சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டார்..! புகைப்படத்துடன் லோகேஷ் கனகராஜ் வாழ்த்து..!
லோகேஷ் கனகராஜ் 'கூலி' பட புகைப்படத்துடன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்களை பதிவு செய்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் கிங்காகவும், இந்திய சினிமாவின் பெருமையாகவும் விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரைத்துறையில் தனது 50 வருட பயணத்தை நிறைவு செய்துள்ளார். கடந்த 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'அபூர்வ ராகங்கள்' படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமான ரஜினிகாந்த், அதே நாளில் 2025 ஆகஸ்ட் 15 அன்று திரைத்துறையில் தனது 50வது வருடத்தை கடந்து மைல்கல்லாகக் கொண்டாட இருகிறார். இதனை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் இருந்து சினிமா வட்டாரங்கள் வரை, திரை உலகம் முழுவதும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பலரும் அவரின் சாதனைகளைப் புகழ்ந்து, வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், தற்போது சூப்பர் ஸ்டாருடன் 'கூலி' திரைப்படத்தில் பணியாற்றிய இயக்குநர் லோகேஷ் கனகராஜும், தனது உருக்கமான வாழ்த்தை தெரிவித்திருக்கிறார். இதனை குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது எக்ஸ்தள பக்கத்தில், மனதை நெகிழ வைக்கும் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "என்னுடைய திரைப்பயணத்தில் 'கூலி' எப்போதும் ஸ்பெஷலான படமாக இருக்கும். ரஜினிகாந்த் சார்… உங்களுடன் இருந்த தருணங்களை எப்போதும் என்னால் மறக்க முடியாது. எங்களை ஊக்குவித்து கொண்டே இருப்பதற்காக நன்றி" என பதிவிட்டுள்ளார். இது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் லோகேஷ் மற்றும் ரஜினி கூட்டணியின் படத்தை மட்டுமல்ல, அவர்களுக்கிடையிலான உணர்வுப் பிணைப்பையும் பாராட்டி வருகின்றனர். இப்படிப்பட்ட ‘கூலி’ திரைப்படம், ரஜினிகாந்தின் 171வது படமாக உருவாகி உள்ளது. ஒரு முழு ஆக்ஷன்-கமர்ஷியல் திரைபடமான இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படம் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரு பக்கம் ரஜினி பேச்சு.. மறுபக்கம் அஜித் குமார் அறிக்கை..! களைகட்டும் இணையதளம்..!
இளைய தலைமுறை இயக்குநர்களுடன் ரஜினிகாந்த் இணையும் முயற்சி, தமிழ் சினிமாவுக்கே ஒரு புதிய வழி காட்டும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இத்தனை பெரிய நட்சத்திரத்துடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது, லோகேஷுக்கே ஒரு முக்கியமான அனுபவமாக அமைந்தது. அவரின் டீம் இந்த படத்திற்காக அதிகமாக உழைத்தது. பொதுவாகவே, ரஜினிகாந்த் தன்னுடன் பணியாற்றும் புதிய தலைமுறையினருக்கு உற்சாகம், ஊக்கம் வழங்குபவராக உள்ளார். யாரையும் மிரட்டும் முனையில் பார்ப்பதில்லை. அதன் மாற்றாக, ஒருவருடைய மேலான படைப்புகளை உருவாக்க ஊக்குவிக்கிறார். இதையும் தனது வாழ்த்து பதிவில், "எங்களை ஊக்குவித்து கொண்டே இருப்பதற்காக நன்றி" என லோகேஷ் குறிப்பிட்டிருப்பது, ரஜினிகாந்தின் பண்பை எடுத்துக்காட்டுகிறது. ரஜினிகாந்தின் 50 வருட திரைப்பயணத்தை முன்னிட்டு, இயக்குநர் மணிரத்னம், ஷங்கர், கார்த்திக் சுப்பராஜ், பா.இரஞ்சித், நடிகர்கள் கமல்ஹாசன், தனுஷ், அஜித், விஜய் சேதுபதி, சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பலர் நேரில் மற்றும் சமூக வலைதளங்களின் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே போல், அரசியல் பிரபலங்களாகவும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் தற்போது "#50YearsOfSuperstarRajinikanth", "#Coolie", "#Thalaivar171" போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கின்றன. ரஜினி ரசிகர்கள் அவருடைய பழைய படங்களின் புகைப்படங்கள், வீடியோக்கள், புகழ்தல்கள் என இணையத்தை கணக்கை வருகின்றனர். அத்துடன், 'கூலி' படம் நாளை வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் காத்திருக்கும் சூழ்நிலை மிக உச்சத்திலுள்ளது. இந்த திரைப்படம் ரஜினியின் 50 ஆண்டுப் பன்முகத்தன்மையை கொண்டாடும் விதமாக, பல்வேறு அத்தியாயங்களை உள்ளடக்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியின் 50 ஆண்டுகள் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையிலும், கலைஞனின் பயணத்திலும் அற்புதமான சாதனை. அந்த சாதனையை நாடு முழுவதும் கொண்டாடும் இந்த தருணத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறும் வார்த்தைகள், ரஜினிகாந்தின் பெருமையை, அவர் இளைய தலைமுறைக்கு ஊக்கமளிக்கும் குணத்தை, அவரது அக்கறையை அழகாக பிரதிபலிக்கின்றன.
“கூலி எப்போதும் ஸ்பெஷலாக இருக்கும்” என்ற வாசகம், ஒரு இயக்குனர் மனதிலிருந்த நன்றியுணர்வும், ஒரு சூப்பர் ஸ்டாரின் பெருமையும், ஒரு வரலாற்று தருணத்துக்கும் இடையே இணைப்பு ஆகும்.
இதையும் படிங்க: AFTER 36 YEARS... 'A' சான்றிதழுடன் திரைக்கு வருகிறது ரஜினியின் 'கூலி'..!