிப்பை பார்த்து கதாநாயகனாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். அதன் பிறகு ராஜதானி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராமாச்சாரி என பலப்படங்ககளில் நடித்து ஹிட் கொடுத்து வந்தார்.
இப்படி இருக்க, தற்பொழுது சினிமாவில் தொடர் வெற்றிகளை கண்டு வரும் நடிகர் யாஷ், நிதிஷ் திவாரி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமானின் மிரட்டும் இசையில், நடிகர்கள் ரன்பீர் கபூர் மற்றும் சாய்ப்பல்லவி ஆகியோர் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படமான "ராமாயணம்" படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ராவணனாக நடிக்கும் நடிகர் யாஷுக்கு ஜோடியாக பிரபல தென்னிந்திய நடிகை காஜல் அகர்வால் 'மண்டோதரி' என்கிற கேரக்டரில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: மனுஷன் புடிச்சிட்டாப்புல.. சூப்பர் ஸ்டார் ரஜினியையே பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வைத்த பிரபலம்..!
இதனை தொடர்ந்து, தற்பொழுது மும்பையில் படமாக்கப்பட்டு வரும் ராமாயணம் இரண்டாம் பாகத்தில் தான் நடிகர் யாஷ் ராவணனாக களம் இறங்கி நடித்து வருகிறார். இப்பொழுது நடித்து வரும் இரண்டாம் பாகம் 2027ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அதிகார பூர்வமாக படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். அடுத்த இரண்டு வருட தீபாவளி இராமாயண கொண்டாட்டத்தில் இருக்க போகிறது. மேலும், சமீபத்தில் ரூ. 800 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் கிலிம்ப்ஸ் டீசர் வெளியாகி ரசிகர்களை மகிழ்சியடைய செய்தது.
இந்த நிலையில் தமிழ் சினிமா மட்டுமல்லாது அனைத்து சினிமாக்களிலும் பல ரசிகர்களை தன் வசம் வைத்திருப்பவர் தான் இசையமைப்பாளர் அனிருத். தற்பொழுது பிரமாண்ட இசைமயமைப்பாளராக உருவெடுத்து இருக்கும் அனிருத் ஆரம்பத்தில் தனது இசை பயணத்தை "ஜினகஷ்" என்ற இசைக்குழு பள்ளியில் ஆரம்பித்தார். அதற்கு பின் அவரது 21ம் வயதில் தனுஷின் '3' படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் "போ நீ போ", "why this கொலவெறி" போன்ற பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து சினியுலகில் இவரது பெயர் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் மத்தியில் அடிபட துவங்கியது.
இதனை அடுத்து இவர் இசையில் வெளியான "டேவிட்" திரைப்படத்தின் "கனவே கனவே" பாடல் ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியது. பின்பு மீண்டும் நடிகர் தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான "எதிர்நீச்சல்" திரைப்படத்தில் வந்த அனைத்து பாடல்களுக்கும் இசையமைத்து தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறினார். இதுவரை இவர், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம், கத்தி, என்னமோ ஏதோ, மான் கராத்தே, வடகறி, வேலையில்லா பட்டதாரி, ரோமியோ ஜுலியெட், மாரி, நானும் ரௌடி தான், காக்கி சட்டை, தங்க மகன், வேதாளம், ரெமோ, விவேகம், ரம், கோலமாவு கோகிலா (கோ கோ), தானா சேர்ந்த கூட்டம், Mr.லோக்கல், தும்பா, பேட்ட, தனுசு ராசி நேயர்களே, சங்கத்தமிழன்,
நம்ம வீட்டுப் பிள்ளை, சாஹோ, பாவ கதைகள், தாராள பிரபு, பட்டாஸ், தர்பார், பூமி, மாஸ்டர், அனபெல் சேதுபதி, டாக்டர், ஜகமே தந்திரம், சுல்தான், ப்ரின்ஸ், டான், ஆர் ஆர் ஆர் - (இரத்தம் ரணம் ரௌத்திரம்), விக்ரம், பீஸ்ட், எதற்கும் துணிந்தவன், காத்துவாக்குல ரெண்டு காதல், திருச்சிற்றம்பலம், ஜவான், மாவீரன், ஜெயிலர், வீரன், லியோ, வாரிசு, துணிவு, LIC - லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், அமரன், வேட்டையன், அந்தகன், இந்தியன் 2, ஆக்கோ, விடாமுயற்சி போன்ற படங்களுக்கு இசையமைத்தும் பாடல்களை பாடியும் உள்ளார் அனிருத். இதுமட்டுமல்லாமல் அடுத்ததாக, ஜெயிலர் 2, கைதி 2, மதராஸி, கூலி, ஜனா நயகன், எஸ் கே 17, இருபத்தியாறு 26 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் அனிரூத்தும் பிரபல நடிகருமான யாஷும் ஒரு படத்தில் இணைந்து வேலை செய்ய உள்ளனர். அதன்படி, மலையாள இயக்குநரான மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் திரைக்கு வரவுள்ள பிரமாண்டமான திரைப்படம் தான் "டாக்ஸிக்". பலரது எதிர்பார்ப்பையும் துண்டியுள்ள இத்திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 19 அன்று அனைத்து திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கிய போதே, இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் தான் இப்படத்தின் இசையை திறம்பட உருவாக்குவார் என்று பரவலாக அனைவரும் நம்பினர். ஆனால் டாக்ஸிக் படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான அனிரூத்தை இப்படத்தில் இசையமைக்க வைக்க படக்குழு அவரை அணுகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்தால் தமிழில் இருந்து கன்னடத்தில் இசையமைக்க புதுவழி பிறக்கும் என சினிமா வட்டாரங்ககளில் பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தாய்மாமனாக மாறிய பாலிவுட் நடிகர் அமீர்கான்..! விஷ்ணு விஷால் மகள் பெயர் சூட்டு விழாவில் சுவாரசியம்..!