×
 

அடுத்த தளபதி நானாக இருக்கனும்.. ஆசிர்வாதம் பண்ணுங்க..! நடிகர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற சூர்யா சேதுபதி..!

படம் வெற்றி பெற வேண்டும் என நடிகர் விஜயிடம் ஆசிபெற்றார் நடிகர் சூர்யா சேதுபதி.

தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது பாலிவுட் திரை உலகம் வரையிலும் வில்லனாக மாறி இருக்கும் ஒரே ஒருவர் என்றால் அவர்தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. ஏனெனில் ஆரம்பத்தில் கதாநாயகனாக வளம் வந்த நடிகர் விஜய் சேதுபதியை என்று மக்கள் வில்லனாக பார்க்க ஆரம்பித்தனரோ அன்றிலிருந்து அவரை கதாநாயகனாக பார்ப்பதை விட வில்லனாக பார்ப்பதையே முழுமையாக விரும்புகின்றனர். 

குறிப்பாக 'மாஸ்டர்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி 'பவானி' என்ற கேரக்டரில் வந்திருந்தாலும் அவர் ஒரு வித்தியாசமான வில்லனாகவே அனைவரது கண்களிலும் காணப்பட்டார். அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் அவர் தன்னுடைய முடியை டெவில் போல வைத்து செய்த அட்ராசிட்டி வேலைகள் அனைத்தும் பலரையும் வியக்க வைத்தது. அதுமட்டுமல்லாமல் உலக நாயகன் கமலஹாசனின் 'விக்ரம்' திரைப்படத்திலும் அசாத்திய வில்லனாக தோன்றிய விஜய் சேதுபதியை யாராலும் மறந்திருக்க முடியாது. அதேபோல பாலிவுட்டில் உச்சபட்ச நாயகனாக இருக்கும் ஷாருக்கானுடன் இணைந்து 'ஜவான்' திரைப்படத்தில் நடித்திருப்பார் விஜய் சேதுபதி. அதில் மிகப்பெரிய மாஸ்டர் வில்லனாக தோன்றியிருக்கும் விஜய் சேதுபதியை மக்கள் இன்றும் புகழ்ந்து பாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: என்னா படம்.. எப்படிப்பட்ட படைப்பு..! '3BHK, பறந்து போ' படத்திற்கு நடிகர் சூரியின் கமெண்ட்ஸ்..!

அதுமட்டுமில்லாமல் ஷாருக்கானே சேதுபதியை பார்த்து சாண்டா கிளாஸ் என்று கிண்டல் அடிக்கும் பொழுது அவரையே வியக்க வைக்கும் அளவிற்கு தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி இன்றும் மக்கள் மனதில் மக்கள் செல்வனாக வாழ்ந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இப்படிப்பட்ட விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி தற்பொழுது 'ஃபீனிக்ஸ் விலான்' என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.

இந்த திரைப்படம் இன்று வெளியானாலும் இத்திரைப்படம் வெளியாவதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் சமூக வலைத்தளத்தில் மிகவும் ட்ரெண்டாக்கப்பட்டதுடன் பல விமர்சனங்களுக்கும் ஆளானார். காரணம் பத்திரிக்கையாளர் சந்திப்பின் பொழுது எனது தகப்பனான விஜய் சேதுபதி வேறு நான் வேறு என்று இவர் கூறியதால், நீங்கள் எதன் அடிப்படையில் இப்படி பேசுகிறீர்கள் இப்பொழுது தான் முதல் திரைப்படத்திலேயே நடிக்க வந்திருக்கிறீர்கள் அதுக்குள்ளே இப்படி பேசுகிறீர்களா? என பலரும் விதண்டாவாதமாக பேச என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார் சூர்யா சேதுபதி.

மேலும் இவர் சொன்ன இந்த ஒரு வார்த்தையை பிடித்துக் கொண்டு பல ட்ரோல் சேனல்கள் அவரை ட்ரோல் செய்து வந்தனர். இதனைக் குறித்து விஜய் சேதுபதியிடம் கேட்கும் பொழுது, இது என் மகனினுடைய திரையுலக வாழ்க்கை.. அவனுக்கு வரும் பிரச்சினைகளை அவனே சமாளிக்க கற்றுக் கொள்ளட்டும் என கூறி சென்றார். இதனை அடுத்து தன்னைக் குறித்து அவதூறு கருத்துக்களை பேசும் அனைத்து சேனல்களையும் படக்குழுவினருடன் சூர்யா சேதுபதியும் இணைந்து வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக புகார்கள் எழுந்து வந்தது. இதைக் குறித்து நடிகர் விஜய் சேதுபதியிடம் கேட்டபொழுது, அவர் எனக்கு இதனை குறித்து எதுவும் தெரியாது ஒருவேளை அப்படி நடந்திருந்தால் எனது மகனின் சார்பாக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.

இப்படி பல கான்ட்ரவசிகள் வந்தாலும் சிலர் இது ஃபீனிக்ஸ் விலான் திரைப்படத்திற்கான பிரமோஷன் தான். ஆதலால் தான் இப்படி நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள் பட குழுவினர் என்று தங்களது சந்தேகங்களை வெளிப்படையாக கூறி வந்தனர். இப்படி இருக்க பல தடைகளையும் தாண்டி ஜூலை நான்காம் தேதியான இன்று '3BHK மற்றும் பறந்து போ' ஆகிய படங்களுடன் இவரது ஃபீனிக்ஸ் விலான் திரைப்படமும் வெளியாகி இருக்கிறது.

இப்படி முழுக்க, விஜய் சேதுபதியின் மகனான சூர்யா செங்கல்பட்டில் இருக்கும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கொலை குற்றத்துக்காக அடைக்கப்படுகிறார்.. பல எதிர்ப்புகளின் மத்தியில் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்குச் சென்ற சூர்யாவை ஜெயிலிலேயே வைத்து கொலை செய்ய ஒரு சிலர் திட்டமிட்டு இருக்கிறார்கள்.. அங்கிருந்து அவர் தப்பிப்பாரா? இல்லையா? என்பது தான் இந்த ஃபீனிக்ஸ் படத்தின் கதையாக இருக்கிறது.

இப்படி படம் முழுக்க பழிவாங்கும் படலமாக உருவாகி இருக்கும் திரைப்படத்தை இளசுகள் பலரும் கண்டு அவரை பாராட்டி வருகின்றனர். இந்த சூழலில் இந்த படம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காகவும் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் இந்த திரைப்படத்தை பார்த்து கமெண்ட்ஸ்களை கொடுக்க வேண்டும் என்றும் கூறி நடிகர் சூர்யா சேதுபதி தற்பொழுது நடிகர் விஜயை நேரில் சந்தித்து ஆசிப்பெற்று இருக்கிறார். 

தற்பொழுது நடிகர் விஜய் உடன் அவர் எடுத்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இதையும் படிங்க: விடிய விடிய நடந்த மிட்நைட் பார்ட்டி..! நடிகைகளுடன் ஜாலி பண்ண நடிகர் தனுஷ்.. லீக்கான போட்டோ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share