×
 

சிறிது நாட்களில் வெளியாக இருக்கும் "கூலி"..! படக்குழுவும் லோகேஷ் கனகராஜும் என்ன செய்திருக்காங்க பாருங்க..!

சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ திரைப்படம் வெளியீட்டுக்கு சிறிது நாட்களே உள்ள நிலையில் லோகேஷ் கனகராஜ் என்ன செய்து இருக்கார் பாருங்க.

தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் தான் ‘கூலி’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஹிட்களுக்கு மேல் ஹிட் தரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் முதன் முறையாக இணைந்து பணியாற்றும் இந்த திரைப்படம், ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பட வெளியீட்டுக்கு சிறிய நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், படத்துக்கான உற்சாகம், எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்களிடையே உயர்ந்து வருகிறது. ‘கூலி’ படத்தின் முக்கியத்துவம், ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கூட்டணியைத் தாண்டி, அதில் இணைந்துள்ள தீவிர நட்சத்திர பட்டியலிலும் தான் ஹைப்பை எகிற விட்டுள்ளது.

இதில் அமீர் கான், சத்யராஜ், தெலுங்கு சினிமாவின் கிங் நாகார்ஜுனா, மலையாள நடிகர் சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், கன்னட நட்சத்திரம் உபேந்திரா ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். இந்த இணைப்பு, கூலியை ஒரு பன்முகமான இந்திய திரைப்படமாக மாற்றியுள்ளது. ஒரே படத்தில் பல மொழி நடிகர்கள் ஒரே திரையில் இணைவது என்பது தற்போது தமிழ் சினிமாவுக்குள் வந்துள்ள புதிய பரிமாணமான ‘பான்-இந்தியா’ காட்சி எனலாம். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ‘ஜவான்’, ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற அனிருத், ‘கூலி’ படத்திற்காக தனிச்சிறப்பான பாடல்களையும், அதிரடி BGM-களையும் தயாரித்துள்ளார். மேலும் படத்தின் முதல் சிங்கிள் மற்றும் டீசர் வெளியாகியதிலிருந்து இசை ரசிகர்கள் பாடல்களில் உள்ள சக்தியையும் புகழ்ந்து வருகின்றனர்.

இதனை அடுத்து வரும் பாடல்கள் மற்றும் இசை வெளியீடு பற்றிய தகவல்களும் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது. இப்படி இருக்க படத்தின் வெற்றியை வேண்டி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடன இயக்குநர்கள், மற்றும் படக்குழுவினர், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்த வழிபாட்டின் போது, படக்குழுவினர் படம் வெற்றி பெற்று மக்கள் மனதில் நிலைத்திருப்பதைத் தான் பிரார்த்தித்தோம் என தெரிவித்தனர். திருவண்ணாமலையார் கோவில் என்பது பல திரை நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து போகும் ஆன்மீக தலமாக இருக்கிறது. இதில் 'கூலி' படக்குழுவும் தங்களை இணைத்துள்ளது.

இதையும் படிங்க: ‘கிராண்ட்பாதர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு..! கலக்கல் கதாபாத்திரத்தில் தேசிய விருது வென்ற எம்.எஸ்.பாஸ்கர்..!  

மேலும் ‘கூலி’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர், பெர்ஸ்ட் லுக் மற்றும் டீசர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. டீசரில் ரஜினிகாந்தின் ஸ்டைலான எண்ட்ரி, லோகேஷின் தனித்துவமான வன்முறை காட்சி அமைப்பு, அனிருத் இசையுடன் பவர்ஃபுல் டைலாக்ஸ் ஆகியவை படத்தின் மீது எதிர்பார்ப்பை பன்மடங்காக உயர்த்தியுள்ளன. அதுமட்டுமல்லாமல் பாடல்கள் ஒவ்வொன்றும் யூடியூபில் மில்லியன் கணக்கில் பார்க்கப்படும் நிலையில் உள்ளன. ரசிகர்கள் கூட்டம் டீசர் வெளியீட்டிலும், இசை வெளியீட்டிலும் பங்கேற்றது, இப்படத்தின் எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு சென்றிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. அதோடு படத்தின் படத்தொகுப்பு, விற்பனை, தியேட்டர் ஒப்பந்தங்கள், எல்லாம் இறுதி கட்டத்தில் உள்ளதாகத் தெரிகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும், அதே நேரத்தில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் இப்படம் வெளியாவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, 'கூலி' திரைப்படம், ஒரே நேரத்தில் பான் இந்தியா மற்றும் பான் உலகளவில் வெளியாகும் ஒரு பிரம்மாண்டமான திரைப்படமாக மாறியுள்ளது. ‘கூலி’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கான கவுன்ட்டவுன் தொடங்கிய நிலையில் ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவற்றில் படத்திற்கான ப்ரமோஷன்கள் டிரெண்டாகின்றன.  

‘கூலி’ திரைப்படம், சூப்பர் ஸ்டார் ரஜினியின் வெற்றிப் பயணத்தில் இன்னொரு மைல்கல் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், பவேர்ஃபுல் கதைக்களம், பிரம்மாண்ட நடிப்பு அணிவகுப்புடன் உருவாகியிருக்கும் இந்த படம், 2025-ம் ஆண்டின் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றாகும் என திரையுலகத்தினர் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: மீண்டும் அமானுஷத்தில் மிரள விட்ட ராகவா லாரன்ஸ்..! தெறிக்கவிடும் புல்லட் படத்தின் டீசர் வெளியீடு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share