×
 

'ஆமாம்.. உடல் எடை குறைஞ்சிடுச்சி.. என்ன இப்ப'.. நடிகை பவித்ரா லட்சுமி காட்டமான பேச்சு...!

நடிகை  பவித்ரா லட்சுமி தனது உடல் எடை குறைந்ததை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை பவித்ரா லட்சுமி. ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்து, பின்னர் “நாய் சேகர்”, “பஞ்சதந்திரம்”, “தடம்” உள்ளிட்ட சில திரைப்படங்களில் தன்னுடைய அழகாலும், நடிப்பாலும்,பலரது கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக, காமெடி சமையல் நிகழ்ச்சியான 'குக் வித் கோமாளி' மூலம், அவர் தமிழ்நாட்டு ரசிகர்களிடையே இடம் பிடித்திருந்தார். பவித்ரா லட்சுமி தற்போது சில நாட்களாகவே உடல்நல பாதிப்பால் சிக்கியிருக்கிறார்.

அவருடைய சமீபத்திய தோற்றங்களைப் பார்த்த ரசிகர்கள், “இவர் யார்?” எனக் கேட்கும் அளவுக்கு அவர் மிகவும் எடை இழந்திருப்பது பார்வையாளர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலவிதமான விமர்சனங்களை பெற்று வருகிறது. பவித்ரா லட்சுமியின் முகத்திலும் உடலிலும் ஏற்பட்ட மாற்றங்களை தொடர்ந்து சிலர், “அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதால்தான் இப்படியொரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது” என கூறத் தொடங்கினர். இதையடுத்து, சிலர் அதற்காக ஏற்பட்ட பக்க விளைவுகளால் தான் அவர் அவதிப்படுகிறார் என விமர்சனங்களை அள்ளித்தெளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவரை குறித்து பரவும் தவறான செய்திகளுக்கு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதன்படி அதில், " எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் தான் நான் மெலிந்து போய்விட்டேன். பிளாஸ்டிக் சர்ஜரி என பரப்பப்படும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை. இப்போது நானும் மெதுவாக மீண்டு வருகிறேன். உடலில் சதை கொஞ்சம் கொஞ்சமாக சேர ஆரம்பித்து விட்டது. விரைவில் மீண்டும் எனது பழைய நிலைக்கு திரும்புவேன்" என இந்த பதிலில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இது அவருடைய ரசிகர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பவித்ரா லட்சுமியின் தற்போதைய படங்களை பார்த்த சில ரசிகர்கள் “இவருக்கு என்ன ஆச்சு?”, “முன்பு பார்க்கும் அழகு இப்போது இல்லை”, “உண்மையில் இது யாருன்னு தெரியவில்லை” என சமூக வலைதளங்களில் சில கருத்துக்களை பதிவு செய்தாலும் பல ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்துள்ளனர். அந்த வகையில், " உடல் மெலிவது நம் கட்டுப்பாட்டில் இருக்காது. உடல்நிலை காரணமாக ஏதேனும் ஆகலாம். ஆனால் அவர் ஒரு திறமையான நடிகை என்பதை மறக்கக்கூடாது", "பவித்ரா தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்.

இதையும் படிங்க: ஒரே வாரத்தில் 11 திரைப்படங்கள்...திக்குமுக்காட வைக்கும் தியேட்டர்கள்..! செய்வதறியாது குழப்பத்தில் சினிமா ரசிகர்கள்..!

அவரை குறை சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர் மீண்டு வருவார்", "நாம் அனைவரும் ஏதாவது ஒரு நேரத்தில் உடல்நல பிரச்சனையை சந்திக்கிறோம். அவர் தைரியமாக பேசுகிறார், அதுவே போதுமானது.” என ஆதரவு குரலை தெரிவித்து வருகின்றனர். மேலும், பவித்ரா லட்சுமி தனது திரையுலக பயணத்தை டான்சர், பின்னர் ரியாலிட்டி ஷோ, சீரியல்கள் என அனைத்திலும் பங்குபெற்று அதன் பிறகு, “குக் வித் கோமாளி” போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனக்கென தனித்த அடையாளத்தை அமைத்தார். இப்படிப்பட்ட பவித்ரா லட்சுமி தன்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டத்தை கடந்து செல்கிறார். உடல்நிலை பாதிப்பால் ஏற்பட்ட மாற்றத்தை தவிர, அது பற்றிய வதந்திகளும், விமர்சனங்களும் அவரது மனதளவியலுக்கும் சவாலாக இருக்கலாம். ஆனால் அவர் காட்டும் தைரியம், நேர்மை, மற்றும் தன்னம்பிக்கை, தன்னை மீண்டும் பார்வையாளர்களின் முன்னிலையில் அழகாகவும், வலிமையாகவும் நிலைநிறுத்தும் என நம்புகிறார்.

வாழ்க்கையில் யாரும் இடைவெளியில்லாமல் வளர முடியாது. இடைவெளி என்பது உங்கள் வளர்ச்சிக்கான இடம். பவித்ரா லட்சுமியின் இந்த இடைவெளி, அவரதுசினிமாவின் மிகப்பெரிய இடத்துக்கான தொடக்கமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.
 

இதையும் படிங்க: 'தளபதி' இடத்தை பிடித்த 'குட்டி தளபதி'..! சினிமாவில் விஜய் பெற்ற சம்பளத்தை தன்வசப்படுத்திய நடிகர் 'SK'..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share