×
 
☰

நடிகை ராதிகா வீட்டில் கொடூர கொலை..! கடற்கரையில் உடலை புதைத்த அவலம்.. என்ன நடந்தது.!

கொலைவழக்கில் நடிகை ராதிகாவின் அடிப்பட்டதிற்கான காரணம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடிகை ராதிகா சரத்குமார் வீட்டில் வேலை செய்து வரும் பெண்ணின் 19 வயது மகனை அவரது நண்பர்களே அடித்துக் கொலை செய்து கடற்கரை பகுதியில் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னைக்கு சென்று தாயை பார்த்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்ற இளைஞர் திடீரென மாயமான நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எழில்செல்வி. இவர் நடிகை ராதிகா சரத்குமார் வீட்டில் வீட்டு வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவரது மகன் பிரசாந்த் (19). இவர் அப்பகுதியில் டைல்ஸ் ஒட்டும் கூலி வேலை செய்து வந்துள்ளார். குடும்பத்தின் வறுமையை போக்குவதற்காக வேலை செய்து வந்த பிரசாந்த், நண்பர்களுடன் பழகி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த 27-ஆம் தேதி சென்னையில் இருக்கும் தனது தாயாரை பார்க்கச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு பிரசாந்த் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. மேலும், அவரை தொடர்புகொள்ள முயற்சித்தும் எந்த தகவலும் கிடைக்காததால் குடும்பத்தினர் பதற்றமடைந்தனர்.

இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டில் திடீர் பரபரப்பு… டாஸ்க்கின்போது மயங்கி விழுந்த அக்ஷிதா.!! கலங்கிப்போன அவினாஷ் – இன்றைய புரொமோவில் அதிர்ச்சி சம்பவம்..!

இதனால் அதிர்ச்சியடைந்த பிரசாந்தின் தந்தை ரமேஷ், தனது மகனை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடமும் விசாரித்துள்ளார். இருப்பினும் பிரசாந்த் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, தனது மகனை காணவில்லை என புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, பிரசாந்தின் மாயம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவரது நண்பர்களிடமும் விசாரணை நடத்தினர்.

அப்போது, சிறுவத்தூர் பகுதியைச் சேர்ந்த தேவராசு (18), தினேஷ் (23) ஆகிய இருவரையும் பிடித்து புதுப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பிரசாந்த், தேவராசு, தினேஷ் ஆகிய மூவரும் நண்பர்கள் என்பதும், அவர்களுக்குள் ஏற்கனவே சில நாட்களாக தகராறு இருந்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மேலும் அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தேவராசு மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் பிரசாந்தை பொன்னேரி கடற்கரை பகுதிக்கு வரவழைத்துள்ளனர். அங்கு ஏற்பட்ட தகராறில் பிரசாந்தை இருவரும் அடித்துக் கொலை செய்துவிட்டு, அவரது உடலை கடற்கரை பகுதியில் புதைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

தாயை பார்க்கச் செல்வதாகக் கூறிவிட்டு சென்ற இளைஞர், நண்பர்களால் கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அவரது குடும்பத்தினரை நிலைகுலையச் செய்துள்ளது. நண்பர்களுக்குள் ஏற்பட்ட முன்விரோதம் ஒரு இளைஞரின் உயிரைப் பறிக்கும் அளவிற்கு சென்றிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசாந்த் கொலை செய்யப்பட்டதற்கான உண்மையான காரணம் என்ன? இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு போலீசாரின் மேலதிக விசாரணைக்குப் பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும். பண்ருட்டி பகுதியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கிளாமர் உடையில் தேவதை போல வந்த நடிகை நஸ்ரியா..!! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share