×
 

சினிமாவில் பணியாற்ற பெண்கள் வந்தால் எப்படி..? வெற்றிமாறன் பேச்சு இணையத்தில் ட்ரெண்ட்..!

பெண்கள் குறித்து வெற்றிமாறன் பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை என்கின்ற பகுதில் இருந்து தனது சினிமா கனவை நினைவாக்க சென்னையில் அடியெடுத்து வைத்தவர் தான் இயக்குநர் வெற்றி மாறன், 1999ம் ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் இயக்குனர் பாலு மஹேந்திரன் இயக்கத்தில் உருவாகி  52 பாகங்களாக ஒளிபரப்பப்பட்ட "காதல் நேரம்" என்ற நிகழ்ச்சியில் அவருக்கு உதவி இயக்குநராக பணியாற்றினார். 

பின்பு, இயக்குனர் கதிரிடம் உதவி இயக்குனராகவும், அவரை தொடர்ந்து இயக்குநர் மஹேந்திராவின் 'ஜூலி கணபதி' மற்றும் 'அது ஒரு கனா காலம்' படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாபுரிந்தார். இதனை அடுத்து இயக்குநராக கலம் இறங்க நினைத்த வெற்றிமாறன் 2007ம் ஆண்டு நடிகர் தனுஷை வைத்து "பொல்லாதவன்" திரைப்படத்தினை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அதுமட்டுமல்லாமல் இன்று பல்சர் பைக் அதிக இளைஞர்கள் கைகளில் இருக்க காரணம் வெற்றிமாறன் தான். 

அதனை தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு மீண்டும் நடிகர் தனுஷை வைத்து "ஆடுகளம்" என்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். இப்படம் தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளை வெற்றிமாறனுக்கு பெற்றுத் தந்தது. மேலும் இந்தத் திரைப்படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்தது.

இப்படி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த வெற்றிமாறன், அடுத்ததாக விசாரணை, வட சென்னை போன்ற பல வெற்றி படங்களை இயக்கியும், தேசிய நெடுச்சாலை 4, நான் ராஜாவாக போகிறேன், பொறியாளன் போன்ற படங்களை தயாரித்தும் தமிழ் திரையுலகில் இன்று முக்கிய இயக்குனராக இடம் பிடித்து இருக்கிறார். மேலும் இவர் இயக்கிய 'விசாரணை' திரைப்படம் உலகளவில் பிரபலமாகி ஆஸ்கர் விருதிற்கு நேர்முறையாக பரிந்துரைக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஆயுள் தண்டனை பத்தாது.. அந்தரங்க உறுப்பையே அறுக்கணும்..! பொள்ளாச்சி தீர்ப்புக்கு நடிகை வரலட்சுமி பதில்..!

இந்த சூழலில், சமீபத்தில் பிரபல விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட வெற்றிமாறனிடம் 'வட சென்னை 2' எப்பொழுது வரும்..? என ரசிகர்கள் கேட்டதற்கு கண்டிப்பாக இப்படம் வரும் என கூறி அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்தார். இதனை தொடர்ந்து தற்பொழுது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படம் தயாராகி வருகிறது.  இந்த நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

அதன்படி, அவர் பேசுகையில், " ஒரு படத்தை தயாரித்து இயக்கி முடிக்க எவ்வளவு நாட்களை ஆகும் என்பதை இயக்குநரை தவிர வேறு யாரும் தீர்மானிக்க முடியாது, தீர்மானிக்கவும் கூடாது. அது இயக்குநர்களுக்கு மட்டுமே தெரியும். எந்த காட்சிகளை எங்கு எடுத்தால் நன்றாக இருக்கும் என்பதை எல்லாம் இயக்குனர் ஏற்கனவே கணித்து வைப்பதால் இயக்குனருக்கு கனகச்சிதமாக படம் எப்பொழுது தொடங்கி எப்பொழுது முடிக்கலாம் என்பது தெரியும்.

 

மேலும், சமீபத்தில் ஒரு பெண் இயக்குநர் என்னிடம் உதவி இயக்குநராக பணியாற்ற வந்தார். அவரை பார்க்கும்போது 20 வருடங்களுக்கு முன்பு என்னையே பார்த்தது போல் இருந்தது. தற்போது சினிமாவில் பெண்கள் அதிக ஆர்வத்தை காண்பிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. உண்மையில் எனக்கு வன்முறை படங்களை விட காதல் படங்கள் தான் அதிகம் பிடிக்கும் அதனையே அதிகம் தேர்வும் செய்வேன். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு காதலை விட சண்டையிலும் ஹீரோயிசத்திலும் உள்ளது. அதனால் தான் காதல் படங்கள் எடுத்தாலும் கைகூடாமல் போய் வருகிறது"  என தெரிவித்துள்ளார்.


 

இதையும் படிங்க: நான் குடும்ப பெண்ணாக வந்தால் தாங்க மாட்டீங்க..! சேலையில் மிரளவைத்த லாஸ்லியா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share