கோமாவில் இருந்து மீண்ட பிரபல சீரியல் நடிகை... கணவர், குழந்தையை மறந்த அவலம்..!
பிரபல சீரியல் நடிகையின் துயர சம்பவத்தை கேட்டு ரசிகர்கள் கண்ணீர் விட்டு கதறி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் பிரதிப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நடிப்பில் வெளியான "கோமாளி" திரைப்படத்தை நம் அனைவராலும் மறக்க முடியாது. மிகவும் நகைச்சுவை கலந்த திரைப்படமாக இத்திரைப்படத்தை நாம் பார்த்தாலும் அதில் முக்கியமான ஒரு மையக்கருத்து இருக்கிறது.
அத்திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன், பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு பெண்ணின் மீது காதல் வயப்படுகிறார், பின்பு அந்தப் பெண்ணை ப்ரபோஸ் செய்ய தயாராகும் பொழுது நடுவில் வந்த கே.எஸ்.ரவிக்குமார், ரவி மோகன் கையில் இருக்கும் சிலையை பிடுங்கி விட்டு ஓடுவார். அதனை மீட்டு வர ஓடும் ரவி மோகன் மீது லாரி மோதி விபத்து ஏற்பட அவர் கோமாவுக்கு சென்று விடுவார். பின்பு தனது வாழ்க்கையில் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக கோமாவில் இருந்த ரவி மோகன் மீண்டும் எழுந்து பார்க்கும் பொழுது அனைத்தும் புதியவையாகவே இருக்கும். பின்பு அவர் படும் கஷ்டங்களும் அதிகமாகவே இருக்கும்.
இதையும் படிங்க: லாக்கப்பில் போலீஸ் எப்படி அடிப்பாங்க தெரியுமா.. தனது அனுபவத்தை நடு நடுங்க பேசிய நடிகர் ஜெய்..!
ஆனாலும் இத்திரைப்படத்தில் அவர்கள் சொல்ல வரும் கருத்து என்னவெனில் ஒருவர் கோமாவுக்கு சென்றால் அவருடைய வாழ்க்கையில் பல சந்தோஷங்களை இழந்து இருப்பார்கள் பல நினைவுகளை இழந்து இருப்பார்கள் என்பதே உண்மை என்பதை காண்பித்து இருப்பார். அதேபோல் சினிமா பிரபலம் ஒருவருக்கும் நடந்திருக்கிறது என்றால் நம்ப முடியுமா.. ஆம்... பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "வித்யா நம்பர் ஒன்" என்கின்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் "நடிகை கேரோலின்".தமிழ் சீரியல்களில் மட்டுமல்லாமல் மலையாள சீரியல்களிலும் நடித்து தமிழ் மற்றும் கேரளா சின்னத்திரை உலகில் பல ரசிகர்களைக் கொண்ட நடிகையாக வளம் வந்தார்.
இப்படி இருக்க, தான் நடித்துக் கொண்டிருந்த பொழுதே மேக்கப் ஆர்டிஸ்ட் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கேரோலின். இதனை அடுத்து இவர்கள் இருவரது காதல் திருமணத்திற்கு அடையாளமாக பெண் குழந்தையும் பிறந்தது. இந்த சூழலில் பிறந்து ஐந்து மாதமேயான தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துவிட்டு திரும்பும் பொழுது அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சரிந்து கீழே விழுந்து உள்ளார். இதனை அடுத்து அவரது கணவர் அவரை மருத்துவமனையில் சேர்த்த பொழுது திடீரென அவருக்கு வலிப்பு வர ஆரம்பித்துள்ளது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட நடிகை கேரோலின் கோமாவிற்கு சென்று உள்ளார்.
ஒரு நாளைக்கு மட்டும் இவருக்கு மருத்துவ செலவு என பார்த்தால் ரூபாய் 90ஆயிரம் வரைக்கும் செலவு செய்திருக்கிறார் அவரது கணவர். இப்படியே கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு மேலாக கோமாவில் இருந்த கேரோலினுக்கு மீண்டும் சுயநினைவு வந்திருக்கிறது. ஆனால் நினைவு வந்தாலும் கேரோலினுக்கு தனது கணவரையும் குழந்தையையும் யார் என்றே தெரியாமல் போய் இருக்கிறது.
இதனால் மனம் வேதனை அடைந்த அவரது கணவர் இருவரது திருமண புகைப்படங்கள் மற்றும் கர்ப்பமாக இருக்கும் பொழுது எடுத்த வீடியோக்கள் என அனைத்தையும் காண்பித்து இருக்கிறார். ஆனாலும் அவருக்கு எதுவும் நினைவுக்கு வரவில்லையாம்.. ஆனாலும் தன்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற பல நினைவுகளை இழந்து எப்படி மகிழ்ச்சியுடன் வாழ்வது என கேரோலின் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தனக்கு நடந்த இத்தனை துயரை சம்பவங்களையும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள், உண்மையாகவே உங்களுக்கு வந்த நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது... இருப்பினும் உங்களுக்கு பழைய நினைவுகள் அனைத்தும் திரும்பி வரவேண்டும் என நாங்கள் அனைவரும் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம் என கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: தனது மனைவி பிரிவை தாங்க முடியல.. தற்கொலைக்கு முயன்ற நடிகர் அமீர்கான்.. ரசிகர்கள் ஷாக்..!