தனுஷுடன் எனது உறவு இது தான்..! உண்மையை உரக்க சொன்ன நடிகை மிருணாள் தாகூர்..!
தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் இடையேயான உறவு குறித்து நடிகை வெளிப்படியாக பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். தமிழ் மட்டுமல்லாமல், ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் தன் தனிச்சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். இந்நிலையில், தற்போது இவர் ஹிந்தி சினிமா நடிகை மிருணாள் தாகூரை காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இந்த தகவல்கள் ஒட்டுமொத்தமாக கோலிவுட் மற்றும் பாலிவுட் ஊடகங்களில் 'கிசுகிசு' செய்தியாக பரவி வருவதால், ரசிகர்களிடையே பெரும் ஆர்வமும், குழப்பமும் எழுந்துள்ளது.
இந்த வதந்தி காரணமாக பலரும் விமர்சனைங்களை வைத்து வந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ‘சன் ஆப் சர்தார் 2’ பட விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பாலிவுட் ஹீரோ அஜய் தேவ்கான் நடித்துள்ள இப்படத்தில், மிருணாள் தாகூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த விழாவில் தனுஷ் எதிர்பாராத விதமாக கலந்து கொண்டதும், அதுவே பல கேள்விகளை எழுப்பியது. தனுஷ் விழாவில் மிருணாள் தாகூருடன் மிக நெருக்கமாக பேசியதும், சில நேரங்களில் கைகோர்த்துக்கொண்டு சுற்றிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இதனால் இருவரும் காதலிக்கிறார்களா? என்பதற்கான ஊகங்கள் வலுப்பெற்றன. இந்த நிலையில், வதந்திகள் பரவி வரும் சூழலில் நடிகை மிருணாள் தாகூர் தற்போது தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அதில், " நடிகர் தனுஷ் எனக்கு ஒரு நல்ல நண்பர் மட்டுமே. எங்கள் இருவருக்கும் இடையில் ரசிகர்கள் கற்பனை செய்பவர்களுக்கு நான் என்ன சொல்லுவது? இது கேள்வி அல்ல, தனுஷ் விழாவுக்கு எனக்காக ஒன்றும் வரவில்லை. அவர் அஜய் தேவ்கானின் நண்பர். அவர் தான் அழைத்தார். அதற்க்காகவே அவர் வந்தார். அதிலே எங்களை இணைத்து பேசுவது எனக்கு சிரிப்பையே அளிக்கிறது. இது வதந்தி மட்டுமே. எங்களுக்குள் அப்படி எதுவும் இல்லை" என்றார் மிருணாள் தாகூர். அவர் மேலும் கூறும்போது, தனுஷுடன் நடிக்க விருப்பம் இருப்பதாகவும், தற்போது நட்பு மட்டுமே உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இப்படி நடிகை விளக்கம் அளித்திருந்தாலும், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலர் இன்னும் சந்தேகத்துடன் இருக்கின்றனர். " அப்படி என்றால் உங்களுக்குள் எதுவுமே இல்லையா?", "நண்பர்கள் இவ்வளவு நெருக்கமாவா இருப்பாங்க?" என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: கியாரா அத்வானியின் நீச்சல் உடை காட்சிகள் நீக்கம்..! 'வார் 2' படத்துக்கு தணிக்கை குழு அதிரடி உத்தரவு..!
பலர் இதை பொழுதுபோக்காக பார்க்க, சிலர் உண்மையில் காதலாக கூட இருக்கலாம் என நம்பிக்கையோடு இருக்கின்றனர். தனுஷ் இதுவரை இதைப்பற்றி எந்தவொரு தகவலையோ அல்லது மறுப்பையோ வெளியிடவில்லை. தனுஷின் கடந்த வாழ்க்கை குறித்து நாம் அறிவோம். இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் மணமுறித்து, பின்னர் விவாகரத்து செய்தார். அதன்பிறகு தனுஷ் தனித்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், அவர் மீண்டும் காதலில் விழுகிறாரா? என்பது ரசிகர்களுக்கு பெரும் கவலையும், ஆர்வமும் தரும் விஷயமாக உள்ளது. இந்த சூழலில் மிருணாள் தாகூர் தன் விளக்கத்தால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டதாக நினைத்தாலும், ரசிகர்களிடம் இன்னும் பெரிதும் கேள்விகள் இருந்து வருகின்றன. இன்று இல்லை என்றாலும், நாளை என்ன ஆகும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.
ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் நெருக்கமான நண்பர்கள் மட்டுமே என்பது தான் அதிகாரப்பூர்வ நிலை.
இதையும் படிங்க: 200 கிலோ நகை..! தங்கத்தால் ஜொலித்த நடிகை ஐஸ்வர்யா ராய்..! பாதுகாப்புக்கு மட்டும் இத்தனை பேரா..!