ரசிகர்களை குழப்பத்தில் உறைய வைத்த “காத்துவாக்குல ஒரு காதல்” படம்..! விமர்சனம் இதோ..!
“காத்துவாக்குல ஒரு காதல்” படம் ரசிகர்களை குழப்பத்தில் உறைய வைத்ததாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
இயக்குனராகவும், கதாநாயகனாகவும் மாஸ் ரவி களமிறங்கியுள்ள “காத்துவாக்குல ஒரு காதல்”, தனது தலைப்பைப் போலவே காதலும், அதிரடியும் கலந்த ஒரு கிளைமாஸ் கலவையான திரைப்படமாக வெளிவந்துள்ளது. துவக்கத்தில் உற்சாகத்தை ஏற்படுத்திய இந்த கதை, மையத்தில் சுழன்று, முடிவில் பார்வையாளர்களை "இது என்ன?" இப்படி இருக்கு என்ற நிலையில் கொண்டு சென்றது.இப்படியாக இந்த கதை எங்கே போகிறது என பார்த்தால், மாஸ் ரவியும், லட்சுமி பிரியாவும் உயிருக்குயிராக காதலிக்கிறார்கள். இந்த அழகான காதல் மென்மையான தொடக்கத்துடன் பயணிக்கிறது.
ஆனால், ஒரு கட்டத்தில் மாஸ் ரவி காணாமல் போனதாக கனவில் காணும் லட்சுமி பிரியா, அதற்குப் பின்பு அந்த கனவு நிஜமாகியதைக் காண்கிறாள். அவரை தேடி அலையும் அவள், ரவியை ரவுடி கும்பலுடன் இணைந்து வலம் வருவது கண்டு அதிர்ச்சியடைகிறாள். மேலும், அவர் தன்னைத் தெரியாதது போல நடக்கிறாரோ? என்ற குழப்பமும், வலி நிறைந்த பரபரப்பும் இங்கே தொடங்குகிறது. அதே நேரத்தில், ரவியை பல்லவி என்ற பெண் காதலிக்கிறாள். இது ஒரு காதல் கதையா? அல்லது இரட்டை பிறவிகள், சதிகள், நினைவிழப்பு என்று நிறைய பிரிவுகள் கொண்டு செல்லும் மாயாஜால திரைக்கதையோடு தொடர்கிறதா? என்பது தெரியாத மாயமான பாணியில் படம் நகர்கிறது. மாஸ் ரவி – அதிரடி காட்சிகளில் நம்ப வைக்கும் நிலையில் இருந்தாலும், காதல் காட்சிகளில் உடனே ப்ளேடு மாறி விடுகிறார். உணர்வுகளை வெளிப்படுத்தும் திறனில் அதிகமாக வேலை செய்ய வேண்டியிருந்தது. அதேபோல் லட்சுமி பிரியா தனது அழகான முகபாவனை, உணர்ச்சி, மென்மை நிறைந்த நடிப்பில் சிறப்பாக நடித்து இருக்கிறார். அதேபோல் பல்லவி, தனது பங்குக்கு நன்றாக நடித்தாலும், கதையின் மையத்தில் இடம் பிடிக்க முடியவில்லை.
மேலும் சூப்பர் சுப்பராயன் மற்றும் சாய் தீனா வில்லன்களாக பதற்றம் ஏற்படுத்த முயன்றாலும், அவர்களது அதிகமான வசனங்கள் மற்றும் இயக்கத்தின் தேக்கங்கள் காரணமாக, பஞ்சு போல குறைந்து போய்விடுகிறார்கள்.
மேலும் ஆதித்யா பாஸ்கர், தங்கதுரை, கல்லூரி வினோத், பாஸ்கர், பவர் ஸ்டார் சீனிவாசன், மேனாக்ஸா, மிப்பு, மொசக்குட்டி என பலரும் இருக்க, யாருமே நினைவில் நிலைக்கவில்லை. கதையில் சீராக தேவைப்படாதவை போலவே பலர் தோன்றுகிறார்கள். அதைவிட ஒளிப்பதிவு – ராஜதுரை மற்றும் சுபாஷ் மணியன் இணைந்து செய்த ஒளிப்பதிவு, சில காட்சிகளில் தரம் காட்டினாலும், முக்கியமான இடங்களில் பயனற்ற காமிரா ஹேண்ட்லிங் காரணமாக சூழ்நிலை மாறுகிறது. க்ருய்ப்பாக இசையில், ஜி.கே.வி-யின் இசை, காதல், கலவரம், கிளைமாக்ஸ் எதற்குமே ஆதரவாக இல்லை.
இதையும் படிங்க: வரதட்சணை எதுக்காக கொடுக்கனும்..பெண் விருப்பப்பட்டால் தான் திருமணமே..! நடிகை பாமா அதிரடி பேச்சு..!
பின்புல இசை சில இடங்களில் தூக்கம் வர வைக்கும் அளவிற்கு இருக்கிறது. படத்தின் முதல் பாதி, “இது உண்மையில் என்ன சொல்ல வருகிறது என்ற குழப்பத்தில் சிக்க வைக்கும் வகையில் நகர்கிறது. உண்மையில் இது காதலா? ரவுடித்தனமா? இரட்டை வாழ்வா? என்று தெளிவற்ற திரைக்கதை, கனவுக் காட்சிகளால் குழப்பம், மற்றும் மீளாத பயணத்தில் படம் நகர்கிறது. இயக்குனர் மற்றும் ஹீரோ ஒரே நபர் என்ற முடிவால், விமர்சனங்களை ஏற்க முடியாத மனநிலையோ என்னவோ, சினிமா என்பது கூட்டுப் பணி என்பதை மறந்து விட்டார் போல தெரியுகிறது.. ஆக இந்த படத்திற்கு பிளஸ் என பார்த்தால், லட்சுமி பிரியாவின் உணர்ச்சி நடிப்பு, சில அதிரடி காட்சிகள், சண்டை குழுவின் முயற்சி எனலாம்.. அதுவே மைனஸ் என பார்த்தால், குழப்பமான திரைக்கதை, காதல் காட்சிகளில் ஹீரோவின் எமோஷன்கள் 'ஓவர் பாச்', வில்லன்களின் வழக்கமான வேடங்களில் புதியதன்மை இல்லை, இசை, ஒளிப்பதிவில் உயிரோட்டம் இல்லை, பல துணை கதா பாத்திரங்கள் காட்சிக்களை தெளிவாக குழப்புகின்றன. மொத்தத்தில், "காத்துவாக்குல ஒரு காதல்", ஒரு மிகவும் சுவாரசியமான கான்செப்டுடன் தொடங்கப்பட்டு, கதை, திரைக்கதை, எழுத்து போன்றவை சரியாக வளராததால், பார்வையாளர்களை ஓர் இடத்திலேயே நிறுத்தி வைக்கும் முயற்சியாகவே அமைந்துள்ளது.
மாஸ், இசை, மாயம் என மூன்றையும் சேர்க்க முயற்சித்தாலும், எதுவும் முழுமையாக நின்ற பாடில்லை. தயாரிப்பாளர்களும், பார்வையாளர்களும் எதிர்பார்த்த ரவுடி-ரோமான்ஸ் சினிமா, ரவுடியின் குழப்பத்திலேயே சிக்கி விட்டது.
இதையும் படிங்க: பாலியல் புகாரில் சிக்கிய ராப் பாடகர் வேடன் மீது லுக் அவுட் நோட்டீஸ்..! போலீஸ் அதிரடி நடவடிக்கை..!