×
 

களமிறங்கும் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா..! ஜெயிலர் 2-வில் காத்திருக்கும் ட்விஸ்ட்..!

ஜெயிலர் 2 படத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா இணைந்துள்ளார்.

ரஜினியின் மிக சிறந்த படம் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு மரண மாஸ் கொடுத்த படம் ஜெயிலர். சன் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் படைப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. அதற்கு காரணம் நெல்சன் திலீப் குமாரின் படைப்புதான். இதில் அனிரூத் அவர்களின் இசை மக்களை மட்டுமல்லாது ரஜினியையே கவரும் அளவிற்கு இருந்தது. குறிப்பாக "அலப்பறை கிளப்புவோம், காவாலையா" போன்ற பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க வைத்தது.

இப்படத்தில், தன் மகனுக்காக மீண்டும் போலீஸ் மூளையை பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பதை வில்லனுக்கு தெளிவாக காண்பிப்பார். மேலும் வீட்டில் பொட்டி பாம்பாய் அடங்கி இருந்த ஜெயிலர் தனது மகனை கண்டுபிடிக்கும் போராட்டத்தில், தனது மனைவி கதாபாத்திரத்தில் நடித்த நீலாம்பரியையே (ரம்யாகிருஷ்ணன்) அவர் வாயால் "போதும் இதோட கொஞ்சம் நிறுத்திக்கொள்ளலாமே" என்று சொல்லும் அளவிற்கு நடிப்பில் படையப்பாவை கண்முன் கொண்டு வந்தார் ரஜினி. மேலும் இப்படத்தில் "பாரதியார் என்ன சொல்லி இருக்காரு தெரியுமா" என ஒவ்வொரு முறையும் கூறி அனைவரையும் சிரிக்க வைத்து இருப்பார் யோகி பாபு. 

இதையும் படிங்க: "கதை சொல்ல வேண்டாம் ரஜினியுடன் நடித்தால் போதும்"..! கூலி படத்தின் அனுபவத்தை பகிர்ந்த உபேந்திரா..!

இதை தொடர்ந்து, படம் ரிலீஸ் ஆகி, ரூ600 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றியை தேடி தந்தது. இதனால் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கும். படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த இசையமைப்பாளர் அனிருத் அவர்களுக்கும் "போர்ஷே கேயென்" ரக (Porsche cayenne) காரையும், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களுக்கு BMW X7 காரையும் பரிசாக அளித்தார்.சன் பிச்சர்ஸ் நிறுவனர் கலாநிதிமாறன்.

இதனை அடுத்து, ஜெயிலர் திரைப்படம் பிப்ரவரி 21ம் தேதி அன்று  ஜப்பானில் வெளியாகி தனது வெற்றியை அங்கும் நிலைநாட்டியது. இந்தநிலையில் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலாக இருக்கும் இந்த வேளையில் நடிகர் ரஜினிகாந்த் தனக்குண்டான பாகங்களை நடித்து முடித்துள்ளார். மேலும் இப்படத்தை குறித்து பேசிய யோகி பாபு முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அருமையாக உள்ளது என தெரிவித்தார்.

பின்னர் சிவராஜ்குமாரும் இப்படத்தில் இணைந்துள்ளார். மோகன்லாலிடமும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பேசிவருகிறார். இந்த சூழலில் இப்படத்தில் புதியதாக கெஸ்ட் ரோலில் இணைந்திருக்கிறார் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்னன். அவர் வரும் சில நிமிட காட்சிகளுக்கு ரூ.50 கோடி ரூபாய் சம்பளமாகவும் கேட்டுள்ளார். இப்படி இருக்க ஜெயிலர் 2வில் பாலைய்யா வருவதால் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
 

இதையும் படிங்க: அடுத்த ஜென்மத்தில் பழிவாங்க வந்த நீலாம்பரி..! ஜெயிலர் 2 படப்பிடிப்பில் செல்பி எடுத்த ரம்யா கிருஷ்ணன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share