கிளாமரில் புதிய உச்சம்..! Cannes விழாவுக்கு அட்டகாசமாக வந்த பிரணிதா சுபாஷ்..!
Cannes விழாவுக்கு அட்டகாசமாக வந்த பிரணிதா சுபாஷை கண்டு மகிழ்ச்சியில் உறைந்தனர் ரசிகர்கள்.
நடிகை பிரணிதாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது தமிழ் திரையுலகில் 'சகுனி' திரைப்படத்தில் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்த பிரணிதா, "மாமா" என்ற ஒற்றை சொல்லால் கார்த்தியை மட்டும் அல்லாது பல இளசுகளின் மனதையும் கொள்ளை கொண்டார்.
இப்படத்தில் நடிகை ரோஜாவுக்கு மகளாக வரும் இவர், கார்த்திக்குடன் இணைந்து நீல நிற உடையில் நடனம் ஆடிய பாடலான "மனசெல்லாம் மழையே" என்ற பாடல் இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாத நினைவாக இருக்கிறது.
இதையும் படிங்க: சேலையை சரிய விட்டு... பின்னழகை தூக்கலாக காட்டி.. கவர்ச்சியில் கிறங்கடிக்கும் பிரணீதா!
இப்படி பட்ட நடிகை பிரணிதா, ஆரம்பத்திலிருந்து வடிவழகியாக இருந்து வருபவர். இவரது தோற்றத்தை பார்த்து இயக்குநர்களுக்கு பிடித்து போக 2010 ஆம் ஆண்டில் தெலுங்குத் திரைப்படமான போக்கிரி திரைப்படத்தில் முதன் முதலாக நடித்து அறிமுகமானார். அதன்பின் தென்னிந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தமிழில் 2017ம் ஆண்டு இயக்குனர் மகேந்திரன் ராஜமணி இயக்கத்தில் உருவான "எனக்கு வாய்த்த அடிமைகள்" என்ற திரைப்படத்தில் நடித்தார். இதில் இவருடன் நடிகர் ஜெய், கருணாகரன், காளி வெங்கட், நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் நவீன் ஆகியோர் நடித்து உள்ளனர். இத்திரைப்படம் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக இன்றுவரை பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக, இயக்குனர் ஓடம் இளவரசு இயக்கத்தில் அதர்வா, ரெஜினா கேசன்ட்ரா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆனந்தி, சூரி, ராஜேந்திரன் ஆகியோருடன் நடிகை பிரணிதா இணைந்து நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம் தான் "ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்".
இப்படத்தில் தன் திருமண பத்திரிக்கையை வைக்க அதர்வா மொட்டை ராஜேந்திரனுடன் தனது காதலிகளின் வீடுகளுக்கு செல்வார்.
பின் ரெஜினா, ப்ரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி என நான்கு நடிகைகளை கழட்டி விட்டு கடைசியில் அவர் யாரை கரம் பிடிப்பார் என்பது தான் கதையாக இருந்தது.
அடுத்து சங்கர் தயாள் இயக்கிய 'சகுனி' படத்தியலும் நடித்து இருப்பார். இப்படி இருக்க சிறுது காலமாக எந்தவித தமிழ் படங்களிலும் பிராணிதாவை காண முடிவதில்லை என்றாலும், தான் வடிவழகி என்பதால் அடிக்கடி அசத்தும் உடையில் போட்டோ ஷூட்களை நடத்தி தனது புகைப்படங்களை வெளியிட்டு பலரது மனதை கொள்ளை கொள்வார்.
அந்த வகையில் இந்தமுறை, நடிகை பிரணிதா சுபாஷ் கிளாமர் உடையில் Cannes திரைப்பட விழாவுக்கு சென்ற புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: Trisha Photos: சுகர் பேபியாக மாறி... வெள்ளை புடவையில் சூடேற்றிய த்ரிஷா!