பயமுறுத்த வரும் புதிய திரில்லர் திரைப்படம்..! தமன்னாவுக்கு போட்டியாக களமிறங்கும் கிளாமர் நடிகை..!
தமன்னாவுக்கு போட்டியாக புதிய திரில்லர் திரைப்படத்தில் அவருடன் கிளாமர் நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல ஹீரோயின்கள் தமன்னா மற்றும் நோரா ஃபதேஹி ஒரே படத்தில் இணைந்திருப்பது தற்போது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏக்தா கபூர் ஒழுங்கு செய்யும் 'ராகினி எம்எம்எஸ் 3' திரைப்படத்தில் இவர்கள் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே ரசிகர்கள் மத்தியில் இந்த இணைப்பு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ராகினி எம்எம்எஸ் என்பது ஏற்கனவே திரையில் வெளிவந்து வெற்றி பெற்ற திகில், திரில்லர் சார்ந்த திரைப்படங்களின் தொடராகும். இதன் முதல் பாகம் 2011-ல் வெளியானது.
இரண்டாவது பாகம் 'ராகினி எம்எம்எஸ் 2' 2014-ல் சன்னி லியோன் நடிப்பில் வெளியானது. இப்படி இருக்க தற்போது இந்த தொடரின் மூன்றாவது பாகமான 'ராகினி எம்எம்எஸ் 3' படத்துக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் தமன்னா, தென்னிந்திய திரையுலகிலும், பாலிவுட்டிலும் வெற்றிகரமான நடிகையாக திகழ்கிறார்.. அண்மையில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் தமன்னா நடித்துள்ள படம் பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. இதில் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 போன்ற படங்கள் தமன்னாவின் கதைகளை தேர்ந்தெடுக்கும் திறமையை நிரூபித்தன. இந்நிலையில், திகில் கலந்த தைரியமான கதையம்சம் கொண்ட 'ராகினி எம்எம்எஸ் 3' திரைப்படத்தில் அவர் கமிட் ஆகியுள்ள தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, தமன்னாவிற்கு ஒரு புதிய முயற்சி என்றும், அவரை புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கான வாய்ப்பு என்றும் பாலிவுட் ஊடகங்கள் பாராட்டுகின்றன. இப்படி இருக்க, இப்படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நோரா ஃபதேஹி இணைந்துள்ளார். கனடாவில் பிறந்து இந்தியாவில் பிரபலமான நடிகையாக உயர்ந்துள்ள நோரா, தனது நடனத் திறனாலும், ஸ்டைலிஷ் தோற்றத்தாலும் இளைஞர்களிடம் பெரும் ரசிகர்களைக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் ஸ்டிரீட் டான்சர் 3டி, பூஜ், தைங் காட், மட்கோன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதனுடன், தற்போது ராகவா லாரன்ஸுடன் இணைந்து ‘காஞ்சனா 4’ படத்தில் நடித்து வருகிறார். இது இந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ள பெரிய புராஜெக்ட்டாக உள்ளது. இந்த சூழலில் தமன்னாவும் நோராவும் இதுவரை ஒரே படத்தில் இணைந்து ஒரு காட்சியில் கூட நடித்ததில்லை. ஆனால், இருவரும் பிரபலமான பாகுபலி: தி பிகினிங்கில் இடம் பெற்றிருந்தனர். தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். நோரா ஒரு சிறப்பு பாடலுக்கு மட்டும் நடனமாடினார். இப்போது, 'ராகினி எம்எம்எஸ் 3' படத்தில் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைவது, ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கப்போகிறது.
இதையும் படிங்க: டார்கெட் கம்பிளிட் பண்ண நேரம் வந்தாச்சு..! கூலி படம் வசூலை பார்த்து திகைத்து போன ரசிகர்கள்..ஹாப்பி-யில் படக்குழு..!
இப்படி இணைந்து நடிக்கும் காட்சிகளில், இருவருக்கும் இடையே எதிர்பார்க்கப்படும் நடிப்பு, ஸ்டைல் மற்றும் ஸ்கிரீன் ப்ரசென்ஸ் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இப்படியாக படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகின்றது. படத்தின் முதல் போஸ்டர், டீசர் ஆகியவை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படம் ஓடிடி பிளாட்ஃபாம்களிலும் திரையரங்குகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ப்ரோமோ வெளியாகும் தருணங்களில், இந்த ஹைப் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே தமன்னா மற்றும் நோரா ஃபதேஹி ஆகிய இருவரும் தனித்துவமான ஸ்டைல் மற்றும் ரசிகர்கள் ஆதரவை கொண்டவர்கள்.
அவர்கள் இருவரும் இணைந்து 'ராகினி எம்எம்எஸ் 3' போன்ற திகில் படத்தில் நடிப்பது, அந்த சினிமா ப்ராஞ்சைசுக்கு ஒரு புதிய பரிமாணம் வழங்கக்கூடிய ஒன்று. இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வரவுள்ளதால், அதுவரை இந்த இரட்டை நட்சத்திரத்தின் காம்போவை பற்றிய காத்திருப்பும், எதிர்பார்ப்பும் மேலும் அதிகரிக்கவே போகிறது.
இதையும் படிங்க: கர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகை..! சினிமா முதல் அரசியல் வட்டாரம் வரை ஹாப்பி..!