நடுராத்திரி 3 மணி..! திரிஷா செய்த தரமான சம்பவம்.. உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்..!
நடுராத்திரி மூன்று மணிக்கு திரிஷா செய்த சம்பவத்தை குறித்து பிரபல இயக்குனர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
தமிழ் திரையுலகம் பல நடிகைகளை கண்டுள்ளது. ஆனால் தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த நடிகை என்றால் அவர் தான் நடிகை திரிஷா. இவரது கண் அசைவிற்கும், உதட்டு சிரிப்பிற்கும் ரசிகர் பட்டாளங்கள் அதிகம் உள்ளது. சினிமாவில் நடிகர் கார்த்திக்கு ஜோடி என்றால் தமன்னா, சூர்யாவுக்கு ஜோடி என்றால் ஜோதிகா என சொல்வதைப் போல் நடிகர் விஜய்க்கு ஜோடி என்றால் அது த்ரிஷா மட்டும் தான். கில்லி திரைப்படம் ஆகட்டும், ஆதி திரைப்படமாகட்டும், ஏன் தற்பொழுது வெளியான லியோ திரைப்படமாகட்டும், காலம் கடந்து பல திரைப்படங்கள் வந்தாலும் அதில் திரிஷா விஜயின் கூட்டணி இணையுமானால் அத்திரைப்படம் கலக்கலாகவே இருக்கும்.
இப்படிப்பட்ட நடிகை திரிஷா தான் தமிழ் திரையுலகின் "லேடி சூப்பர் ஸ்டார்" என ஒரு கூட்டம் இணையத்தில் பதிவிட்டு வருகிறது. ஆதலால் தான் திரிஷா இல்லை என்றால் நயன்தாரா என திரைப்படமே வந்தது. அந்த அளவிற்கு த்ரிஷா தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட த்ரிஷா 'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை திரிஷா. தமிழ் சினிமாவில் 21 ஆண்டுகளாக, தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வரும் திரிஷா, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல படங்களில் தற்பொழுது பிஸியாக நடித்து வருகிறார். மேலும் அஜித்தின் "குட் பேட் அக்லி" படத்தில் மாஸ் காண்பித்து இருக்கிறார் திரிஷா. அதுமட்டுமல்லாமல் தற்போது கமல் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் "தக் லைஃப்" படத்தில் நாயகியாக நடித்து இருக்கிறார். மேலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஜோடியாகவும் நடித்து முடித்துள்ளார்.
இதையும் படிங்க: உங்களுக்கு வயசே ஆகாதா? 42 வயதிலும் 20 வயசு யங் லுக்கில் சேலையில் கலக்கும் த்ரிஷா!
இப்படிப்பட்ட நடிகை திரிஷா தமிழில் இதுவரை ஜோடி, குஷி, மௌனம் பேசியதே, சாமி, அலை, லேசா லேசா, மனசெல்லாம், எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆய்த எழுத்து, ஜி, ஆறு, திருப்பாச்சி, ஆதி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், கிரீடம், பீமா, வெள்ளித்திரை, குருவி, அபியும் நானும், சர்வம், விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன் அம்பு, மங்காத்தா, என்றென்றும் புன்னகை, சமர், தூங்காவனம், சகலகலா வல்லவன், பூலோகம், என்னை அறிந்தால், கொடி, அரண்மனை 2, நாயகி, மோகினி, 96, பேட்ட, பரமபதம் விளையாட்டு, பொன்னியின் செல்வன் (PS 1), ராங்கி, லியோ, பொன்னியின் செல்வன் 2, தி ரோடு, குற்றப்பயிற்சி, தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்), தக் லைஃப், விடாமுயற்சி, குட் பேட் அக்லி உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில், நடிகை திரிஷா குறித்த சுவாரசியமான நிகழ்வை குறித்து தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார். அவர் பேசுகையில், "'மன்மதன் அம்பு' படத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த படத்தின் குறிப்பிட்ட காட்சிகளை ஒரு சொகுசு கப்பலில் படம் பிடித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது நடுராத்திரி மூன்று மணியளவில் யாருமே இல்லாத நேரத்தில், "ஐ எம் தீ குயின் ஆஃப் தீ வேர்ல்டு" என ஒரு சத்தம் பயங்கரமாக கேட்டது, யாருடா அது என சென்று பார்த்தால் திரிஷா. அவர் மட்டும் கடலை பார்த்து கத்திக் கொண்டிருந்தார். சரி அவர் ஆசையை ஏன் கெடுக்க வேண்டும் என நானும் எதுவும் சொல்லாமல் வந்து விட்டேன். அப்படியே பல வருடங்கள் கழித்து பார்த்தால் பொன்னியின் செல்வன் படத்தில் மகாராணியாகவே மாறி வருகிறார்" என்று மகிழ்சியுடன் கூறினார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத திரிஷா, சிரித்த முகத்துடன் டைட்டானிக் படத்தில் வருவதை போல் யாரும் இல்லாத நேரத்தில் கத்திப்பார்த்தேன். ஆனால் நீங்கள் பார்த்தது எனக்கு தெரியாது என வெட்கப்பட பேசினார்.
இதையும் படிங்க: விமர்சனம் என்ன எனக்கு புதுசா..! தக் லைஃப் படம் வரட்டும் அப்பறம் பாருங்க - நடிகை த்ரிஷா ஓபன் டாக்..!