×
 

நடிகர் கவின் - பிரியங்கா மோகன் கூட்டணியில் புதிய படம்..! படப்பூஜையில் நடந்த சுவாரஸ்யம்..!

நடிகர் கவின் மற்றும் பிரியங்கா மோகன் இணைந்து புதிய படத்தில் நடிப்பதற்கான பூஜை வெகுவிமரிசையாக நடைப்பெற்றது.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிபெறும் படங்களின் வரிசையில் நடிகர் கவின் படங்களும் முக்கிய இடத்தை பெற்று இருக்கிறது. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாடா’ மற்றும் ‘ப்ளடி பெக்கர்’ ஆகிய படங்கள், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று நடிகர் கவின் பெயரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. அவரின் இந்த வெற்றியை தொடர்ந்து, கவின் நடிக்கும் புதிய படமான கவினின் 'கிஸ்’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல், கவின் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான பூஜை சிறப்பாக நடைபெற்றது. இது அவரது சிறந்த படமாக பார்க்கப்படுகிறது. இயக்குனர் கென் ராய்சன் இயக்கும் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். ‘கனா காணும் காலங்கள்’, ‘கட்சி சேர’ போன்ற பல படங்களை இயக்கிய கென் ராய்சன், இந்த புதிய படத்தின் மூலம் திரை உலகிற்கு நகைச்சுவை கலந்த ஒருபடைப்பை கொடுக்க இருக்கிறார். பூஜை நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக நடைபெற்றதால் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படக் குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியில் மிதந்து கொண்டு இருந்தனர். மேலும் இந்த பூஜை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: முதல்ல படத்த பாருங்க....அப்புறம் விமர்சனம் பண்ணுங்க...சரியா...! நடிகர் விஷால் காட்டமான பேச்சு..!

இந்த புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு, படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகபடுத்தியுள்ளது. மேலும் இந்த புது படம் குறித்து இயக்குநர் கென் ராய்சன் பேசுகையில், "இந்த படம் கவின் மற்றும் பிரியங்கா ஆகியோரின் நடிப்பில் ஒரு தனித்துவமான காதல் கதை மற்றும் வாழ்க்கையின் பல்வழி சூழல்களை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும். இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் விரும்புவார்கள் என்று நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.  சினிமா உலகில் புதிதாக உருவாகும் படங்களில் கவின் நடிப்பில் உருவாகும் படங்கள் எப்போதும் ரசிகர்களின் மனதை வெல்லும் விதமாக இருக்கும். அதனை தொடர்ந்து, இவர் நடிக்கும் இந்த 9 ஆவது படம் அவரது திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய அத்தியாயமாக அமையும் என்று சினிமா வட்டாரங்களில் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில்,  நடிகர் கவின் தொடர்ந்து படங்களில் நடித்து வெற்றிப் பெற்று வருகிறார். தற்போது அவரது புதிய படத்தின் பூஜை நிகழ்வு இவரது திரை வாழ்க்கையில் ஒரு முக்கியமையான மைல்கல்லாக இருக்கும். 'கிஸ்’ படம் விரைவில் வெளியாகி, ரசிகர்களின் மனதை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இணையத்தில் லீக்-ஆன ரஜினியின் ‘கூலி’ படத்தின் கதை...! படக்குழுவை பதறவைத்த அதிர்ச்சி சம்பவம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share