×
 

பாலிவுட்டில் கலக்கி வரும் நடிகை ராஷி கண்ணா..! அடுத்த படம் யாருடன் தெரியுமா..!

நடிகை  ராஷி கன்னா பாலிவுட்டில் அடுத்த படத்தை பிரபல ஹீரோவுடன் நடிக்க இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழித் திரையுலகில் தன்னிகரற்ற நடிப்பும், அழகும், கவர்ச்சியும் கொண்ட ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷி கன்னா. 2025-ம் ஆண்டு இந்த நட்சத்திர நடிகையின் திரைப்பயணத்தில் ஒரு புதிய அதிரடி புரட்சியாகவே அமைகிறது. பல முக்கிய வாய்ப்புகளும், பிரபல ஹீரோக்களுடன் இணையும் சந்தர்ப்பங்களும் ஒன்றன் பின் ஒன்றாக இவருக்கு குவியத்தொடங்கியுள்ளன.

சமீபத்தில் வெளியாகிய தகவல்களின் அடிப்படையில், ராஷியின் இந்த ஆண்டின் வளர்ச்சிப் பாதை வேகமான மற்றும் பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இப்படி இருக்க தெலுங்கு சூப்பர்ஸ்டார் பவன் கல்யாணுடன் நடிக்கும் படமான  “உஸ்தாத் பகத் சிங்” திரைப்படத்தில் இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில், தேசிய உணர்வை தூண்டும் அரசியல் பின்னணியுடன் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ராஷி கன்னா முக்கிய கதாநாயகி ஆக நடிக்கவுள்ளார். பவன் கல்யாணுடன் இணையும் வாய்ப்பு என்பது, எந்த நடிகைக்கும் சாதாரண விஷயம் அல்ல. இந்த வெற்றிப் பாதையில் இன்னொரு முக்கிய கட்டமாக உருவாகவிருப்பது, பாலிவுட் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் ஆகிய பன்முகத்தன்மை கொண்ட பர்ஹான் அக்தரின் புதிய திரைப்படம். இதில் ராஷி கன்னா, முதல் முறையாக அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

முன்னதாக ராஷி கன்னா ‘மதர்கம்: ஏ லவ் ஸ்டோரி’ மற்றும் ‘ஷிம்லா மிர்ச்’ ஆகிய இரு பாலிவுட் படங்களிலும் நடித்திருந்தாலும், அவை வசூல் ரீதியிலேயே திரையரங்குகளில் வரவேற்பு பெற்றன. ஆனால் இந்தப் புதிய படத்தில் பர்ஹானுடன் இணையும் வாய்ப்பு, ராஷியின் ஹிந்தி திரையுலக பயணத்துக்கு முக்கியமான கட்டமாக அமைவதற்கான சாத்தியங்கள் உள்ளன. இந்த படத்தின் பின்புலம், கதை, இசை, எப்போது படம் ஆரம்பமாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், சமூக வலைத்தளங்களில் இந்த படம் குறித்து பரவும் தகவல் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து தன்னை நிலைநாட்டி வரும் ராஷி கன்னா, தற்போது சித்து ஜோன்னலகட்டா நடிக்கும் ‘தெலுசு கடா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: திருப்பதி ஏழுமலையானை தரிசித்த சூர்யா மற்றும் அவரது குடும்பம்.. பக்தர்கள் நெகிழ்ச்சி..!

இப்படத்தை இயக்கும் இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் ஒரு காதல்பூர்வமான குடும்ப அம்சங்களை கொண்ட படமாக உருவாகி வருகிறது. தீபாவளி பண்டிகை அக்டோபர் 17 அன்று இப்படம் வெளியாக உள்ளதால், சினிமா ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2025-ம் ஆண்டின் ஆரம்பம் முதல், பல மொழிகளில் பலதரப்பட்ட கதைகளில், பிரபல ஹீரோக்களுடன், பாலிவுட் மற்றும் தெலுங்கு சந்தையில் முக்கிய இடம் பிடிக்கும் வகையில் ராஷியின் பயணம் விரிவடைந்து வருகிறது. ஆகவே “ராஷி கன்னா என்ற பெயர், தற்போது ஒரு மொழிக்கோ, ஒரு திரையுலகிற்கோ மட்டும் சொந்தமானதாக இல்லை. அந்த பரிமாணங்களை மீறி ஒரு தேசிய நட்சத்திரமாக அவர் தன்னை நிலைநாட்டி வருகிறார்.. மேலும் பவன் கல்யாணுடன் அரசியல் திரில்லர், பர்ஹான் அக்தருடன் பாலிவுட் தரமான திரைப்படம், தெலுசு கடா என காதல் கதையுடன் தீபாவளி ரிலீஸ் என  இவை அனைத்தும் சேர்ந்து,

ராஷி கன்னாவின் அடுத்த கட்ட உயர்வை உறுதி செய்கின்றன. ரசிகர்கள் அவரின் பயணத்தில் அடுத்த அத்தியாயங்களை ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: நான் எந்த ட்ரெஸ் போட்டா உனக்கென்னா..வரம்பு மீறினால் அவ்வளவு தான்..! கொந்தளித்த நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share