×
 

சினிமாவிற்கு பின் தனது ஆசையே இதுதான்..! ‘மாரீசன்’ பட நாயகன் பகத் பாசில் வெளிப்படையான பேச்சு..!

‘மாரீசன்’ பட நாயகன் பகத் பாசில் சினிமாவிற்கு பின் தனது ஆசை இதுதான் என வெளிப்படுத்தியுள்ளார்.

நடிப்பின் மாஸ்டர் என அழைக்கப்படும் மலையாள நடிகர் பகத் பாசில். இவர் தற்போது தமிழ் மற்றும் மலையாள சினிமா உலகத்தில் ஒரே சமயத்தில் பிரபலமாக வலம் வருகிறார். தனது ஒவ்வொரு படத்திலும் வேறு வேறு தோற்றங்களும், மன அழுத்தங்களும் கொண்ட கதாபாத்திரங்களை ஏற்று தனது திறமையை நிரூபித்தவர். இவர் நடித்த ‘மாமன்னன்’ திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியானபோது, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார் பகத் பாசில்.

அதைத் தொடர்ந்து, தற்போது ‘மாரீசன்’ என்ற படத்தில் வடிவேலுவுடன் மீண்டும் இணைந்திருக்கிறார் பகத் பாசில். மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில், ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம், தமிழ் சினிமாவில் அந்த நிறுவனம் தயாரித்த 98-வது படமாகும். இப்படம் நேற்று திரைக்கு வந்து, விமர்சன ரீதியாக நல்ல மதிப்பீடுகளை பெற்று வருகிறது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இந்தப் படத்தில் பகத் பாசிலின் மனோதத்துவப் பாணியில் ஆன நடிப்பையும், வடிவேலுவின் காமெடி நடிப்பையும் புகழ்ந்து வருகின்றனர். மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைத்த பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு ஒரு தனித்த சுவையை கொடுத்திருக்கிறது.

இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்வில் பகத் பாசில் கலந்துகொண்டு, சினிமா வாழ்க்கைக்குப் பிந்தைய தனது ஆசைகளைப் பற்றி பேசும் போது ரசிகர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கினர். அவரிடம் ஒரு பத்திரிகையாளர், "நீங்கள் சினிமாவில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு என்ன செய்வீர்கள்?" என கேள்வி எழுப்ப, அதற்கு பகத் பாசில் அளித்த பதில் அவரது வாழ்க்கையின் நோக்கத்தை எடுத்து காட்டும் விதமாக இருந்தது. அதன்படி அவர் பேசுகையில், "ஒரு நாள் எனது நடிப்பு சலிப்பாகி விடும். மக்கள் என்னைத் திரையில் பார்க்க விரும்பாமல் இருக்கும் அந்தக் காலம் வந்தால், நான் ஓய்வெடுப்பேன். பிறகு, பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராக இருக்க விரும்புகிறேன்.

இதையும் படிங்க: நான் பார்த்த முதல் தமிழ் படம் "பாட்ஷா"..! உணர்வு பூர்வமாக பேசி கலங்க வைத்த நடிகர் ஃபஹத் பாசில்..!

ஒரு மனிதனை, அவருக்கு தெரிந்த இடத்திலிருந்து அவரது இலக்குக்கே அழைத்து செல்வது மிகவும் அழகான பணியாக எனக்குத் தெரிகிறது. நான் பல பயணங்களுக்குத் துணைபுரிய விரும்புகிறேன். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அவர்களை அழைத்து செல்வதில் சிறந்த அனுபவம் இருக்கும். நடிப்பு மட்டும்தான் வாழ்க்கை அல்ல. மற்ற வேலைகளில் உள்ள சுகமும் தனி தான்" என உருக்கமாக தெரிவித்தார். அவரது இந்த பேச்சு, சமூக ஊடகங்களில் விரைவில் வைரலானது. பகத் பாசிலின் தன்னலமற்ற பேச்சு, வாழ்க்கையை மிக எளிமையாக பார்க்கும் திறமை, மற்றும் தொழிலில் மட்டுமல்லாது, மனித உறவுகளிலும் அழகு தேடும் மனப்பாங்கு அனைவரையும் ஈர்த்தது.
இதில் அவர் குறிப்பிட்ட பார்ஸிலோனா, ஸ்பெயினின் பிரபல சுற்றுலா நகரமாகவும், நவீனக் கலையியல் நகரமாகவும் விளங்குகிறது. அந்த நகரில் ஓர் இந்திய நடிகர், தனது ஓய்வு வாழ்க்கையை ஊபர் டிரைவர் என்ற முறையில் நடத்தவேண்டும் எனத் தேர்ந்தெடுப்பது, பலருக்கும் புதுமையாகவும், சிந்திக்க வைக்கும் கருத்தாகவும் அமைந்துள்ளது. ‘மாரீசன்’ திரைப்படத்தில் பகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்திருப்பது ரசிகர்களுக்கு பெரிய காத்திருப்பை ஏற்படுத்தியது.

இந்த கூட்டணியில் ஏற்கனவே ‘மாமன்னன்’ படத்தின் வெற்றியும் இருக்கின்றது. அதனால், இந்த படம் வெளிவருவதற்குள் இருந்த எதிர்பார்ப்பு, தற்போது திரையில் உறுதியாகியுள்ளது. இப்படத்தில், முக்கிய கதாபாத்திரங்களில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, லிவிங்ஸ்டன், பி.எல். தேனப்பன், ரேணுகா, டெலிபோன் ராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

இதையும் படிங்க: விலையே ரூ.10 லட்சமா..! 'அம்பானி' கூடவாங்க முடியாதாம்.. நடிகர் பகத் பாசில் யூஸ் பண்ணும் ஃபோன் இதுதான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share