இன்று ஒரே நாளில் 12 படங்கள்..! வீக்கென்டில் அதிரடியாக ஓடிடியில் வெளியானதால் ரசிகர்கள் ஷாக்..!
வீக்கென்டான இன்று அதிரடியாக ஓடிடியில் வெளியான 12 படங்கள்.
கொரோனா லாஃக் டவுனுக்கு பிறகு ஓடிடி தளங்ள் அதிகளவு வளர்ந்து வார வாரம் பல புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை வெளியாயிடுகின்றன. அந்த வகையில் இந்த வாரமும் பல படங்கள் வெளியாக உள்ளன. ஆக்ஷன், த்ரில்லர், ஹாரர், டிராமா போன்ற பல்வேறு வகை படங்களும் தொடர்களும் சினிமா ரசிகர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பாக இந்த தளங்கள் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இன்றைய முக்கியமான ரிலீஸ்களைப் பார்க்கலாம்.
1. மார்கன் : விஜய் ஆண்டனி நடித்த 'மார்கன்' படத்தில் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி மர்மமான குற்றங்களை விசாரிக்கும் அதிரடி கதையாக உள்ளது. விறுவிறுப்பான ஆக்ஷன் கதையால் ரசிகர்களை கவர்ந்த இந்த படம் இன்று "அமேசான் பிரைம்" ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இதையும் படிங்க: இந்த தீபாவளி சூர்யாவோட தான்..! 'கருப்பு' படம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த மாஸ் அப்டேட்.!
2. கலியுகம் : உலகம் அழிவின் விளிம்பில் இருக்கும் போது உயிர் பிழைப்பதற்காக மனிதர்கள் போராடும் ஓர் அற்புதமான கதை. ஷ்ரத்தா ஸ்ரீனாத், கிஷோர் நடிப்பில் உருவான சர்வைவல் த்ரில்லர் படமான இந்த "கலியுகம்" இன்று "டென்ட்கொட்டா" ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
3. படைத்தலைவன் : மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்த 'படைத்தலைவன்' யானைக்குட்டி வளர்ச்சி மற்றும் நட்பு சார்ந்த கதையாக பார்க்கப்பட்டது. இந்த படம் இன்று "டென்ட்கொட்டா" ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
4. ஜின் தி பெட் : வீட்டிற்கு வந்து சேரும் செல்லப் பிராணியால் ஏற்படும் ஹாரர் மாறட்டும் காமெடிகளை வெளிப்படுத்து படம் தான் "ஜின் தி பெட்". அனைவரது கவனத்தை பெற்ற இந்த படம் இன்று "அமேசான் பிரைம்" ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
5. ராஜபுத்திரன் : பிரபு மற்றும் வெற்றியுடன், கிராமத்து பின்னணியில் தந்தை-மகன் உறவு மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவம் பேசப்படும் படம். இந்த படம் இன்று "ஆஹா தமிழ்" ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
6. Mandala Murders : போலீசார் விசாரணையைக் குறிக்கும் க்ரைம் த்ரில்லர் தொடரான இந்த "மண்டல மர்டர்" ஹிந்தி தொடர் வாணி கபூர் நடிப்பில் இன்று "நெட்பிளிக்ஸ்" ஓடிடி தளத்தில் அதிரடியாக வெளியாகிறது.
7. Rangeen : நான்கு நண்பர்களின் வாழ்க்கை, காதல் மற்றும் கனவுகளைச் சொல்லும் ஃபீல்-குட் ஹிந்தி டிராமா தான் இந்த "ரங்கீன்". விறுவிறுப்பு நிறைந்த இந்த தொடர் இன்று "அமேசான் பிரைம்" ஓடிடி தளத்தில் அதிரடியாக வெளியாகிறது.
8. Sarzameen : பிருத்விராஜ், கஜோல் நடிப்பில் ராணுவ பின்னணியில் தேசபக்தி மற்றும் பழிவாங்கல் கதையுடன் உருவான ஆக்ஷன் படமான இப்படம் இன்று "ஹாட் ஸ்டார்" ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
9. Ronth : ஒரு காவலர் சந்திக்கும் மர்ம சம்பவங்களை முழுமையாக விவரிக்கும் ஸ்லோ-பர்ன் மலையாள த்ரில்லர். இதுவும் இன்று "ஹாட்ஸ்டர்" ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
10. Samshayam : மனைவியின் மீது எழும் சந்தேகத்தால் வாழ்க்கை மாறுபடும் ஒரு கணவனின் கதை தான் இந்த "சாம்ஷயம்". மலையாள படமான இப்படம் "மனோரமா மேக்ஸ்" ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
11. ShowTime : திரையுலகின் இருண்ட அரசியல், வாரிசு போர், ஈகோ யுத்தங்களை பேசும் தொடர் அருமையான தெலுங்கு படம் தான் ஷோ-டைம். இப்படம் "சன் நெக்ஸ்ட்" ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
12. X And Y : ஆன்லைன் காதல் மற்றும் அதனால் ஏற்படும் சிக்கல்களை பேசும் கன்னட ரொமான்டிக் டிராமா தான் இந்த எக்ஸ் மற்றும் ஒய். இப்படம் "சன் நெக்ஸ்ட்" ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
வழக்கம்போல் இந்த வாரமும் பல்வேறு வகை கதைகளுடன், பல்வேறு தளங்களில் புதிய படங்கள் மற்றும் தொடர்கள் வெளியாக உள்ளன. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விருப்பமான ஓடிடி தளத்தில் புதிய படங்களை கண்டு அனுபவிக்கலாம்.
இதையும் படிங்க: ஒரே பதிவால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகர் விநாயகன்..! கோபத்தை கொட்டி தீர்த்த தொண்டர்கள்..!