'ஜெய் பீம்' பாத்தாச்சு..அடுத்து 'கருப்பு' தான்..! ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் மீண்டும் சூர்யா.. ஜோதிகா கூட்டணி.. டீசர் பார்க்கலாமா..!
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் மீண்டும் சூர்யா..ஜோதிகா கூட்டணியில் உருவாகி இருக்கும் கருப்பு படத்திற்கான போஸ்டர் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய சினிமாவில் காலங்கள் பல கடந்தாலும் ஒருவரின் பெயர் மட்டும் ரசிகர்களின் மனதில் மாறாமல் ஆழமாக பதிந்து இருக்கும் ஒருவர் உண்டு. அப்படி தனது அசூரத்தமான நடிப்பால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் தான் நடிகர் சூர்யா. இவர் சமூக கருத்துக்கள் அடங்கிய பல கதைகளை தேர்ந்தெடுத்து, தமிழ்த் திரையுலகில் சூர்யா சில படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்க, இவரது நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சமிபத்தில் வெளியான 'ரெட்ரோ' படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக எந்த படத்தில் நடிக்க போகிறார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்களுக்கும் அதிகம் இருந்து வந்தது.
தற்பொழுது பலநாள் காத்திருப்புக்கு பலனாக அதற்க்கான விடை கிடைத்துள்ளது. அதன்படி, சூர்யா நடிக்கும் 'கருப்பு' திரைப்படம், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வருகிறது. தற்போது தனது நடிப்பை ஒருபக்கம் தள்ளிவைத்துவிட்டு இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள ஆர்.ஜே. பாலாஜி, இந்த படத்தின் மூலம் ஒரு வித்தியாசமான முயற்சியில் இயக்குனராக ஈடுபட்டுள்ளார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படம், ஒரு நீதிமன்ற வழக்கை மையமாகக் கொண்ட திகிலூட்டும் ஆழமான சமூக சிந்தனையுடன் கூடிய வழக்கறிஞர் திரைப்படமாக அமைந்துள்ளது. இதில் சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் மாறுபட்ட லுக்கில் நடித்துள்ளார். தம் முந்தைய திரைப்படங்களில் உணர்ச்சி மிக்க கதாபாத்திரங்களில் நடித்த அவருக்கு இது ஒரு புதிய பரிணாமமாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றனர். இப்படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இவர்களது ஜோடி, தமிழ் சினிமாவில் ஏற்கனவே வெற்றிகரமானது தான். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையில் இணையும் இந்த ஜோடி, 'கருப்பு' திரைப்படத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகின்றனர்.
மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி, மற்றும் நட்டி நட்ராஜ் போன்ற பல நட்சத்திர நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைக்கிறார் சாய் அபயங்கர். இவர் இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம், கதைக்கு உயிர் கொடுப்பதுடன் படத்தின் வெற்றிக்கு மேலும் வலுசேர்க்கும் விதத்தில் இசையில் தனது முழு திறமையையும் காண்பித்து வருகிறார்.
இதையும் படிங்க: அனைவரையும் வீட்டில் உட்கார வைக்க போகிறது "ஜூலை-19"..! இந்த வாரம் 'ஒன்னு' இல்ல..'ஐந்து' படமாம்..!
அவரது சமீபத்திய பேட்டியில், இந்தப் படத்தின் டீசர் மிகவும் வித்தியாசமான முறையில் உருவாகியுள்ளது. சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23-ம் தேதி டீசர் வெளியாகும்" என கூறியுள்ளார். இதனால், சூர்யா ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களும் ஜூலை 23ம் தேதிக்காக எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டு உள்ளனர். மேலும் இப்படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, தனது எக்ஸ் தளப் பக்கத்தில், 'கருப்பு' படத்தின் முக்கியமான அப்டேட் விரைவில் வரவுள்ளதாக அறிவித்துள்ளார். அவரது இந்த பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, "என்ன அப்டேட் வரும்?", "டீசரா?"அல்லது "பிறந்தநாள் ஸ்பெஷலா?" என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கிடையில், முன்னரே சாய் அபயங்கர் டீசர் பற்றிய தகவலை உறுதி செய்துள்ளதால், ரசிகர்கள் எதிர்பார்ப்புகள் இன்னும் பல மடங்காக அதிகரித்துள்ளன. இதன் அடிப்படையில், 'கருப்பு' படத்தின் டீசர் ஜூலை 23 அன்று வெளியாகும் என்பது உறுதியாக தெரிகிறது.
ஆகவே ‘கருப்பு’ திரைப்படம் வெறும் ஆக்ஷன் படமாக மட்டுமல்லாமல் சமூகத்திற்கு ஒரு நேர்மையான குரல் கொடுக்கும் படமாக உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை poster link : கிளிக் செய்து பார்க்கவும்..!
ஆகவே, 'கருப்பு' திரைப்படம், சட்டம், சமூகம், உணர்வு மற்றும் சமூகப் போராட்டங்களை மையமாகக் கொண்டு உருவாகும், ஒரு உணர்வுப்பூர்வமான திரைப்படமாக இருக்கிறதாம். நடிகர் சூர்யா தனது நடிப்பு திறமையையும், சமூகத்திற்கான தனது குரலையும் மீண்டும் நிரூபிக்கப்போகும் இந்த படத்திற்கு, இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் ஆழமான கதை பின்னணியாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
இதையும் படிங்க: 'மதராஸி' படம் பார்க்க தயாரா மக்களே..! போஸ்ட் போட்டு ஹைப்பை ஏற்றிய படக்குழு..!