×
 

பாலியல் சீண்டல் செய்ததால் இயக்குநரை அடித்தேன்..! மலையாள நடிகை சிலங்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

மலையாள நடிகை சிலங்கா பாலியல் சீண்டல் செய்த  இயக்குநரை அடித்தாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத் திரையுலகிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் முக்கிய நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சிலங்கா. இவர் சமீபத்தில் தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டியில்,  60 வயதான இயக்குநரை அடித்ததாக பரப்பு தகவலை கொடுத்துள்ளார். அதன்படி அவர் பேசுகையில், " ஒரு சீரியல் படப்பிடிப்பின் போது, ஆரம்பத்தில் எனக்கு முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு நாள்ளிரவில் திடீரென, என்னிடம் முக்கியத்துவமற்ற ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. என்ன நடக்கிறது என புரியாமல் இருந்தேன்.

அதுமட்டுமல்லாமல் படப்பிடிப்பு நேரங்களில், அந்த இயக்குநர் என்னை நோக்கி முரட்டுத்தனமான, தகாத வகையிலான கருத்துகளை தெரிவிப்பதோடு, தகாத முறையில் தொடுதல், அதிர்ச்சி தரும் ஆபாசமான வீடியோக்கள் அனுப்புதல் போன்ற செயல்களையும் செய்துள்ளார். இப்படிப்பட்ட அந்த ஆபாச விஷயங்களை நான் கண்டதும் உடனே அவரை கண்டித்தேன். ஆனால் அதற்குப் பதிலாக அவர் என்னை மட்டும் அல்ல, என் குடும்பத்தை பற்றியும் அவமதிக்கும் விதத்தில் பேசத் தொடங்கினார். அது என்னை மிகவும் மனரீதியாக பாதித்தது, மேலும் பேசிக்கொண்டே எல்லை மீறினார்,  நானும் என்ன செய்கிறேன் என்று தெரியாமல், நான் அவரை புறக்கணிக்கத் தொடங்கினேன். ஆனால் அவர் எதையும் பொருட்படுத்தாமல் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்.

ஒரு கட்டத்தில் அவர் எல்லையை மீறியதால், அவரை நேரில் முடித்துவிட்டேன். மேலும் நான் எந்த ஒரு பிரச்சனையையும் வெளிப்படையாக பேச தயங்கவில்லை. இது போன்ற நிகழ்வுகளை நேரில் சந்திக்கும் நடிகைகள், தொழிலாளர்கள், தங்கள் குரலை உலகத்திற்கு நேராக ஒழிக்க செய்ய முன்வர வேண்டும். சும்மா பொறுத்துக்கொண்டு இருப்பது எப்பொழுதும் தீர்வாகாது " என கூறினார். நடிகை சிலங்காவின் இந்த துணிச்சலான செயல் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்படுகிறது. பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்..! அஞ்சலி செலுத்திவரும் திரைபிரபலங்கள்..!

“அந்த இயக்குநரின் மோசமான நடவடிக்கைகளுக்கு எதிராக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மேலும் #MeToo இயக்கத்துக்குப் பிந்தைய மலையாளத் திரைத் துறையின் பாதுகாப்பற்ற சூழ்நிலைகள், தொழில்நுட்ப ரீதியிலும், நெறிமுறை ரீதியிலும் சீர்திருத்தங்கள் தேவை என்பதற்கான முக்கிய உந்துதலாக இது மாறியுள்ளது. இறுதியாக, மலையாளத் தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறையில் முன்னேற்றமடைந்த பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் தேவை என்பது மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், நடிகை சிலங்காவின் திறந்த மற்றும் வெளிப்படையான பேச்சு, எதிர்காலத்தில் மற்ற பெண்களுக்கும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நடிகர் நிவின் பாலி மீது பதிந்த ரூ.1.90 கோடி மோசடி வழக்கு..! 'மஹாவீர்யார்' பட தயாரிப்பாளரின் புகாரால் புதிய சிக்கல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share