×
 

"இட்லி கடை" படத்தில் 'மினி இட்லி'யாக வரும் நடிகர்..! பார்த்திபன் பதிவு இணையத்தில் வைரல்..!    

தனுஷின் இயக்கத்தில் உருவான ‘இட்லி கடை’ படத்தை குறித்து பார்த்திபன் அழகாக பேசியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ள நடிகர் தனுஷ், தற்போது தனது இயக்குநர் கம்பேக் மூலம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் உருவாகி வரும் 'இட்லி கடை' திரைப்படம், பல்வேறு விசித்திர அம்சங்களையும், பிரமாண்ட நடிகர் பட்டியலையும் கொண்டுள்ளதால், இந்த படம் தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இப்படம் தனுஷின் 52-வது திரைப்படம் என்பது கூடுதல் சிறப்பு. இவர் இயக்கும் நான்காவது படம் "இட்லி கடை "என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ‘பா. பாண்டி’ திரைப்படத்தை இயக்கிய தனுஷ், அதன் பிறகு பிஸியாக நடிப்பில் இருந்து வந்தார்.

தற்போது மீண்டும் இயக்குனர் அவதாரத்தில் திரும்பியுள்ள அவர், ‘இட்லி கடை’ மூலம் திரைத்துறையில் வேறு ஒரு பரிமாணத்தைக் காண்பிக்க இருக்கிறார். இப்படி இருக்க ‘இட்லி கடை’ என்பது ஒரு சாதாரண பெயரை போலத் தோன்றினாலும், அந்த பெயரில் உள்ள நகைச்சுவை, வாழ்க்கை சாயல் மற்றும் சமூகப் பொருத்தங்கள் ஏற்கனவே பலரது கவனத்தை ஈர்த்து வருகின்றன. இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையை ஜி.வி.பிரகாஷ் அமைத்துள்ளார். இந்த இருவரும் ஏற்கனவே பல ஹிட் இசை கூட்டணிகளை வழங்கியுள்ளனர். எனவே, இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரணமாக ஹீரோவாகவே திகழ்ந்து வரும் அருண் விஜய், ‘இட்லி கடை’யில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது ரசிகர்களுக்கு வியப்பாகவும், ஆவலாகவும் உள்ளது. தனுஷ் மற்றும் அருண் விஜய் எதிர்பார்க்கப்படும் கிளாஷ் திரையில் எப்படி அமையும் என்பதற்காக ரசிகர்கள் ஏற்கனவே காத்திருக்கின்றனர். மேலும், இந்தப் படத்தில் தெலுங்கு நடிகை ஷாலினி பாண்டே, தனுஷின் தங்கை கதாபாத்திரத்திலும், அருண்விஜய்க்கு ஜோடியாகவும் நடித்திருப்பது மேலும் ஆர்வத்தை கூட்டுகிறது. மேலும் சண்டை, சகோதர பாசம் மற்றும் காதல் கலந்த கலவை என இந்த படத்தில் பல பரிமாணங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியாக சிறப்பு கதாபாத்திரத்தில் கௌரவ வேடமாக பார்த்திபன் இப்படத்தில் நடித்துள்ளார். தனது டப்பிங் பணிகளை முடித்த பிறகு, அவர் தனுஷுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தனது இயல்பான நகைச்சுவை பாணியில், தனுஷின் திறமை, முயற்சி மற்றும் சினிமா பாசத்தை பாராட்டியதோடு, சில நய்யாண்டி வரிகளையும் பகிர்ந்துள்ளார். அதில், "இன்னொரு தேசிய விருது வாங்கி இருக்க வேண்டிய 'ஆடுகளத்தில்' நான் நடிக்க முடியாமல் போனதும், 'சூதாடி' இடையில் நின்று போனதும்... இவையாவையும் ஈடு கட்டும் விதமாக ‘இட்லி கடை’யில் ஒரு சிறு மினி இட்லியாக கௌரவ வேடத்தில் நடிக்க, அவரே அழைத்த போது, மறுக்காமல் ஒப்புக் கொண்டேன். நேற்று டப்பிங் முடிந்தது. இரும்பினும் சக்தி கொண்ட இதயம், எறும்பினும் சுறுசுறுப்பான உழைப்பு, அகில இந்திய நட்சத்திரமாக தனுஷ் மிளிர்ந்ததை கண்கூடாக கண்டேன். ‘இட்லி கடை’ அக்டோபரில் வந்து விடும்! (வெந்து விடும் இல்லை!)" என பதிவிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: திருமணம் முடிஞ்ச கையோடு வெயிட் கூடியாச்சு..! குறைக்க இத மட்டும் தான் செய்தேன் - நடிகை கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்..!

இப்படி நகைச்சுவை கலந்து பாராட்டும் பார்வை, திரையுலகத்திலுள்ள நட்பையும், அனுபவங்களையும் வெளிப்படுத்துகிறது. இப்படி இருக்க படத்தின் இசை உரிமையை "சரிகம" நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஜி.வி. பிரகாஷின் இசை என்பதால், பாடல்கள் விரைவில் வெளியாகும் என்றும், அவை ரசிகர்களிடையே ட்ரெண்ட் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியான ப்ரோமோ மற்றும் போஸ்டர்கள் மூலம், ‘இட்லி கடை’ ஒரு காமெடி கலந்த சமூக படம் என்ற பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் ‘இட்லி கடை’ திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால், சுதந்திர தினத்தைத் தொடர்ந்து, விஜயதசமி மற்றும் பண்டிகை கால விடுமுறையை பயன்படுத்தி, படம் பெரிய அளவில் வெளியிடப்படவுள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகமும், தனுஷ் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் படமாக ‘இட்லி கடை’யை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

ஆகவே தனுஷ் - இயக்குநர், நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல முகங்களுடன் திகழும் அவர், தற்போது ‘இட்லி கடை’ மூலம் மீண்டும் இயக்கத்தின் அரங்கில் தன்னை நிலைநாட்டி இருக்கிறார். அருண்விஜயின் வில்லனாகும் முயற்சி, பார்த்திபனின் கௌரவ வேடம், ஷாலினி பாண்டே – தனுஷ் சகோதர உறவு, ஜி.வி.பிரகாஷின் இசை, சரிகம இசை உரிமை என இந்த படம் ஒரு முழுமையான பொழுதுபோக்கு அம்சமாக உருவாக இருக்கிறது. அக்டோபரில் ‘வந்து விடும்’ ‘இட்லி கடை’யை காண சினிமா ரசிகர்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
 

இதையும் படிங்க: என்ன மக்களே இசை வெளியீட்டு விழாவுக்கு தயாரா..! சுடசுட வெளியானது SK-வின் ‘மதராஸி’ பட அப்டேட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share