×
 

'தளபதி' இடத்தை பிடித்த 'குட்டி தளபதி'..! சினிமாவில் விஜய் பெற்ற சம்பளத்தை தன்வசப்படுத்திய நடிகர் 'SK'..!

சினிமாவில் நடிகர் விஜய் பெற்ற சம்பளத்தை இன்று தன்வசப்படுத்தி இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் வரிசையில் தற்பொழுது விஜய்க்கு அடுத்தபடியாக பார்க்கப்படுபவர் தான் ரசிகர்களால் குட்டி தளபதி என அன்புடன் அழிக்கப்படும் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான "அமரன்" திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இப்படம் உலகளவில் ரூ.350 கோடி வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தரப்பில் தெரிவிக்கபடுகின்றன. இதன் மூலம் சிவகார்த்திகேயன், இந்திய சினிமாவில் மிகப்பெரிய ஹீரோக்களின் உயர்ந்த ரேஞ்சுக்கு அவரும் சென்று விட்டார்.

இப்படியாக “அமரன்” பட வெற்றிக்குப் பின், சிவகார்த்திகேயனை வைத்து படம் தயாரிக்க, பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் என பலரும் போட்டியிட்டு வருகின்றனர். தற்போது, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் "மதராஸி" திரைப்படத்தில் நடித்து உள்ளார் சிவகார்த்திகேயன். இது ஒரு ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கிறதாம். இப்படம் சிவகார்த்திகேயனின் திரைபயணத்தில் முக்கிய மைல்கல் ஆக இருக்கப்போகிறது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார். இந்த இருபடங்களை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் அடுத்து யார்? இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு தான் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து இயக்கப்போகிறார் என பேசப்பட்டு வந்த பொழுது நேற்று அவரே சிவாவை வைத்து அட்டகாசமான படத்தை இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, சமீபத்தில் நடைபெற்ற "தலைவன் தலைவி" பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வெங்கட் பிரபு, தன்னுடைய அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக உறுதி செய்தார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இது வெங்கட் பிரபு – யுவன் கூட்டணியின் நீண்ட நாட்கள் பின் மீண்டும் உருவாகும் படம் என்பதால் திரையுலகில் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. முதலில் "குட்நைட்" பட இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்தார். அந்தப் படத்தில், மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் சிவாவுக்கு தந்தையாக நடிக்கவிருந்ததாக தகவல் வந்தது. ஆனால் மோகன்லாலின் கால்ஷீட் பிரச்சனை காரணமாக, அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குப் பதிலாக வெங்கட் பிரபுவின் படம் முதலில் எடுக்கப்பட உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. இவை மட்டுமல்லாமல், புஷ்கர் – காயத்ரி இயக்கும் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: மகனுக்கு 51வது பிறந்தநாள்.. சாய்பாபா கோவிலில் தாய் ஷோபா செய்த காரியம்..!

குறிப்பாக “விக்ரம் வேதா”, “சூழ்நிலை” போன்ற படங்களை இயக்கிய புஷ்கர் – காயத்ரி, சிவகார்த்திகேயனுடன் இணைந்து எந்த வித்தியாசமான கதையை உருவாக்கப் போகிறார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துகிடக்கின்றனர். இப்படி முருகதாஸ், வெங்கட் பிரபு, புஷ்கர் – காயத்ரி என மூன்று பெரிய இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றும் நிலையில், சிவகார்த்திகேயனின் சம்பளம் மிகப்பெரிய உயர்வை நோக்கி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் ஒரு படத்துக்காக ரூ.60 முதல் ரூ.70 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என கூறப்படுவது உண்மை தான் என்றாலும், இந்த மூன்று படங்கள் முடியும் சமயத்தில் அவரது சம்பளம் ரூ.100 கோடியைத் தொடும் என திரையுலக வட்டாரங்கள் கணிக்கின்றன.

காரணம், சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஓரளவுக்கு மார்க்கெட்டை உருவாக்கியுள்ளார். குறிப்பாக “அமரன்” திரைப்படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, பான் இந்தியா ஹீரோவாக அவர் உருவாகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. தற்போது தயாரிப்பாளர்கள், சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் எடுத்தால், ரிலீஸுக்கு முன்பே ப்ரீ-ரிலீஸ் பிஸினஸ்ஸாக லாபம் கிடைத்துவிடும் என திட்டமிடுகிறார்களாம். படத்தின் உரிமைகள், ஓடிடி, சாடிலைட், ஹிந்தி மற்றும் தெலுங்கு டப் ஆகியவற்றின் பிஸினஸ் மூலம், படம் திரைக்கு வருவதற்குள் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.50 முதல் ரூ.80 கோடி வரை வசூலாகிறதாம். இது தங்கள் படத்தை குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கினாலும் அதிக லாபத்தை உறுதி செய்யும் ஒரு வணிக மாடலாக சிவா இருக்கிறார் என தெரிவிக்கின்றனர்.

எனவே, சிவகார்த்திகேயன் தற்போது, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து வருகிறார். “அமரன்” படம் மூலம் நிரூபித்த வெற்றி, பான் இந்தியா விரிவாக்கம், திரை உலகின் முன்னணி இயக்குநர்களின் பிடிவாதம், இவரது கிராஸ்-இண்டஸ்ட்ரி மார்க்கெட்டின் வலிமையைஆகியவை சிவாவை மிகப்பெரிய பட்ஜெட் நடிகராக மாற்றுகிறது. தற்போது உருவாகி வரும் மூன்று முக்கிய படங்கள் முடியும் முன்னர், இவர் "ரூ.100 கோடி ஹீரோ" என அழைக்கப்படக்கூடிய நிலையை அடையக்கூடும் என சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: "ஹாப்பி பர்த்டே டூ தளபதி விஜய்".. கென்யாவில் இருந்து பறந்து வந்த வாழ்த்து.. சொன்னது யார் தெரியுமா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share