×
 

எதிர்மறை விமர்சனங்களுக்கு கடும் பதிலடி..! நடிகை 'அனசுயா பரத்வாஜ்' பேச்சால் கலக்கத்தில் இணையவாசிகள்..!

நடிகை 'அனசுயா பரத்வாஜ்' எதிர்மறை விமர்சனங்களுக்கு கடும் பதிலடி கொடுக்கும் பேச்சால் இணையவாசிகள் கலக்கத்தில் உள்ளனர்.

தெலுங்கு சினிமா உலகில் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கி இருப்பவர் தான் நடிகை அனசுயா பரத்வாஜ். தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்த இவர், இன்று வெள்ளித்திரையிலும், தொலைக்காட்சித் திரைகளிலும் சம கால நடிகைகளுக்கு போட்டியாக திகழ்கிறார். ‘புஷ்பா’, ‘ரங்கஸ்தலம்’ போன்ற வெற்றிப் படங்களில் இவரது நடிப்பு பாராட்டுகளை பெற்றதுடன், தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் அனசுயா, ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளார். இவர் தனது குடும்ப வாழ்க்கையிலும் உறுதியான ஓர் பெண் என்பதை நிரூபித்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தாயாக இருந்தாலும், அழகிலும், நம்பிக்கையிலும் ஒரு நாயகியை விட குறைவில்லாமல் திகழ்கிறார்.

இந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் அனுசுயா தனது சமூக வலைதள அனுபவங்களை பகிர்ந்து, எதிர்மறையான விமர்சனங்கள் குறித்து தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதன்படி அவர் பேசுகையில் " யாராவது என்னைப் பற்றி எதிர்மறையாக பேசினால், அவர்களை உடனடியாக பிளாக் செய்து விடுவேன். இந்த நேர்மையான முறையை நான் தேர்வு செய்துள்ளேன். இதுவரை சுமார் 30 லட்சம் பேரை பிளாக் செய்துள்ளேன்.. நான் என் வாழ்க்கையை அமைதியாக வாழ விரும்புகிறேன். சமூக வலைதளங்களில் எதையும் தவறாகப் புரிந்து விமர்சனம் செய்கிறவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். சிலர் கோபம், சிலர் பொறாமை, சிலர் வெறுப்பு காரணமாக அவதூறு பரப்புகிறார்கள். இவர்கள் அனைவரும் என் மனநலத்திற்கு ஆபத்தானவர்கள். எனவே இவர்களை நான் எதையும் சொல்லாமல் நேரடியாக பிளாக் செய்துவிடுகிறேன்..

அதுமட்டுமல்லாமல் நான் ஒரு சாதாரண மனுஷி. எனக்கும் மனம் உண்டு. பொது வாழ்வில் இருப்பதால் அனைவரும் என்னை விமர்சிக்கலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் நான் என்னுடைய வரம்புகளை தெரிந்து வைத்திருக்கிறேன். என் நன்மைக்காக, என் மன அமைதிக்காகவே இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறேன்.. இதுமட்டுமல்லாமல், என்னை அவமதித்த பலருக்கு நேரடியாக பதிலடியும் கொடுத்திருக்கிறேன். இந்த உலகத்தில் கூட சிலரை ப்ளாக் செய்துவிட்டேன் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: "மோனிகா" பாடலுக்கு பூஜா ஹெக்டே அணிந்த ட்ரெஸ் இவ்வளவு காஸ்லியா..! அரண்டுபோன நெட்டிசன்கள்..!

ஏனெனில் எனக்கு அந்த அளவுக்கு சகிப்பு தன்மை இல்லை" என கூறினார். அனுசுயாவின் இந்த பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. பல பெண்கள், குறிப்பாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சனங்கள், தவறான கருத்துகள் மற்றும் துன்புறுத்தல்களால் பாதிக்கப்படுபவர்கள், அனுசுயாவின் வார்த்தைகளை ஆதரித்து வருகின்றனர். அவருடைய இந்த உறுதியான நிலைப்பாடு, பெண்கள் தங்களை பாதுகாக்க எடுத்துக்கொள்ளும் உரிமையின் ஒரு உதாரணமாக பார்க்கப்படுகிறது. இது, சினிமா மற்றும் சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிராக வரும் ‘Body Shaming’, ட்ரோல், ஆன்லைன் ஹராஸ்மென்ட் ஆகிய பிரச்சனைகளை மீண்டும் ஒரு முறை பேச வைக்கிறது. மேலும் நடிகையான அனுசுயா தற்போது பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தெலுங்கு திரைப்படங்களில் மட்டுமல்லாமல், பன்முகத்தன்மையுடன் தமிழிலும், மலையாளத்திலும் தனது நடிப்பை விரிவாக்க முயற்சி செய்து வருகிறார். சமீபத்தில் சில வலைதளத் தொடர்களிலும் அவர் நடித்ததின் மூலம் அவரது ரசிகர்கள் பலம் மேலும் அதிகரித்துள்ளது.

நடிகை அனசுயா பரத்வாஜ் தனது வாழ்கையில் எதிர்கொள்ளும் விமர்சனங்களை தைரியமாக சமாளிக்கின்றது, அவரது உள்ளார்ந்த உறுதியையும் தன்னம்பிக்கையையும் காட்டுகிறது. ஒவ்வொரு பெண்ணும் தனது நலனை பாதுகாக்க உரிமையுடையவள் என்பதை அவர் இன்னொரு முறை நிரூபித்திருக்கிறார். சமூக வலைதளங்களில் எதிர்மறை கருத்துகளை புறக்கணித்து, தன்னை உயர்வாக கொண்டு செல்வதற்கான இந்த முயற்சி, பலருக்கும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிங்க: ‘மதராஸி’ பட முதல் சிங்கிள் ப்ரோமோ வெளியீடு..! ட்ரெண்டிங்கில் sk-வின் “சலம்பல” பாடல் வீடியோ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share