கார் ஓட்ட தெரியுமா தெரியாதா? அஜித்தை கிண்டலடித்த ப்ளூ சட்டை மாறன்...!
நடிகர் அஜித் குமாரின் கார் ரேஸ் விபத்தை கிண்டலடித்து ப்ளூ சட்டை மாறன் பேசியிருப்பது ரசிகர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மட்டுமல்லாது தமிழில் டப்பிங் செய்யப்பட்டு எந்த படம் வந்தாலும் அதனை விமர்சிப்பதில் ப்ளூ சட்டை மாறன் கைதேர்ந்தவர். படத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட ஒரு நிமிடம் பொறுத்து ப்ளூ சட்டை மாறன், என்ன சொல்கிறார் என்பதை கேட்டுவிட்டு பின்பு படத்தை பார்க்க செல்கின்றனர். அந்த அளவிற்கு ப்ளூ சட்டை மாறன் எது சொன்னாலும் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. ஆரம்பத்தில் இவர் கொடுக்கும் ரிவ்யூக்களுக்கு மக்கள் போர்க்கொடி தூக்கி வந்த நிலையில், தற்பொழுது இவர் ரிவ்யூ சரியாக இருக்கும் என்ற வழக்கம் மாறி உள்ளது.
இப்படி இருக்க, இவர் சமீப காலமாக படத்தை ரிவியூ செய்யும் வேலையுடன் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் தனது கருத்துக்களை எக்ஸ் தளத்தில் தெரிவித்து வருகிறார். இப்படி இருக்க சமீபத்தில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்ட நிகழ்ச்சியில் அசைவ சாப்பாடு கொடுக்கப்படாதது ஏன்? என கேள்வி எழுப்பு சமூக வலைதளத்தில் பெரிய வாதத்தையே கிளப்பினார். இதனை அடுத்து அஜித்தின் மீது தற்பொழுது தனது டார்கெட்டை வைத்து இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.
இதையும் படிங்க: சினிமாவில் இருந்து விலகுகிறாரா அஜித்..? ஒரே வார்த்தையால் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!
அந்த வகையில், அஜித் குமார், தனக்கான அணியை திரட்டி, இந்தியாவிற்காக கார் ரேஸில் கலந்து கொண்டு போராடி வருகிறார். ஏற்கனவே நடந்த போட்டியில் பலமுறை அவருக்கு விபத்துக்கள் ஏற்பட்டாலும், களத்தில் விடாமுயற்சியுடன் போராடிய நடிகர் அஜித், ரேசராக தனது அணியை மூன்றாவது இடத்தில் நிலை நிறுத்தி வெற்றியைக் கண்டார். இந்த வெற்றியை தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களும் கொண்டாடி தீர்த்தனர்.
இதனை அடுத்து, தனது அணிகளை அழைத்து கொண்டு பல நாடுகளுக்கு சென்று அங்குள்ள கார் பந்தயங்களில் கலந்து கொண்டு மிகுந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே, பிரான்சில் தனது ரேஸ் காரை பார்த்து மகிழ்ந்த அஜித்தின் வீடியோக்கள் பகிரப்பட்ட நிலையில், தற்பொழுது கார் ரேஸில் பங்கேற்று உள்ளார் நடிகர் அஜித். சமீபத்தில் GTA கார் பந்தயத்தில் தகுதி சுற்றில் தேர்வான அஜித்குமார், பிரான்சில் உள்ள பால் ரிக்கார்ட் சர்க்யூட் பந்தயத்தில் பங்கேற்றார். இதனை அடுத்து, அதே ரேஸில் நடிகர் அஜித்தின் கார் விபத்துக்குள்ளானது. இதனை பார்த்து ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க, ரேஸில் நடிகர் அஜித்தின் டீம் இரண்டாம் இடத்தை பிடித்து சாதித்து இருப்பதாக அறிவிப்பு வந்தவுடன் தான் அவர்களுக்கு உயிரே வந்தது. இந்த ரேஸில் ஜெயித்ததற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையால் 'பத்ம பூஷன்' விருதை பெற்றார் அஜித்.
இந்த நிலையில், தற்போது அஜித்குமார் ரேலிங் அணி, ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளது. இந்தப் போட்டியின் இரண்டாவது சுற்றானது தொடங்கியது. அதில் நடிகர் அஜித்குமார் 'போர்ஷியா அணி' சார்பில் பங்கேற்றார். அப்போது, அஜித் ஓட்டிச் சென்ற காரின் டயர் வெடித்ததில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நிகழ்ந்ததாக கூறப்பட்டது. அதில், நல்வாய்ப்பாக நடிகர் அஜித்குமார் எந்த வித பாதிப்பும் இல்லாமல், நலமுடன் மீட்கப்பட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இதனை பார்த்த ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தள பக்கத்தில் அஜித் குமார் ரேஸ் குறித்து பதிவு செய்திருகிறார்.
அதில், "இன்று ஐரோப்பாவில் நடந்த ரேஸில் அஜித்தின் கார் டயர் வெடித்ததால் பரபரப்பு. என பதிவிட்டு அதன் கீழ் 'மத்தவங்க எல்லாம் எவ்வளவு அமைதியா ஷூட்டிங், ரேஸிங் போயிட்டு வர்றாங்க? நீங்க ஷூட்டிங்ல ஓட்ற காருக்கும், ரேஸ்ல ஓட்ற காருக்கும் மட்டும் ஏன் இப்படி ஆகுது?" என நாசூக்காகா தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: ரசிகர்கள் செய்த செயலால் அதிர்ச்சியான AK..! அஜித்தின் நிலைமையை கண்டு நெட்டிசன்கள் குமுறல்..!