அறிவாளிகள் பலர் இருக்கும்பொழுது என்ன ஏன் கூப்டீங்க?..! “வேள்பாரி” நூல் வெற்றி விழாவில் ரஜினிகாந்த் நகைச்சுவை பேச்சு..!
“வேள்பாரி” நூல் வெற்றி விழாவில் நடிகர் ரஜினிகாந்த் நகைச்சுவையாக பேசியது பலரது மனதையும் கவர்ந்து உள்ளது.
பாரதி புத்தக நிலையத்தின் விகடன் பிரசுரத்தில் வெளியாகிய சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய “வீரயுக நாயகன் வேள்பாரி” நூல், தமிழகத்தில் சாதனையாக ஒரு லட்சம் பிரதிகளை விற்று இலக்கிய உலகத்தில் வரலாற்று மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில் விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில், நூலின் வெற்றியைச் சுட்டிக்காட்டும் "வேள்பாரி 1,00,000" எனும் சின்னத்தை, நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டு, விழாவுக்கு மேலும் சிறப்பை சேர்த்தார். மேலும், நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தனது பாணியில் தன்னம்பிக்கையுடனும் நகைச்சுவையுடனும் கலந்து பேசினார்.
அதன்படி, " நிறைய சொல்லணும் என அறிவு சொல்லும். எப்படிப் பேசணும் என திறமை சொல்லும். எவ்வளவு பேசணும் என அரங்கம் சொல்லும். எதைப் பேசணும், பேசக் கூடாது என அனுபவம் சொல்லும்" என அவர் பேசத்தொடங்க அரங்கம் முழுவதும் கரகோஷம் எழுந்தது, தொடர்ந்து பேசிய ரஜினி, " ஒரு நிகழ்ச்சியில் ஒல்டு ஸ்டூடன்ட்ஸ் பற்றி பேசினேன். அரங்கத்தில் அனைவரும் சிரிச்சதால, என்ன பேசணும்னு நினைச்சதையே மறந்துட்டேன். இந்த நூலுக்காக சு.வெங்கடேசன் என்னை அணுகிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உண்மையை சொல்ல வேண்டுமானால் விகடனில் என்னை அதிகமாக விமர்சித்ததே இவர்கள் தான். ஆனாலும் நட்பில் எந்த விதமான விரிசலும் எங்களுக்குள் இல்லை. இது தான் ஒரு உயர்ந்த மனப்பான்மை" என பேசிய அவர், எழுத்தாளர் சு.வெங்கடேசனுக்கு தனது பாராட்டை தெரிவித்தார்.
மேலும், "சிவக்குமார், கமல்ஹாசன் போன்ற சிறந்த அறிவாளிகள் இருக்கும்போது, என்னை ஏன் இந்த விழாவுக்கு கூப்பிட்டாங்க? 75 வயசுலயும் கூலிங் கிளாஸ் போட்டு ஸ்லோ மோஷன்ல நடந்து வர என்ன ஏன்பா விழாவுக்கு கூப்டீங்க? " எனக் கேட்டு ரசிகர்களை சிரிப்பு மழையில் திக்குமுக்காட வைத்தார். பின் " இது ஒரு திரைப்படமாக உருவாகும் என நம்புகிறேன். அந்த படத்தை பார்த்த பிறகு வாசிக்கலாம் என ஆசையே எனக்குள் வந்தது. எனது ஓய்வுக்காலத்தில் நல்ல புத்தகங்களை வாசிக்க அதிகப்படியான விருப்பம் உள்ளது. அதற்காகவே வேள்பாரியை எடுத்துச் செஞ்சிருக்கேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நண்பர்கள் முதல் சமூக வலைதளம் வரை அனைத்தும் கட்..! நமக்கு படம் தான் முக்கியம் - லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்..!
ரஜினியை தொடர்ந்து பேசிய நூலாசிரியர் சு.வெங்கடேசன், “வேள்பாரி என்பது வெறும் வரலாற்று கதையல்ல. அது தமிழர் மரபு, போராட்டம், பசுமை, சமத்துவம் ஆகியவற்றின் திரட்டு. தமிழ் இலக்கியத்திற்கே இது ஒரு பெருமை” எனக் குறிப்பிட்டார். வேள்பாரி திரைப்படமாக உருவாகும் வேலைகள் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கதாச்சாரம், வரலாற்று ஆதாரங்கள், நவீன திரைக்கதைக் கட்டமைப்புகள் உள்ளிட்ட பணிகள் விரைவில் தொடங்கியுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் இவ்விழா, தமிழின் வீர சரித்திரத்தை இளைஞர்களுக்கு உணர்த்தும் விழிப்புணர்வாகவும், இலக்கிய வெற்றியின் கலையரங்க களமாகவும் அமைந்தது. இந்த வெற்றிக்குக் காரணமான வாசகர்களுக்கும், இலக்கியத்தை நம்பும் வெளியீட்டாளர்களுக்கும் ரஜினிகாந்த் நன்றியுடன் வாழ்த்துகளை தெரிவித்தார். நிகழ்ச்சி முழுவதும் எழுத்து, சினிமா, சமூக விழிப்புணர்வு ஆகிய அனைத்தும் ஒரே மேடையில் கூடி தமிழரின் பெருமை மீண்டும் ஒலிக்கச் செய்யும் வகையில் அமைந்தது.
இந்த நிகழ்வில் நடிகர் சிவக்குமார், இயக்குநர் பா.ரஞ்சித், கவிஞர் யுகபாரதி, சினிமா மற்றும் இலக்கிய உலகின் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மனுஷன் புடிச்சிட்டாப்புல.. சூப்பர் ஸ்டார் ரஜினியையே பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வைத்த பிரபலம்..!